Madurai : மதுரை வெள்ள பாதிப்பு.. ரூ.11.9 கோடிக்கு புதிய திட்டத்தை அறிவித்த முதலமைச்சர்!
Flood | தமிழகத்தில் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் இடைவிடாது கனமழை பெய்தது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் மதுரை மாநகரமே கடும் சவால்களை எதிர்க்கொண்டது. குறிப்பாக சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், மதுரை வெள்ள பாதிப்பின் தொடர்ச்சியாக ரூ.11,9 கோடி மதிப்பில் புதிய திட்டம் ஒன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க : Aavin : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு களைக்கட்டிய வியாபாரம்.. ரூ.115 கோடி வருமானம் ஈட்டிய ஆவின்!
தமிழகத்தில் தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க : Tamilnadu Weather Alert: தீபாவளில் நாளில் சென்னை உட்பட 8 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை.. வானிலை மையம் அலர்ட்!
குறிப்பாக மதுரையில் உள்ள கண்மாய்களில் நீர் நிரம்பியது. இதன் காரணமாக குறிஞ்சி நகர், முல்லை நகர் மற்றும் சர்வேயர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழை நீர் புகுந்தது. இதனால் தங்க இடம் இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் நேரில் சந்தித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இந்த நிலையில் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மதுரை மாநகருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அசத்தலான புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க : Sivakasi Crackers:களைகட்டிய விற்பனை.. ரூ.6000 கோடிக்கு பட்டாசு விற்பனை!
மதுரையில் ஆய்வு மேற்கொண்டு முதலமைச்சர்
மதுரை வெள்ளத்திற்கு பிறகு, மதுரைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வு கூட்டத்தின் போது, மழையால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட செல்லூர் பகுதி மீண்டும் அத்தகைய பாதிப்புகளை சந்திக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் செய்யப்பட்டது. அதன்படி, மதுரை, செல்லூர் பகுதியில் 290 மீட்டர் நீளத்திற்கு சிமெண்ட் கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டது.
இதையும் படிங்க : Viral Video: ஹரியானாவில் சாலையில் பறந்த வாகனங்கள்.. மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
ரூ.11.9 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்த அறிவிப்பு
இந்த நிலையில் மதுரை, செல்லூர் பகுதியில் மழை, வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில் 290 மீட்டர் நீளத்திற்கு சிமெண்ட் கால்வாய் அமைக்க ரூ.11.9 கோடி ரூபாய் வழங்கி உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் அந்த பகுதி மக்கள் பெரிதும் பயணடைவார்கள் என்று அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.