5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Aadhaar PAN Link Status: உங்கள் ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைக்கப்பட்டுள்ளதா.. செக் பண்ணுங்க.. இல்லனா சிக்கல்!

Link Status | ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க 2023, ஜூன் 30 ஆம் தேதியை கடைசி தேதியாக அறிவித்தது. அதன்படி பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்கவில்லை என்றால் 2023, ஜூலை 1 ஆம் தேதி முதல் பான் கார்டு முடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Aadhaar PAN Link Status: உங்கள் ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைக்கப்பட்டுள்ளதா.. செக் பண்ணுங்க.. இல்லனா சிக்கல்!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Updated On: 05 Aug 2024 18:46 PM

ஆதார், பான் லிங் : ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க 2023, ஜூன் 30 ஆம் தேதியை கடைசி தேதியாக அறிவித்தது. அதன்படி பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்கவில்லை என்றால் 2023, ஜூலை 1 ஆம் தேதி முதல் பான் கார்டு முடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், வருமான வரி செலுத்துபவர்களுக்கு, வருமான வரித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, 2024, மே 31 ஆம் தேதிக்குள் ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்கவில்லை என்றால் பிரிவு 206AA மற்றும் பிரிவு 206CC படி, வரி பிடித்தம் செய்யப்படும் என்று அறிப்விக்கப்பட்டது. இந்த அறிவிப்புகளை தொடர்ந்து பலரும் தங்களது ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைத்துள்ளனர். ஆனால் பலருக்கு தங்களது ஆதார் கார்டு பான் கார்டுடன் இணைத்திருக்கிறதா, இல்லையா என்பதே குழப்பமாக உள்ளது. உங்களது ஆதார் கார்டு, பான் கார்டுடன் இணைந்திருக்கிறதா என்பதை எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

உங்கள் ஆதார் கார்டுடன், பான் கார்டு இணைக்கப்பட்டுள்ளதா?

உங்கள் பான் கார்டு முடக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணையுங்கள் என்று தொடர்ந்து அறிவிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒருவேளை நீங்கள் ஆதார் கார்டுடன், பான் கார்டை இணைக்கவில்லை என்றால், உங்கள் பான் கார்டு முடக்கப்படுவதுடன், நீங்கள் ரூ.1,000 அபராதமும் செலுத்த வேண்டியது வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 9 சிம் கார்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால் சிறை தண்டனை.. ரூ.2,00,000 அபராதம்.. இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்ப்பது எப்படி?

  1. அதற்கு முதலில் வருமான வரித்துறையின் Income Tax வருமான வரி செலுத்தும் போர்டலுக்கு செல்ல வேண்டும்.
  2. அதில் லிங்க் ஆதார் ஸ்டேடஸ் என்பதை கிளிக் செய்ய வேண்டும்
  3. பிறகு பான் மற்றும் ஆதார் எண்ணை பதிவிட்டு, View Link Aadhaar Status என்பதை கிளிக் செய்யவும்.
  4. அப்போது உங்கள் ஆதார் கார்டு, பான் கார்டுடன் லிங் செய்யப்பட்டிருந்தால், ஆதார் எண் திரையில் தோன்றும்.
  5. ஆதார் கார்டு உங்கள் பான் கார்டுடன் லிங் செய்யப்படவில்லை என்றால் Link Aadhaar Status என திரையில் தோன்றும்.
  6. ஒருவேளை நீங்கள் ஆதார் கார்டை, பான் கார்டுடன் இணைப்பதற்கான பணிகளை மேற்கொண்டிருந்தால் சில நாட்கள் கழித்து பார்க்கும்போது நிலை என்னவென்று தெரியும்.

இதையும் படிங்க : Ration Card : ரேஷன் கார்டில் இறந்தவர் பெயரை நீக்க வேண்டுமா.. அலைய தேவையில்லை.. ஆன்லைனில் ஈசிய பண்ணிடலாம்!

மேற்குறிப்பிட்ட நடைமுறைகள் அல்லது குறுஞ்செய்தி மூலமும் நீங்கள், உங்கள் ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News