5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

உங்கள் வாட்ஸ் அப் சாட் திருடப்படலாம்.. அதை தடுக்க இதையெல்லாம் கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க!

Whatsapp protection | உங்கள் வாட்ஸ் அப் சாட் அல்லது கணக்கு ஹேக் செய்யப்படுவதன் மூலம் உங்கள் தரவுகள் திருடப்பட்டு மோசடிகள் நடைபெறலாம். எனவே உங்கள் வாட்ஸ் அப் கணக்கிற்கு சில பாதுகாப்பு அம்சங்களை நீங்கள கடைபிடிப்பதன் மூலம் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.

உங்கள் வாட்ஸ் அப் சாட் திருடப்படலாம்.. அதை தடுக்க இதையெல்லாம் கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 08 Jul 2024 15:37 PM

வாட்ஸ் அப் சாட் பாதுகாப்பு : தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னிலை வகுப்பது தகவல் தொழில்நுட்பம் தான். பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருவருடன் தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் கடிதம் மூலமாக தான் தொடர்பு கொள்ள முடியும். இங்கிருந்து கடித போய் சேறுவதற்கும் அங்கிருந்து கடிதம் வந்து சேறுவதற்கும் பல நாட்கள் ஆகும். ஆனால் இப்போது அந்த கவலை எல்லாம் இல்லை. நொடி பொழுதில் நாம் யாரிடம் வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம். குறிப்பாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களால் வீடியோ கால் மூலம் நேரில் சந்தித்து பேசுவதும் போன்ற உணர்வு பூர்வமான உரையாடல்களையும் நிகழ்த்த முடிகிறது. இவ்வாறு உரையாடல்களுக்கு முக்கிய பங்கு பவிக்கும் வாட்ஸ் அப் கணக்கை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். இல்லையெனில் உங்கள் தரவுகள் எளிதில் திருடப்பட வாய்ப்புள்ளது.

வாட்ஸ் அப் உரையாடல்களை பாதுகாக்க சிறந்த 5 டிப்ஸ்

2 ஸ்டெப் வெரிஃபிகேஷனை ஆன் செய்யவும் 

2 ஸ்டெப் வெரிஃபிகேஷன், வாட்ஸ் அப் கணக்கை பாதுகாக்க கூடிய முக்கிய அம்சங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த 2 ஸ்டெப் வெரிஃபிகேஷன் உங்கள் வாட்ஸ் அப் கணக்கிற்கு கூடுதல் பாதுகாப்பாக அமைகிறது. இதில் வாட்ஸ் அப் கணக்கை பயன்படுத்துவதற்கு 6 டிஜிட் கொண்ட சீக்ரெட் பின் மட்டுமன்றி உங்கள் மொபைல் எண்ணுக்கு வெரிஃபிகேஷன் கோடும் அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் உங்களது வாட்ஸ் அப் கணக்கை வேறு யாரேனும் பயன்படுத்த முயற்சித்தால் உங்களால் எளிதாக கண்டுபிடித்து விட முடியும். எனவே அந்த 6 டிஜிட் கொண்ட சீக்ரெட் பின் எளிதாக கண்டுபிடித்துவிடும் வகையில் வைக்க வேண்டாம்.

கைரேகை அல்லது முக ஐடி 

உங்கள் வாட்ஸ் அப் கணக்கிற்கு கைரேகை அல்லது முக ஐடி லாக்கை செட் செய்யுங்கள். ஏனெனில் எண்களை வைத்து லாக் செய்யும் போது அது எளிதில் திருடப்பட வாய்ப்புள்ளது. உங்கள் கை ரேகை அல்லது முக ஐடியை பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் மொபைல் போனை எங்கேனும் மறந்து வைத்துவிட்டால் கூட அது பாதுகாப்பாக இருக்கும்.

இதையும் படிங்க : Redmi 13 5G : விரைவில் அறிமுகப்படுத்தப்பட்ட உள்ள ரெட்மி 13 5G.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?

உங்கள் தகவல்களை யார் பார்க்க வேண்டும் என்பதை தீர்மானியுங்கள் 

நீங்கள் கடைசியாக எப்பொழுது வாட்ஸ் அப் பயன்படுத்துனீர்கள் என்பதை அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய அவசையமில்லை. எனவே உங்கள் Last Seen ஆப்ஷனை ஆப் செய்து வையுங்கள். இதேபோல உங்கள் ஸ்டேட்டசை யார் பார்க்க வேண்டும் என்பதை தீர்மானித்து அதற்கு ஏற்றார் போல் செட்டிங்ஸ்களை மாற்றி வையுங்கள்.

இதையும் படிங்க : Cyber Crime : கிரெடிட் கார்டு மோசடிகளை தடுக்க இவற்றை ஃபாலோ பண்ணுங்க.. முழு விவரம் இதோ!

இந்த நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உங்கள் வாட்ஸ் அப் சாட்களை யாராலும் திருட முடியாது. அதுமட்டுமன்றி உங்களது வாட்ஸ் அப் கணக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

Latest News