5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Jio : பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஜியோவின் 3 சிறந்த ரீச்சார்ஜ் திட்டங்கள்.. சிறப்பு பலன்கள் என்ன?

Recharge Plans | இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ பட்ஜெட் விலையிலான ரீச்சார்ஜ் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களில் 5ஜி வேகத்துடன் இணைய வசதி வழங்கப்படுவதால் இவை சிறந்த திட்டங்களாக உள்ளன.

Jio : பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஜியோவின் 3 சிறந்த ரீச்சார்ஜ் திட்டங்கள்.. சிறப்பு பலன்கள் என்ன?
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Updated On: 13 Dec 2024 22:06 PM

இந்தியாவில் சமீப காலமாகவே தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ரீச்சார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தி வருகின்றன. குறிப்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ப்ரீ பெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு திட்டங்களின் விலையை அதிரடியாக உயர்த்தின. இந்த திடீர் விலை உயர்வு காரணமாக அதன் பயனர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதன் காரணமாக, லட்சக்கணக்கான பயனர்கள் தங்கள் மொபைல் எண்ணை அரசின் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு மாற்ற தொடங்கினர். ஆனால், தற்போது அதற்கெல்லாம் தேவையில்லை. காரணம், இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ பட்ஜெட் விலையிலான ரீச்சார்ஜ் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களில் 5ஜி வேகத்துடன் இணைய வசதி வழங்கப்படுவதால் இவை சிறந்த திட்டங்களாக உள்ளன. அவை என்ன திட்டம், அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பவை குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Near Me Google Search : ராம் மந்திர் முதல் காஃபி ஷாப் வரை.. 2024-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இடங்கள் இவைதான்!

ரூ.199-க்கான ஜியோ ரீச்சார்ஜ் திட்டம்

ஜியோவில் வழங்கப்படும் பட்ஜெட் விலையான ரீச்சார்ஜ் திட்டத்தில் இந்த ரூ.199-க்கான திட்டம் முதலாவதாக உள்ளது. ஜியோவின் இந்த ரூ.199-க்கான ரீச்சார்ஜ் திட்டத்தின் மொத்த வேலிடிட்டி நாட்கள் 18 ஆகும். இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதன்படி மொத்தமாக 27 ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் வேலிடிட்டி முழுவதும் அல்லிமிடெட் வாய்ஸ் கால்களை பேசவும் அனுமதி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தினமும் இலவசமாக 100 குறுஞ்செய்திகள் அனுப்பும் வசதியும் உள்ளது. அதுமட்டுமன்றி, இந்த திட்டத்தில் கூடுதலாக ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் உள்ளிட்ட சேவைகளையும் பயனர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Google Search 2024 : ஐபிஎல் முதல் ரத்தன் டாடா வரை.. 2024-ல் இந்தியர்கள் அதிகம் தேடிய டாப் 10 விஷயங்கள் இவைதான்!

ரூ.239-க்கான ஜியோ ரீச்சார்ஜ் திட்டம்

ஜியோவில் பட்ஜெட் விலையில் வழங்கப்படும் ரீச்சார்ஜ் திட்டத்தில் இரண்டாவதாக உள்ளது இந்த ரூ.239-க்கான ப்ரீபெய்டு திட்டம். இந்த ரூ.239-க்கான ரீச்சார்ஜ் திட்டத்தின் மொத்த வேலிடிட்டி நாட்கள் 22 ஆகும். இந்த திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதாவது, இந்த திட்டத்திற்கு மொத்தமாக சுமார் 33 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதுபோக, திட்டம் முடியும் வரை அன்லிமிடெட் வாய் கால்கள் மற்றும் தினமும் இலவசமாக 100 குறுஞ்செய்திகளை அனுப்பும் வசதியும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் கூடுதலாக ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது குறுப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Instagram : மெசேஜ் ஸ்கெடியூல் ஆப்ஷனை அறிமுகம் செய்த இன்ஸ்டாகிராம்.. சிறப்பு அம்சங்கள் என்ன?

ரூ.299-க்கான ஜியோ ரீச்சார்ஜ் திட்டம்

ஜியோ நிறுவனம் வழங்கும் பட்ஜெட் விலையிலான ரீச்சார்ஜ் திட்டத்தில், அதாவது ரூ.300-க்கு குறைவாக உள்ள திட்டத்தில் மூன்றாவதாக இடம் பெற்றுள்ளது ரூ.299-க்கான ரீச்சார்ஜ் திட்டம். இந்த திட்டத்தின் மொத்த வேலிடிட்டி நாட்கள் 28 ஆகும். இந்த திட்டத்திற்கு ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படும் நிலையில், மொத்தமாக இந்த திட்டத்திற்கு 48 ஜிபி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களுக்கு அனுமதி வழங்கப்படும் நிலையில், ஒரு நாளைக்கு சுமார் 100 குறுசெய்திகளை இலவசமாக அனுப்பும் வசதியும் உள்ளது. அது தவிர, இந்த திட்டத்தில் கூடுதல் சிறப்பாக ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் உள்ளிட்ட சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Latest News