Google Pay Scam : கூகுள் பே, போன் பே பயன்படுத்துறீங்களா உஷார்.. புதுவித மோசடி குறித்து எச்சரிக்கும் சைபர் கிரைம் காவல்துறை!
Cyber Crime | இந்தியாவில் தொழில்நுட்ப வசதி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாததாக மாறியுள்ளது. அந்த வகையில் பல வங்கி கணக்குகளையும் ஒரே மொபைல் செயலி மூலம் எளிதாக கையாளக்கூடியது யுபிஐ வசதி. ஆரம்பத்தில் பெரிய அளவில் வளர்ச்சி இல்லாத நிலையில், ஸ்மார்ட் போன்கள் வந்துவிட்ட பிறகு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.
சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை : மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்தும் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் புது வகையான மோசடி சம்பவங்கள் அறங்கேறி வருவதாகவும், அது குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று சைபர் கிரம் போலீசார் எச்சரித்துள்ளனர். கூகுள் பேயில் அரங்கேறி வரும் புது வகையான மோசடி என்ன, சைபர் கிரைம் போலீசார் எது குறித்து எச்சரிக்கின்றனர், அதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Apple iPhone : இதுவரை இல்லாத அளவு குறைவான விலைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன்கள்.. முழு விவரம் இதோ!
கூகுள் பேயில் புது வகையான மோசடி – எச்சரிக்கும் சைபர் கிரைம் போலீஸ்!
கூகுள் பே மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியுள்ளதாவது, உங்களுக்கு முன்பின் தெரியாத யாரோ ஒருவர் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட யுபிஐ செயலிகள் மூலம் தெரிந்தே உங்களுக்கு பணம் அனுப்புவார்கள். பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு வந்ததும், உங்களை தொடர்ப்புக்கொள்ளும் அவர்கள் தெரியாமல் உங்களுக்கு பணம் அனுப்பிவிட்டதாகவும், வேறு ஒருவருக்கு அனுப்புவதற்கு பதிலாக அவசரத்தில் உங்களுக்கு அனுப்பியதாகவும் கூறுவார்கள். அதுமட்டுமன்றி, நான் தவறுதலாக அனுப்பிய பணத்தை இதே எண்ணிற்கு எனக்கு திரும்ப அனுப்புங்கள் என்றும் கேட்பார்கள். நீங்கள் அனுதாபப்பட்டு பணத்தை அனுப்பும் பட்சத்தில் உங்கள் வங்கி கணக்கை ஹேக் செய்து விடுவார்கள். பிறகு உங்களின் வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணமும் கொள்ளையடிக்கப்படும்.
இதையும் படிங்க : Apple iPhone : இதுவரை இல்லாத அளவு குறைவான விலைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன்கள்.. முழு விவரம் இதோ!
மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருக்க செய்ய வேண்டியவை
- ஒருவேளை கூகுள் பே உள்ளிட்ட யுபிஐ செயலிகளில் யாரேனும் உங்களுக்கு தெரியாதவர்கள் இவ்வாறு பணம் அனுப்பி அதனை திரும்ப அனுப்புமாறு கேட்டால் உடனடியாக பணத்தை அனுப்பிவிடாதீர்கள்.
- பணம் அனுப்பிய அந்த நபரை தொடர்புக்கொண்டு அடையாளச் சான்றுடன் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்து பணமாக வாங்கிக்கொள்ளுமாறு கூறுங்கள்.
- உங்களுக்கு யாரேனும் கூகுள் பேயில் பண அனுப்பி, அதை திரும்ப அனுப்ப குறுஞ்செய்தியில் லிங்க் அனுப்பினால் அவரசப்பட்டு அதை கிளிக் செய்து விடாதீர்கள். அது, உங்கள் வங்கி கணக்கை ஹேக் செய்வதற்காக லிங்காக இருக்கலாம்.
- எனவே நீங்கள் அந்த லிங்கை கிளிக் செய்யும் பட்சத்தில் அதன் மூலம் மோசடிகாரர்கள் உங்கள் வங்கி கணக்கை ஹேக் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம்.
- அவ்வாறு உங்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும் லிங்குகள் முற்றிலும் போலியானது மற்றும் ஆபத்தானது என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள்.
- ஒருவேலை உங்கள் மொபைல் போன் தொலைந்துவிட்டால், மொபைல் போனில் இருக்கும் யுபிஐ செயலி மூலம் வங்கி கணக்கில் இருக்கும் பணம் திருடு போக வாய்ப்புள்ளது. எனவே மொபைல் போன் தொலைந்துவிட்டால் உடனடியாக யுபிஐ ஐடியை பிளாக் செய்வது அவசியம்.
மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் கூகுள் பே உள்ளிட்ட யுபிஐ செயலிகள் மூலம் நடைபெறும் மோசடிகளில் இருந்து நாம் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Apple Watch : அட்டகாசமான தோற்றம்.. அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான ஆப்பிள் வாட்ச் 10 சீரீஸ் .. முழு விவரம் இதோ!
இந்தியாவில் கூகுள் பேயின் அசுர வளர்ச்சி
இந்தியாவில் தொழில்நுட்ப வசதி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாததாக மாறியுள்ளது. அந்த வகையில் பல வங்கி கணக்குகளையும் ஒரே மொபைல் செயலி மூலம் எளிதாக கையாளக்கூடியது யுபிஐ வசதி. ஆரம்பத்தில் பெரிய அளவில் வளர்ச்சி இல்லாத நிலையில், ஸ்மார்ட் போன்கள் வந்துவிட்ட பிறகு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. அதற்கேற்ப பல்வேறு செயலிகள் உள்ளன. கூகுள் பே, பேடிஎம், போன்பே என பல்வேறு செயலிகள் உள்ளன. சாலையோர கடைகள் தொடங்கி பெரிய வணிக கடைகள் வரை யுபிஐ பயன்பாடு உள்ளது. இந்த அளவிற்கு யுபிஐ செயலிகள் மக்கள் மத்தியில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதில் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து எச்சரிக்கையாக இருக்க பொதுமக்களை காவல்துறை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.