5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Starlink : இனி டவர்கள் தேவைப்படாது.. முழு வேகத்தில் நெட்வொர்க் கிடைக்கும்.. புதிய அம்சத்துடன் மாஸ் காட்டும் எலான் மஸ்க்!

Elon Musk | ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் இந்த புதிய சேவையை டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து ஸ்டார்லிங்க் நிறுவனம் நடைமுறைப்படுத்த உள்ளதாக தகவல் வெளியானது. அதனை உறுதி படுத்தும் வகையில் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Starlink : இனி டவர்கள் தேவைப்படாது.. முழு வேகத்தில் நெட்வொர்க் கிடைக்கும்.. புதிய அம்சத்துடன் மாஸ் காட்டும் எலான் மஸ்க்!
எலான் மஸ்க்
vinalin
Vinalin Sweety | Published: 27 Nov 2024 17:08 PM

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வேகமாக முன்னேறிக்கொண்டே வருகிறது. இந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அசாத்தியமான செயல்களை எல்லாம் தற்போது மிகவும் சுலபமாக செய்து முடித்துவிட முடிகிறது. அந்த வகையில் தற்போது ஒரு புதிய அம்சத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர எலான் மஸ்கின் ஸ்டார்லிங் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. இந்த புதிய சேவை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டால், தற்போது பயன்பாட்டில் உள்ள ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் காணாமல் போகும் நிலை உருவாகலாம என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், எலான் மஸ்கின் ஸ்டார்லிங் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள அந்த புதிய அம்சம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : மாணவர் டூ முதியவர் வரை.. பல கோடிகள் இழப்பு.. ‘டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி’யில் தப்பிப்பது எப்படி?

ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் திட்டம் என்ன?

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்களின் நிறுவன தலைவராக உள்ளனர் எலான் மஸ்க். இவர் ஸ்டார்லிங்க் என்ற மற்றொரு நிறுவனத்தையும் இயக்கி வருகிறார். தற்போது அந்த நிறுவனம் தான் தொழில்நுட்ப உலகின் புதிய சகாப்தத்தை தொடங்க தீவிரம் காட்டி வருகிறது. அதாவது, ஸ்டார்லிங் நிறுவனம் டைரக்ட்-டு-செல் (Direct-to-cell) என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அடுத்த ஆண்டு முதல் இந்த திட்டம் மெல்ல மெல்ல அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக ஸ்டார்லிங்க் சேவையை பயன்படுத்த வேண்டும் என்றால் டிஷ்  போன்ற சிறிய கருவியை உடன் எடுத்து செல்ல வேண்டும். அந்த கருவி வெளியே எடுத்து செல்ல கூடிய அளவுக்கு மிகவும் சிறயதாக இருந்தாலும், ஒருவேளை அந்த கருவியை எடுத்து செல்லவில்லை என்றால் ஸ்டார்லிங்க் செவையை பயன்படுத்த முடியாது.

இதையும் படிங்க : Airtel : தினமும் 3ஜிபி டேட்டா.. நெட்பிளிக்ஸ் முதல் பிரைம் வீடியோ வரை.. அசத்தல் அம்சங்களை வழங்கும் ஏர்டெலின் 3 திட்டங்கள்!

சேவையை எளிதாக்க அதிரடி முடிவு எடுத்த எலான் மஸ்க்

இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் தான் ஸ்டாரிங்க் நிறுவனம் தற்போது இந்த சேவையை அறிமுகம் செய்ய தீவிரம் காட்டி வருகிறது. அவ்வாறு இந்த சேவை அறிமுகம் செய்யபப்டும் பட்சத்தில் டவர்களின் உதவி இல்லாமல் நேரடியாக செயற்கைகோள் மூலம் இண்டர்நெட் வசதியை பெற முடியும். டவர்கள் இல்லாமல் போவது மட்டுமன்றி, இந்த சேவை மூலம் இணைய வசதிகளே இல்லாத இடங்களில் கூட அதிக வேகத்துடன் கூடிய நெட்வொர்க் கிடைக்கும். இந்த நிலையில் உலகம் முழுவதும் செயற்கைகோள் மூலம் இணைய வசதியை வழங்க வேண்டும் என்ற நோக்கில், எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அதிதீவிரமாக விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்பி வருகிறது. வின்வெளியில் போதுமாக செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தி வைப்பதால் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் இணைய சேவை மிகவும் சீரானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : WhatsApp : வாய்ஸ் நோட் “Transcription” அம்சத்தை அறிவித்த வாட்ஸ்அப்.. அதன் சிறப்பு அம்சங்கள் என்ன?

ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்த எலான் மஸ்க்

ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் இந்த புதிய சேவையை டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்து ஸ்டார்லிங்க் நிறுவனம் நடைமுறைப்படுத்த உள்ளதாக தகவல் வெளியானது. அதனை உறுதி படுத்தும் வகையில் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதன் மூலம் விரைவில் ஸ்டார்லிங்கின் புதிய சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது உறுதியாகியுள்ளது. முன்னதாக பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் இந்த சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Latest News