Aadhaar : உங்கள் ஆதார் அட்டையை வேறு யாரேனும் பயன்படுத்துகிறார்களா?.. தெரிந்துக்கொள்வது எப்படி? - Tamil News | Find whether your Aadhaar card is using by any other person using these steps | TV9 Tamil

Aadhaar : உங்கள் ஆதார் அட்டையை வேறு யாரேனும் பயன்படுத்துகிறார்களா?.. தெரிந்துக்கொள்வது எப்படி?

Updated On: 

18 Nov 2024 16:50 PM

UIDAI | ஆதார் அட்டை முக்கிய அடையாள அட்டையாக இருப்பது மட்டுமன்றி அதில் பல முக்கிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் உங்கள் ஆதார் அட்டையை வேறு யாரேனும் பயன்படுத்துகிறார்களா என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். 

1 / 5இந்திய

இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை இல்லை என்றால் பல வேலைகளை நம்மால் செய்து முடிக்க முடியாது. 

2 / 5

ஆதார் அட்டை முக்கிய அடையாள அட்டையாக இருப்பது மட்டுமன்றி அதில் பல முக்கிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் உங்கள் ஆதார் அட்டையை வேறு யாரேனும் பயன்படுத்துகிறார்களா என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். 

3 / 5

உங்கள் ஆதார் அட்டையை வேறு யாரேனும் பயன்படுத்துகிறார்களா என்பதை தெரிந்துக்கொள்ள முதலில் ஆதார் இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு உங்களது ஆதார் எண், கேப்ட்சா குறியீடு ஆகியவற்றை உள்ளிட்டு Log in செய்ய வேண்டும். 

4 / 5

இதனை செய்து முடித்த உடன் உங்களது மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். பின்னர் உங்கள் ஆதார் கணக்கிற்குள் நுழைந்து "Authentication History" என்பதை கிளிக் செய்யுங்கள். அதில் நீங்கள் எத்தனை நாட்களுக்கான பயன்பாட்டை பார்க்க விரும்புகிறீர்கள் என்பதையும் தேர்வு செய்யுங்கள். 

5 / 5

அதில் நீங்கள் எப்போதெல்லாம் ஆதார் கார்டை பயன்படுத்தியுள்ளீர்கள் என்ற அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும். ஒருவேளை நீங்கள் பயன்படுத்தாமல் உங்கள் ஆதார் அட்டையை யாரேனும் பயன்படுத்தி இருந்தால் அது குறித்து UIDAI-ல் புகார் அளிக்கலாம். 

இன்ஸ்டாவில் வைரலாகும் நிமிர் பட நடிகை நமீதா பிரமோத் போட்டோஸ்!
நடிகை நஸ்ரியா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
குழந்தையின் வெற்றிக்கு தாய் செய்ய வேண்டிய விஷயங்கள்!
நடிகை ஷாலினி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!