5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Did You Know: உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் இருக்கு? – செக் பண்ண எளிய வழி!

Sim Card: ஏதேனும் ஒரு நம்பரை சம்பந்தப்பட்டவர்கள் தற்போது பயன்படுத்தவில்லை என்றாலோ, அப்படியான எண்ணை நீங்கள் வாங்கியதே இல்லை என்றாலோ Not My Number என்ற ஆப்ஷனை தேர்வு செய்து Removal Request கொடுக்கலாம். ஒருவேளை நீங்கள் இதனை செக் செய்யும்போது Error என வந்தால் மீண்டும் சிறிது நேரம் கழித்து முயற்சிக்கலாம்.

Did You Know: உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் இருக்கு? – செக் பண்ண எளிய வழி!
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 19 Jul 2024 15:54 PM

சிம் கார்டுகள்:  உலக நாடுகளில் சைபர் கிரைம் தாக்குதல் என்பது தொடர்கதையாகி வருகிறது.தனி மனிதர்கள் தொடங்கி ஆளும் அரசு வரை அனைத்தையும் ஆட்டிப்படைக்கும் சைபர் தாக்குதல்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் இந்தியாவில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் சமீபத்தில் சிம் கார்டு உள்ளிட்ட தொலைத் தொடர்பு சாதனங்கள் தொடர்பாக பல்வேறு புதிய விதிகளை வகுத்துள்ளது.  செல்போன்கள் பயன்பாடு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதில் பயன்படுத்தும் சிம் கார்டுகள் யார் ஒருவரேனும் ஆவணங்களை கொண்டு வாங்கப்படுகிறது. ஆனால் அதனை சம்பந்தப்பட்ட நபர் பயன்படுத்துகிறார்களா அல்லது வேறு எவரும் எந்தவித பயன்பாட்டுக்காகவும் உபயோகிக்கிறார்களா என தெரிவதில்லை. இதில் சில சிம் கார்டுகள் போலி ஆவணங்கள் கொண்டு வாங்கப்படுவதால் சைபர் தாக்குதலின் போது மிகப்பெரிய சிக்கல் ஏற்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்தவே விதிகள் விதிக்கப்பட்டுள்ளது.

Also Read: 9 சிம் கார்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால் சிறை தண்டனை.. ரூ.2,00,000 அபராதம்.. இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

என்ன தண்டனை?

அதன்படி ஒருவர் அதிகப்பட்சம் 9 சிம் கார்டுகள் வைத்திருக்கலாம். அதற்கு மேல் வைத்திருப்பது கண்டறியப்பட்டால் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விதிகள் சட்டத்திற்கு வயர்லெஸ் கருவிகளை பயன்படுத்துவோருக்கு பொருந்தும். முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் அபராதமும், அதையும் மீறி பயன்படுத்தினால் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். ஜம்மு காஷ்மீர் மற்றும் அசாம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்கள் 6 சிம் கார்டு வரை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் நாம் சில வழிகளை பின்பற்றி நம்முடைய பெயரில் எத்தனை சிம் கார்டுகள் செயல்பாட்டில் உள்ளது என்பதை காணலாம்.

Also Read: Hair Regrowth: வழுக்கை எதனால் விழுகிறது..? முடி வளர இதை பண்ணுங்க..

எப்படி சரி பார்க்கலாம்?

https://tafcop.sancharsaathi.gov.in/telecomUser/ என்ற அரசின் இணையதள முகவரிக்குள் நுழைய வேண்டும். அதில் கேட்கப்பட்டுள்ள ஆப்ஷனில், நீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் யாருடைய செல்போன் எண் கொடுக்கவும். அதன் பின்னர் கொடுக்கப்பட்டிருக்கும் Captcha-வை பதிவு செய்து Verify செய்யவும்.

இதன் பின்னர் நீங்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபியை அதை கொடுத்தால் சம்பந்தப்பட்டவர் பெயரில் இருக்கும் செல்போன் எண்கள் காட்சிப்படுத்தப்படும்.

அதில் ஏதேனும் ஒரு நம்பரை சம்பந்தப்பட்டவர்கள் தற்போது பயன்படுத்தவில்லை என்றாலோ, அப்படியான எண்ணை நீங்கள் வாங்கியதே இல்லை என்றாலோ Not My Number என்ற ஆப்ஷனை தேர்வு செய்து Removal Request கொடுக்கலாம். ஒருவேளை நீங்கள் இதனை செக் செய்யும்போது Error என வந்தால் மீண்டும் சிறிது நேரம் கழித்து முயற்சிக்கலாம்.

Latest News