ஒரு நாளைக்கு 2 ரூபாதான்.. ரூ.88க்கு ரீசார்ஜ்- 30 நாள் வேலிடிட்டி: இந்த BSNL திட்டம் தெரியுமா? | Do you know the validity of Rs 88 BSNL recharge plan Tamil news - Tamil TV9

ஒரு நாளைக்கு 2 ரூபாதான்.. ரூ.88க்கு ரீசார்ஜ்- 30 நாள் வேலிடிட்டி: இந்த BSNL திட்டம் தெரியுமா?

Published: 

20 Jun 2024 20:19 PM

BSNL Rs 88 plan: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) அதன் ரூ.88 திட்டத்தின் சேவை செல்லுபடியை குறைத்துள்ளது. இந்த திட்டம் முன்பு 35 நாட்கள் செல்லுபடியாகும் ஆனால் இப்போது 30 நாட்களுக்கு மட்டுமே வருகிறது. ரூ.88 பேக்கில் பயனர்களுக்கு ஆன்-நெட் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 10 பைசாவும் ஆஃப்-நெட் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 30 பைசாவும் வசூலிக்கப்படுகிறது.

ஒரு நாளைக்கு 2 ரூபாதான்.. ரூ.88க்கு ரீசார்ஜ்- 30 நாள் வேலிடிட்டி: இந்த BSNL திட்டம் தெரியுமா?

பி.எஸ்.என்.எல் ரூ.88 ரீசார்ஜ்

Follow Us On

பி.எஸ்.என்.எல் ரூ.88 ரீசார்ஜ் திட்டம்: பிஎஸ்என்எல் ரூ.88 திட்டத்தின் வேலிடிட்டி 35 நாட்களில் இருந்து 30 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பேக் குரல் அழைப்பு விருப்பத்தை மட்டுமே வழங்குவதால் இந்த திட்டத்தில் டேட்டா நன்மைகள் எதுவும் இல்லை. இந்த ரூ.88 பிஎஸ்என்எல் திட்டம் நாட்டில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. பி.எஸ்.என்.எல் தவிர, வோடபோன் ஐடியா நெட்வொர்க்கும் ரூ. 100 க்கு கீழ் உள்ள அதே வகையான திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தின் விலை ரூ. 99 ஆகும். ஆனால் திட்டம் 15 நாள்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். முன்பு இந்தத் வேலிடிட்டி நாள்கள் 28 வரை காணப்பட்டது.  ஏர்டெல் நெட்வொர்க் நிறுவனத்தின் ரூ.279 திட்டம் சமீபத்தில் சேர்க்கப்பட்டது. இந்தத் திட்டத்தில், 45 நாட்கள் சேவை செல்லுபடியாகும். 2ஜிபி டேட்டா மற்றும் 600 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் வருகிறது.

பி.எஸ்.என்.எல். ரூ.88 ரீசார்ஜ் திட்டம்

பிஎஸ்என்எல் மார்ச் மாதத்தில் ரூ.699 மற்றும் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டங்களின் செல்லுபடியை அதிகரித்தது. பிஎஸ்என்எல் ரூ.699 திட்டம் முன்பு 130 நாட்கள் வேலிடிட்டியை வழங்கியது. த்ற்போது, 150 நாட்களாக வேலிடிட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், பேக் தினசரி 0.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. வாடிக்கையாளர்கள் முதல் 60 நாட்களுக்கு இலவச தனிப்பயனாக்கப்பட்ட ரிங்பேக் டோனை (PRBT) பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதேபோல், ரூ.999 பிஎஸ்என்எல் திட்டம் 200 நாட்கள் அசல் வேலிடிட்டியுடன் ஒப்பிடும்போது 215 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 60 நாட்களுக்கு இலவச தனிப்பயனாக்கப்பட்ட ரிங்பேக் டோனை (PRBT) வழங்குகிறது. பேக்கில் டேட்டா அல்லது எஸ்எம்எஸ் நன்மைகள் எதுவும் இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்.

ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள்

ஏர்டெல் நிறுவனத்தின் திட்டங்களின் விலை ரூ.155, ரூ.179, ரூ.199, ரூ.279, ரூ.395 மற்றும் ரூ.455 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.155 திட்டத்தில், பயனர்கள் 24 நாட்கள் சேவை வேலிடிட்டி, 1ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் பெறுகிறார்கள். ரூ.179 திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டி, 2ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. ரூ.199 திட்டத்தில் 3ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் மற்றும் 30 நாட்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு ஆகியவை அடங்கும்.
ரூ.279 திட்டம் சமீபத்தில் சேர்க்கப்பட்டது. இந்தத் திட்டத்தில், 45 நாட்கள் சேவை செல்லுபடியாகும். 2ஜிபி டேட்டா மற்றும் 600 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகளுடன் வருகிறது. ரூ.395 திட்டத்தில் 6ஜிபி டேட்டா, 70 நாட்கள் சேவை வேலிடிட்டி, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 600 எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும். ரூ.455 திட்டத்தில் 6ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு, 900 எஸ்எம்எஸ் மற்றும் 84 நாட்கள் சேவை செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : VI Recharge : அமேசானில் படம் பார்க்கலாம்.. வோடபோனின் ரூ.904 ப்ளான் தெரியுமா?

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version