5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Instagram Blue Tick : இன்ஸ்டாகிராமில் ப்ளூ டிக் பெறுவது எப்படி.. முழு விவரம் இதோ!

Verification | நடிகர்கள், அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்களில் நடைபெறும் மோசடிகளை தடுப்பதற்கு இந்த ப்ளூ டிக் பெறும் பங்காற்றுகிறது. சமூதாயத்தில் அந்தஸ்து உள்ள நபர்கள் மட்டுமன்றி, சாதரன பொதுமக்களும் இந்த ப்ளூ சிக் அம்சத்தை பெற முடியும். ஆனால் அதற்கு சில தகுதிகள் உள்ளன. அதன் அடிப்படையிலே ப்ளூ டிக் வழங்கப்பட்டு வருகிறது.

Instagram Blue Tick : இன்ஸ்டாகிராமில் ப்ளூ டிக் பெறுவது எப்படி.. முழு விவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 05 Aug 2024 19:47 PM

இன்ஸ்டாகிராம் ப்ளூ டிக் : தற்போது மக்களிடையே சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராம் பயன்பாடு முதல் இடம் வகிக்கிறது. பொழுது போக்கிற்கு மட்டுமன்றி, ரீல்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளதால் மக்கள் தங்களின் பொழுதுபோக்கிற்காக இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் செலவிடுகின்றனர். இன்ஸ்டாகிராமில் திரை பிரபலங்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை அனைவரும் உள்ளனர். அதுமட்டுமன்றி பொதுமக்கள் அதிகம் ஆக்டிவாக இருக்க கூடிய சமூக ஊடகங்களில் இதுவும் ஒன்று. பொழுதுபோக்கு, தகவல் பரிமாற்றம் மட்டுமன்றி இன்ஸ்டாகிராம் மூலம் பலர் வியாபரமும் செய்து வருகின்றனர். இப்படி பலரும் பயன்படுத்தக்க்கூடிய இன்ஸ்டாகிராமில் பல போலி கணக்குகள் உருவாக்கப்பட்டு மோசடிகள் அரங்கேறி வருகின்றன. இதனை தடுக்கும் விதமாக இன்ஸ்டாகிராம் ப்ளூ டிக் அம்சத்தை வைத்துள்ளது. இன்ஸ்டாகிராமால் அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளுக்கு இந்த ப்ளூ டிக் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : Aadhaar PAN Link Status: உங்கள் ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைக்கப்பட்டுள்ளதா.. செக் பண்ணுங்க.. இல்லனா சிக்கல்!

போலி கணக்குகளால் நிகழும் மோசடிகள் 

நடிகர்கள், அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்களில் நடைபெறும் மோசடிகளை தடுப்பதற்கு இந்த ப்ளூ டிக் பெறும் பங்காற்றுகிறது. சமூதாயத்தில் அந்தஸ்து உள்ள நபர்கள் மட்டுமன்றி, சாதரன பொதுமக்களும் இந்த ப்ளூ டிக் அம்சத்தை பெற முடியும். ஆனால் அதற்கு சில தகுதிகள் உள்ளன. அதன் அடிப்படையிலே ப்ளூ டிக் வழங்கப்பட்டு வருகிறது. எனவே ப்ளூ டிக் பெற விரும்பும் நபர்கள் தாங்கள், அதற்கு தகுதியானவர்கள் என்பதை உறுதி செய்த பிறகு விண்ணப்பிக்கலாம். தற்போது இன்ஸ்டாகிராமில் ப்ளூ டிக்கிறகு விண்ணப்பிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

இன்ஸ்டாகிராமில் ப்ளு டிக்-க்கு விண்ணப்பிப்பது எப்படி?

  1. அதற்கு முதலில் நீங்கள் எந்த கணக்கிற்கு ப்ளூ டிக் பெற விரும்புகிறீர்களோ அந்த கணக்கை லாக் இன் செய்துக்கொள்ளுங்கள்.
  2. பிறகு உங்கள் Profile-க்கு செல்லுங்கள்.
  3. அங்கு உள்ள மூன்று கோடுகளை டேப் செய்யுங்கள்.
  4. அதில் உள்ள For Professionals என்பதை கிளிக் செய்து, Account Type and Tools என்பதையும் கிளிக் செய்யுங்கள்.
  5. பிறகு Request Verification என்பதை டேப் செய்யுங்கள்.
  6. இப்போது உங்களது முழு பெயரை டைப் செய்யுங்கள்.
  7. பிறகு திரையில் தோன்றும் அறிவுறுத்தல்களை படித்து சமர்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க : Whatsapp Update : வாட்ஸ்அப்பில் இனி இது ஈசி.. டபுள் டேப் செய்தால் மட்டும் போதும்!

மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றி விண்ணப்பித்த பிறகு நீங்கள் தகுதி உடையவர் என்றால் உங்களது இன்ஸ்டாகிராம் கணக்கு அங்கீகரிக்கப்பட்டு ப்ளூ டிக் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News