5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

iPhone 15 : ஐபோன் 15-க்கு ரூ.26,000 வரை தள்ளுபடி.. பிளிப்கார்ட் அதிரடி!

Offer Price | விழாக்காலத்தை முன்னிட்டு பெரும்பாலான நிறுவனங்கள் மொபைல்போன்கள் மற்றும் மின்சாதன பொருட்களுக்கு அதிரடி தள்ளுபடிகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில், பிளிப்கார்ட் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிளிப்கார்ட் பிக் பில்லியன் சேலை அறிவித்தது. அதாவது கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தொடங்கிய இந்த சேல், அக்டோபர் 6 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

iPhone 15 : ஐபோன் 15-க்கு ரூ.26,000 வரை தள்ளுபடி.. பிளிப்கார்ட் அதிரடி!
ஐபோன் 15
vinalin
Vinalin Sweety | Published: 10 Oct 2024 16:14 PM

சமீபத்தில் பிள்ப்கார்ட் நிறுவனத்தின் பிக் பில்லியன் சேல் நடந்து முடிந்த நிலையில் அடுத்ததாக பிக் ஷாப்பிங் உட்சவ் சேலை (Big Shopping Utsav Sale) பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. பிளிப்கார்ட்டின் இந்த அதிரடி சேல் நேற்று முதல் தொடங்கியுள்ள நிலையில் ஸ்மார்ட்போன்கள் முதல் மின்சாதன பொருட்களை வரை மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில், பிளிப்கார்டின் இந்த சேலில் ஐபோன் 15 ச்மார்ட்போன்களுக்கு ரூ.26,000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஐபோன் 15 ஸ்மார்ட்போனுக்கு பிளிக்பார்ட் வழங்கும் சலுகைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Android Tricks : ஆண்ட்ராய்டு பயனர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 5 ட்ரிக்ஸ்.. என்ன என்ன தெரியுமா?

விழாக்கால சலுகையை அறிவித்த பிளிப்கார்ட்

விழாக்காலத்தை முன்னிட்டு பெரும்பாலான நிறுவனங்கள் மொபைல்போன்கள் மற்றும் மின்சாதன பொருட்களுக்கு அதிரடி தள்ளுபடிகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில், பிளிப்கார்ட் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிளிப்கார்ட் பிக் பில்லியன் சேலை அறிவித்தது. அதாவது கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தொடங்கிய இந்த சேல், அக்டோபர் 6 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள் முதல் மின்சாதன பொருட்கள் வரை மிக குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டன. குறிப்பாக ஐபோன் 13 ஸ்மார்ட்போன் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது. அதாவது பிளிப்கார்ட்டில் ஐபோன் 13 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.40,999 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Airtel : இனி மோசடிகள் குறித்து கவலை இல்லை.. ஏர்டெல் வழங்கும் அசத்தல் சேவை.. முற்றிலும் இலவசம்!

பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் உட்சவ் சேல்

பிளிப்கார்ட் நிறுவனம் தற்போது பிக் ஷாப்பிங் உட்சவ் சேலை அறிவித்துள்ள நிலையில், ஐபோன் 15 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு சுமார் ரூ.79,900-க்கு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 15 ஸ்மார்ட்போன், தற்போது பிளிப்கார்ட் தளத்தில் வெறும் ரூ.53,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஐபோன் 15 ஸ்மார்ட்போனுக்கு சுமார் ரூ.26,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஸ்மார்ட்போன் வாங்கும் நபர்களுக்கு இந்த தள்ளுபடி பொருந்தும். ஒருவேளை உங்களிடம் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு இல்லையென்றால் ரூ.57,999-க்கு ஐபோன் 15 ஸ்மார்ட்போனை வாங்கிக்கொள்ளலாம். இதேபோல பழைய ஐபோன்களை எக்ஸ்சேஞ்ச் செய்யும் பட்சத்தில் உங்களுக்கு ரூ.41,900 வரை எக்ஸ்சேஞ்ச் வேல்யூ வழங்கப்படும். அதுமட்டுமன்றி சில குறிப்பிட்ட மாடல் ஐபோன்களுக்கு கூடுதலாக ரூ.2,000 தள்ளுபடி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Flipkart Utsav Sale : மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி.. பிளிப்கார்ட் அதிரடி!

ஐபோன் 15 ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் என்ன?

ஐபோன் 15 ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா XDR டிஸ்பிளே உள்ளது. இதேபோல ஐபோன் 15 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் டிஸ்பிளே உள்ளது. இந்த இரண்டு மாடல்களும் கலக்கலான 5 நிறங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. அதாவது, பிங்க், மஞ்சள், பச்சை, நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பிரட்னஸ் 1600 நிட்ஸ் வரை கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Free Apple AirPod : தீபாவளி சலுகை.. இலவசமாக ஏர்பாட் வழங்கும் ஆப்பிள்.. 2 நாட்களுக்கு மட்டும் தான்.. மிஸ் பண்ணிடாதீங்க!

கேமரா மற்றும் இதர சிறப்பு அம்சங்கள்

இந்த ஐபோன் 15 ஸ்மார்ட்போனில் 48 மெகா பிக்சல் பிரைமரி சென்சார் கேமாரா பொருத்தப்பட்டுள்ளது. ஐபோன் 14 சீரீஸில் 12 மெகா பிக்சல் கேமரா மட்டுமே பொருத்தப்பட்டிருந்த நிலையில், 15 சீரீஸில் 48 மெகா பிக்சல் பிரைமரி சென்சார் கேமாரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐபோன் 15 ஸ்மார்ட்போனில் சிறந்த குவாலிட்டி புகைப்படங்கள் எடுக்க முடியும். இந்த ஸ்மார்ட்போனில் நீடித்து உழைக்கும் பேட்டரி அம்சம் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு டைப் சி சார்சர் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News