WhatsApp : உங்கள் வாட்ஸ்அப் கணக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டுமா.. அப்போ இத பண்ணுங்க! - Tamil News | Enable two step verification tp protect you WhatsApp : know how to do it in Tamil | TV9 Tamil

WhatsApp : உங்கள் வாட்ஸ்அப் கணக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டுமா.. அப்போ இத பண்ணுங்க!

Published: 

06 Sep 2024 16:56 PM

WhatsApp | மற்ற சமூக ஊடகங்களை காட்டிலும் வாட்ஸ்அப் செயலி பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் உள்ளதால் அதற்கு பயனர்கள் அதிகம். இருப்பினும் வாட்ஸ்அப் மூலம் சில பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படுகிறது. வாட்ஸ்அப்பில் 2 ஸ்டெப் வெரிஃபிகேஷனை எனேபில் செய்வதன் மூலம், நீங்கள் வாட்ஸ்அப் செயலியை பாதுகாப்பாக பயன்படுத்தலாம்.

WhatsApp : உங்கள் வாட்ஸ்அப் கணக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டுமா.. அப்போ இத பண்ணுங்க!

வாட்ஸ்அப் (Photo Credit : Unsplash)

Follow Us On

வாட்ஸ்அப் பாதுகாப்பு அம்சங்கள் : சமீப காலமாகவே மக்கள் மத்தியில் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளின் ஆதிக்கம் அதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வாட்ஸ்அப் செயலி பொழுதுபோக்கிற்காக மட்டுமன்றி பள்ளி, கல்லூரிகள் முதல் அலுவலகங்கள் வரை தகவலை பரிமாறிக்கொள்ள அனைத்து துறைகளும் இந்த செயலியை பயன்படுத்துகின்றன. மற்ற சமூக ஊடகங்களை காட்டிலும் வாட்ஸ்அப் செயலி பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் உள்ளதால் அதற்கு பயனர்கள் அதிகம். இருப்பினும் வாட்ஸ்அப் மூலம் சில பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படுகிறது. வாட்ஸ்அப்பில் 2 ஸ்டெப் வெரிஃபிகேஷனை எனேபில் செய்வதன் மூலம், நீங்கள் வாட்ஸ்அப் செயலியை பாதுகாப்பாக பயன்படுத்தலாம். இந்நிலையில், 2 ஸ்டெப் வெரிஃபிகேஷன் என்றால் என்ன, அதை எப்படி எனேபில் செய்வது என்பதை விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : iPhone 15 Series : அதிரடி தள்ளுபடியுன் விற்பனையாகும் ஐபோன் 15 சீரீஸ்.. இதுதான் சரியான நேரம்.. மிஸ் பண்ணிடாதீங்க!

வாட்ஸ்அப்பின் 2 ஸ்டெப் வெரிஃபிகேஷன் என்றால் என்ன?

வாட்ஸ்அப் கணக்கு மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும். எனவே ஒடிபி செல்லும் மொபைலை வைத்து யார் வேண்டுமானாலும் உங்களது வாட்ஸ்அப் கணக்கை பயன்படுத்தி, அதில் இருக்கும் தகவல்களை எடுத்துக்கொள்ள முடியும். இந்த நிலையில், 2 ஸ்டெப் வெரிஃபிகேஷனை எனேபில் செய்வதன் மூலம் உங்களால் இந்த பிரச்னையில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும். மொபைல் எண்ணை பயன்படுத்தி வாட்ஸ்அப் கணக்கு தொடங்கும் பயனர்கள் உடனடியாக இந்த 2 ஸ்டெப் வெரிஃபிகேஷனை எனேபில் செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு சார்ந்த எந்த வித பிரச்னையும் வராது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Google Pixel : ரூ.23,000 வரை தள்ளுபடி.. அதிரடி சலுகைகளுடன் விற்பனையாகும் Google Pixel 9 Pro Fold.. முழு விவரம் இதோ!

வாட்ஸ்அப்பில் 2 ஸ்டெப் வெரிஃபிகேஷனை எனேபில் செய்வது எப்படி?

  1. அதற்கு முதலில் வாட்ஸ்அப் செயலிக்குள் செல்ல வேண்டும்.
  2. அங்கு Settings-ஐ கிளிக் செய்ய வேண்டும்.
  3. அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் விருப்பங்களில் Two – Step Verification என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  4. பிறகு 2 ஸ்டெப் வெரிஃபிகேஷனை எனேபில் செய்து PIN செட் செய்ய வேண்டும்.
  5. அதன்படி ஏதேனும் 6 எண்களை கொண்டு PIN செட் செய்ய வேண்டும்.
  6. இதற்கு பிறகு இமெயில் ஐடி ஆட் செய்யும் ஆப்ஷனும் கேட்கப்படும். உங்களுக்கு மெயில் ஐடி ஆட் செய்ய வேண்டும் என்றால் ஆட் செய்துக்கொள்ளலாம்.
  7. ஒருவேளை உங்களுக்கு மெயில் ஐடியை ஆட் செய்ய விருப்பமில்லை என்றால் Skip செய்துவிடலாம்.
  8. பிற்காலத்தில் ஏதேனும் மாற்றங்களை செய்ய இமெயில் ஐடி ஆட் செய்வது பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Mobile Listening : உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் மொபைல் போன்கள்.. உறுதி செய்த நிறுவனம்.. அதிர்ச்சி தகவல்!

மேற்கண்ட முறையை பயன்படுத்தி வாட்ஸ்அப்பில் நீங்கள்  2 ஸ்டெப் வெரிஃபிகேஷனை எனேபில் செய்வதன் மூலம் உங்களால் பாதுகாப்பாக வாட்ஸ்அப் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories
Flipkart Big Billion Days Sale : பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்.. ஆப்பிள் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி!
Motorola Edge 50 Neo : மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ இந்தியாவில் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன.. முழு விவரம் இதோ!
Jio Mobile Recharge : கூடுதல் கட்டணம் செலுத்தாமல் ஜியோ ரீச்சார்ஜ் செய்வது எப்படி.. இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
Realme P2 Pro : இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி பி2 ப்ரோ.. விலை மற்றும் சிறப்பு அமங்கள் என்ன.. முழு விவரம் இதோ!
Apple 16 Series : இன்று தொடங்குகிறது ஆப்பிள் 16 சீரீஸ் ப்ரீ புக்கிங்.. எப்படி ஆர்டர் செய்வது.. முழு விவரம் இதோ!
Google Pay Scam : கூகுள் பே, போன் பே பயன்படுத்துறீங்களா உஷார்.. புதுவித மோசடி குறித்து எச்சரிக்கும் சைபர் கிரைம் காவல்துறை!
இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version