கூகுள் பிக்ஸல் 8ஏ: ரூ.52 ஆயிரம் ஸ்மார்ட்போனை ரூ.39 ஆயிரத்துக்கு வாங்குவது எப்படி?

Google Pixel 8a : இந்தியாவில், கூகுள் பிக்ஸல் 8ஏ ஸ்மார்ட்போனை ரூ.39,999க்கு ஸ்மார்ட்போனை பெற ஒரு வழி உள்ளது.

கூகுள் பிக்ஸல் 8ஏ: ரூ.52 ஆயிரம் ஸ்மார்ட்போனை ரூ.39 ஆயிரத்துக்கு வாங்குவது எப்படி?

கூகுள் பிக்ஸல் 8ஏ ஸ்மார்ட்போன்

Published: 

09 May 2024 07:43 AM

இந்தியாவில், கூகுள் பிக்ஸல் 8ஏ 2024 மே 8ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தொழில்நுட்ப வல்லுநர்களில் மத்தியில் இது பேசுபொருளானது.
இந்த நிலையில் ஒருநாள் முன்னதாக, மே 7ஆம் தேதி இரவே சுகுள் பிக்ஸல் 8 ஏ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில், ஜெமினி AI உதவியாளர் மற்றும் கூகிளின் டென்சர் G3 சிப்செட், அதன் முன்னோடியான பிக்சல் 7a ஐ விட சற்று அதிகமாக உள்ளது.
மேலும் பிக்ஸல் 7ஏ (Pixel 7a) இந்தியாவில் ரூ.43,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மறுபுறம், பிக்ஸல் 8ஏ (Pixel 8a) இன் விலை ரூ.52,999 முதல் தொடங்குகிறது. இருப்பினும், ரூ.39,999க்கு ஸ்மார்ட்போனை பெற ஒரு வழி உள்ளது.

மே 14ஆம் தேதி விற்பனை

கூகுள் பிக்ஸல் 8ஏ (Google Pixel 8a) ஏற்கனவே ஃபிளிப்கார்ட் (Flipkart) இல் முன்கூட்டிய ஆர்டர் செய்யக் கிடைக்கிறது.
மேலும் உங்கள் சாதனத்தை முன்பதிவு செய்ய இணையதளத்தைப் பார்வையிடலாம். இந்த போன் மே 14ம் தேதி காலை முதல் விற்பனைக்கு வரும்.

பிக்சல் 8a நான்கு வண்ண வகைகளில் கிடைக்கிறது . அவை, அலோ, பே, அப்சிடியன் மற்றும் பீங்கான் ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு சேமிப்பு வகைகளும் உள்ளன .
அவை, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஆகும். மேலும், ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, 128 ஜிபி பதிப்பின் விலை ரூ. 52,999 மற்றும் 256 ஜிபி மாறுபாட்டின் விலை ரூ.59,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.39,999க்கு வாங்குவது எப்படி?

இருப்பினும், நீங்கள் ஃபோனை முன்கூட்டிய ஆர்டர் செய்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகளுடன் பல்வேறு வெளியீட்டு சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இது தொலைபேசியின் ஆரம்ப விலையைக் குறைக்கும். எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு உடனடி தள்ளுபடி ரூ.4,000 கிடைக்கும். இது தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களில் ரூ.9,000 எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உள்ளது.

இது சாதனத்தின் விலையை ரூ.39,999 ஆக குறைக்கிறது. கூடுதலாக, முன்கூட்டிய ஆர்டர் காலத்தில் பிக்ஸல் 8 ஏ (Pixel 8a) ஐ வாங்கினால், பிக்ஸல் பட்ஸ் ஏ சீரிஸ் (Pixel Buds A-Series) ஐ வெறும் 999 ரூபாய்க்கு வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கம்மி விலையில் செம்ம மாடல்.. சாம்சங் கேலக்ஸி எம்.55 5ஜி ஸ்மார்ட்போன் விலை, சிறப்புகள் தெரியுமா?

தோல்வியில் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ளும் பாடம்!
பனிக்காலத்தில் நாம் சுற்றுலா செல்ல வேண்டிய இடங்கள்!
காலை அல்லது இரவு? முட்டை எப்போது சாப்பிடலாம்?
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?