5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Flipkart Big Diwali Sale : இன்று தொடங்கியது பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்.. ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி!

Discount on Mobile | தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பல்வேறு நிறுவனங்கள் தீபாவளி சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் பிளிப்கார்ட் நிறுவனம், தனது பிக் தீபாவளி சேலை அறிவித்துள்ளது. பிளிப்கார்டின் இந்த சேல் இன்று (அக்டோபர் 21) தொடங்கி வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Flipkart Big Diwali Sale : இன்று தொடங்கியது பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்.. ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 21 Oct 2024 19:17 PM

வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மின்சாதன பொருட்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்தன் வகையில், மிகப்பெரிய இ காமர்ஸ் தளமான பிளிப்கார்ட், தனது தீபாவளி விற்பனையை அறிவித்துள்ளது. பிளிப்கார்ட்டின் இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யபப்டுகின்றன. இந்த நிலையில் பிளிப்கார்ட் தீபாவளி சேல் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கான தள்ளுபடிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : YouTube : அதிரடி அம்சங்களை அறிமுகம் செய்த யூடியூப்.. என்ன என்ன தெரியுமா?

அதிரடி சலுகைகளுடன் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள்

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பல்வேறு நிறுவனங்கள் தீபாவளி சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் பிளிப்கார்ட் நிறுவனம், தனது பிக் தீபாவளி சேலை அறிவித்துள்ளது. பிளிப்கார்டின் இந்த சேல் இன்று (அக்டோபர் 21) தொடங்கி வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதாவது சுமார் 10 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த சேலில் மோட்டோரோலா, சாம்சங், ரியல்மி உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

இதையும் படிங்க : BSNL : இனி பக்கா நெட்வொர்க்… பிஎஸ்என்எல் சொன்ன குட்நியூஸ்.. என்ன தெரியுமா?

பிளிப்கார்டின் ஸ்மார்ட்போன் தள்ளுபடி

மோட்டோ ஜி85 5ஜி

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி85 5ஜி ஸ்மார்ட்போன், பிளிப்கார்ட்டின் பிக் தீபாவளி சேலில் ரூ.15,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்ற தளங்களில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.16,999 முதல் ரூ.18,999 வரை விற்பனை செய்யபப்டுவது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எஸ்23 5ஜி

சாம்சங் நிறுவனத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்23 5ஜி  ஸ்மார்ட்போன், பிளிப்கார்ட்டின் பிக் தீபாவளி சேலில் ரூ.37,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மற்ற தளங்களில் ரூ.69,999 வரை விற்பனை செய்யபப்டுவது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி 12எக்ஸ் 5ஜி

ரியல்மி நிறுவனத்தில் ரியல்மி 12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன், பிளிப்கார்ட்டின் பிக் தீபாவளி சேலில் ரூ. 10,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிளிப்கார்ட் சேலில் இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.7,000 தள்ளுபடி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Meta : கோடிகளில் சம்பளம்.. சாப்பாடு டோக்கனில் ஏமாற்று வேலை.. பணி நீக்கம் செய்த மெட்டா!

ஓப்போ கே12எக்ஸ் 5ஜி

ஓப்போ நிறுவனத்தின் ஓப்போ கே12எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன், பிளிப்கார்ட்டின் பிக் தீபாவளி சேலில் ரூ. 10,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிளிப்கார்ட் சேலில் இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.6,000 தள்ளுபடி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

சிஎம்எஃப் போன் 1

சிஎம்எஃப் போன் 1, பிளிப்கார்ட்டின் பிக் தீபாவளி சேலில் ரூ. 12,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிளிப்கார்ட் சேலில் இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.7,500 தள்ளுபடி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

போக்கோ எஃப்6 5ஜி

போக்கோ நிறுவனத்தின் போக்கோ எஃப்6 5ஜி ஸ்மார்ட்போன், பிளிப்கார்ட்டின் பிக் தீபாவளி சேலில் ரூ. 22,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரூ.33,999-க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Instagram : “Profile Card” அம்சத்தை அறிமுகம் செய்த இன்ஸ்டாகிராம்.. சிறப்பு அம்சங்கள் என்ன?

விவோ டி3 5ஜி

விவோ நிறுவனத்தின் விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன், பிளிப்கார்ட்டின் பிக் தீபாவளி சேலில் ரூ. 15,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிளிப்கார்ட் சேலில் இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.7,000 தள்ளுபடி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

சாம்சங்க் கேலக்ஸி எஸ்23 எஃப்இ

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங்க் கேலக்ஸி எஸ்23 எஃப்இ ஸ்மார்ட்போன், பிளிப்கார்ட்டின் பிக் தீபாவளி சேலில் ரூ. 28,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்ற தளங்களில் சாம்சங்க் கேலக்ஸி எஸ்23 எஃப்இ ஸ்மார்ட்போன் ரூ.54,999-க்கு விற்பனை செய்யபப்டுவது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பிக்சல் 8

கூகுள் நிறுவனத்தின் கூகுள் பிக்சல் 8 ஸ்மார்ட்போன், பிளிப்கார்ட்டின் பிக் தீபாவளி சேலில் ரூ. 36,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்ற தளங்களில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.75,999-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Jio Bharat V3 & V4 : ஜியோ பாரத் வி3 மற்றும் வி4.. வெறும் ரூ.1099-க்கு மொபைல் போன்களை அறிமுகம் செய்த ஜியோ!

ரியல்மி பி2 ப்ரோ 5ஜி

ரியல்மி நிறுவனத்தின் இந்த ரியல்மி பி2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன், பிளிப்கார்ட்டின் பிக் தீபாவளி சேலில் ரூ. 18,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.பிளிப்கார்ட் சேலில் இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.7,000 தள்ளுபடி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Latest News