Cyber Crime : கிரெடிட் கார்டு மோசடிகளை தடுக்க இவற்றை ஃபாலோ பண்ணுங்க.. முழு விவரம் இதோ!
Credit card scam | இந்தியாவில் சமீபகாலமாகவே சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக கிரெடிட் கார்டு மோசடிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தனிப்பட்ட விவரங்கள் மூலம் வங்கி கணக்கில் இருந்து பணம் கொள்ளையடிக்கப்படுவது, கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுப்பது உள்ளிட்ட மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றை தடுக்க உங்கள் தரவுகளை பாதுகாப்பது கட்டாயமாகும்.
சைபர் மோசடி : நவீனமயமாக்கப்பட்ட இந்த உலகில் நாளுக்கு நாள் சைபர் மோசடிகள் அரங்கேறிக்கொண்டே வருகின்றன. குறிப்பாக தகவல் திருட்டு மூலம் ஏராளமான குற்ற சம்பவங்களும், மோசடி சம்பவங்களும் நடக்கின்றன. அதிலும் குறிப்பாக கிரெடிட் மோசடிகளின் எண்ணிக்கை ஏராளம். நிதி சம்மந்தமான தகவல்களை பாதுகாப்பதற்காக ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் செய்யப்பட்டு இருந்தாலும் இந்த குற்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில், சைபர் மோசடிகளில் இருந்து எவ்வாறு உங்கள் பணம் மற்றும் தகவல்களை பாதுகாப்பது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சைபர் குற்றங்களை தடுப்பது எப்படி?
உறுதியான கடவுச்சொல்லை பயன்படுத்துங்கள்
உங்கள் கிரெடிட் கார்டு மற்றும் வங்கி கணக்குகளுக்கு உறிதியான மற்றும் தனித்துவமான கடவுச்சொல்லை பயன்படுத்துங்கள். உங்கள் பெயர் அல்லது பிறந்த தேதியை கடவுச்சொல்லாக வைத்தால் அவை எளிதில் திருடப்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த தவறை செய்யாதீர்கள். அதற்கு மாறாக எண்கள், சிறப்பு எண்கள் மற்றும் குறியீடுகளை பயன்படுத்துங்கள்.
2 ஃபேக்டர் அங்கீகாரத்தை செய்யுங்கள்
2 ஃபேக்டர் அங்கீகாரத்தை வைக்கும்போதும் உங்கள் கடவு சொல்லுக்கு அது கூடுதல் பாதுகாப்பாக அமையும். ஒருவேளை உங்கள் கடவு சொல் திருடப்பட்டாலும், உங்கள் மொபைல் எண் அல்லது மின்னஞ்சலுக்கு குறுஞ்செய்தி அல்லது ஒடிபி வரும். இதன் மூலம் யாரேனும் உங்கள் கிரெடிட் கார்டில் இருந்தோ அல்லது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க முயற்சி செய்தால் உங்களுக்கு தெரிந்துவிடும்.
உங்கள் கணக்கை அவ்வப்போது கவணியுங்கள்
உங்கள் கிரெடிட் கார் ஸ்டேட்மெண்ட் மற்றும் வங்கி கணக்கை அவ்வபோது ஆராய்வதன் மூலம் சைபர் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.
பொது இடங்களில் இருக்கும் wifi வசதியை பயன்படுத்தும்போது மிகவும் கவனம் தேவை
பொது இடங்களில் wifi வசதியை பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருங்கள். ஏனென்றால் wifi மூலம் உங்கள் தகவல்கள் திருடப்படலாம். சமீபத்தில் இதுபோன்ற குற்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க : Aadhaar : ஆதாரில் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணை மாற்றுவது எப்படி தெரியுமா? விவரம் இதோ!
குறுஞ்செய்திகள் குறித்து கவனம் தேவை
உங்களுக்கு வரும் குறுஞ்செய்திகள் குறித்து கவனமாக இருங்கள். உங்கள் மொபைல் எண் அல்லது மின்னஞ்சலுக்கு தெரியாத எண், மின்னஞ்சலில் வரும் லிங்குகளை கிளிக் செய்யாதீர்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் தகவல்கள் திருடப்பட்டு உங்கள் வங்கி அல்லது கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.
தகவல்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்
உங்கள் வங்கி கணக்கு எண், கிரெடிட் கார்டு விவரங்கள் ஆகியவற்றை மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் உங்கள் விவரங்கள் திருடப்பட்டு சைபர் மோசடி நடக்க அதிகம் வாய்ப்புள்ளது.
மேற்குறிப்பிட்ட நடைமுறைகளை தவறாமல் கடைபிடிப்பதன் மூலம் சைபர் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.