Har Ghar Tiranga Certificate: ஹர் கர் திரங்கா சான்றிதழ் என்றால் என்ன? அதை டவுன்லோட் செய்வது எப்படி?

Independence Day 2024 | இந்தியா கடந்த 1947 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெள்ளையர்களிடம் விடுதலை பெற்றது. அதன் நினைவாக ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவில் சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு 77வது சுதந்திர தின விழாவை கொண்டாட தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Har Ghar Tiranga Certificate: ஹர் கர் திரங்கா சான்றிதழ் என்றால் என்ன? அதை டவுன்லோட் செய்வது எப்படி?

மாதிரி புகைப்படம்

Published: 

12 Aug 2024 16:35 PM

சுதந்திர தினவிழா : இந்தியாவில் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்தியா கடந்த 1947 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெள்ளையர்களிடம் விடுதலை பெற்றது. அதன் நினைவாக ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவில் சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு 77வது சுதந்திர தின விழாவை கொண்டாட தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், ஒத்திகை நிகழ்ச்சிகள், 3 வண்ண கொடி விற்பனை அனைத்தும் கலைக்கட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஹர் கர் திரங்கா சான்றிதழ் குறித்து நாம் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டும். ஹர் கர் திரங்கா  சான்றிதழ் என்றால் என்ன, அது எதற்கு பயன்படுகிறது, அந்த சான்றிதழை எப்படி பெறுவது என விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Independence Day 2024: 78வது சுதந்திர தினம்.. ஆகஸ்ட் 15 ஆம் தேதியை கொண்டாட இந்த 8 இடங்களுக்கு செல்லலாம்..

ஹர் கர் திரங்கா சான்றிதழ் என்றால் என்ன?

ஹர் கர் திரங்கா என்பது மக்களிடையே நாட்டு பற்றை ஊக்குவிக்கும் விதமாக கொண்டுவரப்பட்ட திட்டமாகும். அதன்படி, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் 3 வண்ண கொடி ஏற்றி அதனுடன் செல்ஃபி எடுத்து அதை HarGharTiranga என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் கொடியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படத்திற்கு வழங்கப்படும் சான்றிதழ் தான் ஹர் கர் திரங்கா சான்றிதழ்.

இதையும் படிங்க : Chou Tzuyu : திடீர் வைரல்.. ஒலிம்பிக் நேரத்தில் வைரலான தைவான் பாடகி.. யார் இந்த சௌ சூயூ?

அரசின் இந்த ஹர் கர் திரங்கா  சான்றிதழ் முன்னெடுப்பு கடத்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல் ஆண்டிலேயே சுமார் 23 கோடி மக்கள் தங்கள் வீடுகளில் 3 வண்ண கொடி ஏற்றினர். அதுமட்டுமன்றி சுமார் 6 கோடி மக்கள் ஹர் கர் திரங்கா இணையதளத்தில் தங்களது செல்ஃபியை பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது. அதுவே கடந்த ஆண்டு மேலும் வளர்ச்சி அடைந்து சுமார் 10 லட்சம் செல்ஃபிக்கள் ஹர் கர் திரங்கா இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஹர் கர் திரங்கா சான்றிதழ் பெறுவது எப்படி?

  1. முதலில் ஹர் கர் திரங்கா இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. அதில் Upload Selfie என்பதை கிளிக் செய்து உங்கள் செல்ஃபியை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  3. அதில் உங்கள் பெயர், மொபைல் எண், மாநிலம் ஆகியவற்றை பதிவிட்ட பிறகு செல்ஃபியை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  4. அதில் கொடுக்கப்பட்டிருக்கும் உறுதி மொழியை படித்து Submit செய்யவும்.
  5. பிறகு Generate Certificate என்பதை கிளிக் செய்து, உங்களின் சான்றிதழை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்ட நடைமுறைகளை பின்பற்றி நீங்கள் உங்கள் ஹர் கர் திரங்கா சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.

தோல்வியில் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ளும் பாடம்!
பனிக்காலத்தில் நாம் சுற்றுலா செல்ல வேண்டிய இடங்கள்!
காலை அல்லது இரவு? முட்டை எப்போது சாப்பிடலாம்?
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?