5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

இன்ஸ்டாகிராம் சிக்கலை கண்டுபிடித்த கோவை மாணவர்.. மெட்டா நிறுவனம் கொடுத்த வெகுமதி!

இன்ஸ்டாகிராம் செயலியில் பயனாளர்கள் கமெண்ட் செய்யும் பகுதியில் சைபர் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும், இதனால் பயனாளர்கள் மட்டுமின்றி சம்பந்தப்பட்ட செயலியின் உச்சபட்ச அதிகாரம் கொண்டவர்கள் கூட அந்தப் பகுதியை அணுகவும், காணவும் முடியாத அளவிற்கு செய்யும் சிக்கலை ஏற்படுத்தும் பிரச்னை ஒன்றை பிரதாப் மெட்டா நிறுவன கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் சிக்கலை கண்டுபிடித்த கோவை மாணவர்.. மெட்டா நிறுவனம் கொடுத்த வெகுமதி!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 11 Nov 2024 11:00 AM

சமூகவலைத்தள சிக்கல்: இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் சைபர் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு மாணவர் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து அவருக்கு மெட்டா நிறுவனம் பாராட்டு தெரிவித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட பிறகு அனைவரது கையிலும் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி தொடர்ந்து அசுர பாதையை நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கும் நிலையில் அதில் அவ்வப்போது சைபர் தாக்குதலும் நடந்து கொண்டு இருக்கின்றன.  அதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகளின் தொழில்நுட்பத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.

இதனிடைய கோவையில் பொறியியல் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்து வரும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பிரதாப் என்ற மாணவர் இன்ஸ்டாகிராம் செயலியில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பாதிப்பை சுட்டிக்காட்டி மெட்டா நிறுவனத்துக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். கடந்த ஜூலை மாதம் அவர் இதை நிகழ்த்தியுள்ளார்.

Also Read: CM MK Stalin: திமுக வளர்வது பிடிக்கல.. விஜய்யை மறைமுகமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

இன்ஸ்டாகிராம் செயலியில் பயனாளர்கள் கமெண்ட் செய்யும் பகுதியில் சைபர் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும், இதனால் பயனாளர்கள் மட்டுமின்றி சம்பந்தப்பட்ட செயலியின் உச்சபட்ச அதிகாரம் கொண்டவர்கள் கூட அந்தப் பகுதியை அணுகவும், காணவும் முடியாத அளவிற்கு செய்யும் சிக்கலை ஏற்படுத்தும் பிரச்னை ஒன்றை பிரதாப் மெட்டா நிறுவன கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். மேலும் இன்ஸ்டாகிராமின் கமெண்ட் பகுதியில் GIF பாணியில் இந்த சைபர் தாக்குதல் நடத்த முடியும் என அவர் மெட்டா நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று விளக்கம் கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர் விளக்கத்தை ஏற்றுக்கொண்ட மெட்டா நிறுவனம் பிரதாப்பை பாராட்டும் விதமாக வெகுமதி அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மெட்டா நிறுவனம் ஹால் ஆஃப் பேம் என்ற வகையில் ஆராய்ச்சியாளர்களை கௌரவப்படுத்தி வருகிறது. அந்த பட்டியலில் பிரதாப் பெயர் சேர்க்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. அவரின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் பாராட்டைப் பெற்றுள்ளது.

Also Read: கோடி கோடியாக பணம்.. உலகின் முதல் டிரில்லியனர் யார்? லிஸ்டில் இருக்கும் 2 இந்தியர்கள்!

பிரதாப் பொதுவாகவே பாதுகாப்பு தொடர்பாக ஆராய்ச்சிகளில் அதிக ஆர்வம் கொண்டு செயல்பட்டு வந்துள்ளார். குறிப்பாக எத்திக்கல் ஹேக்கிங் என சொல்லப்படும் சைபர் தாக்குதல் பற்றி அதிகம் ஆய்வுகள் மேற்கொண்டிருக்கிறார். அந்த வகையில் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளை பராமரித்து வரும் அதிக அனுபவம் கொண்டவர்கள் கூட கண்டறிய முடியாத விஷயத்தை பிரதாப் கண்டுபிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News