BSNL 4G : பிஎஸ்என்எல் 4ஜி சிம் ஆக்டிவேட் செய்வது எப்படி? .. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!
Sim Card | சாரை சாரையாக மக்கள் BSNL-க்கு மாற தொடங்கினர். இந்த சமையத்தை பயன்படுத்திக்கொள்ள நினைத்த BSNL, பயனர்களுக்கு சலுகைகளை வாரி வழங்க தொடங்கி விட்டது. அதுமட்டுமன்றி விரைவில் 5 ஜி சேவையையும் வழங்க திட்டன்மிட்டுள்ளது. இந்நிலையில், BSNL நிறுவனம் 4ஜி மற்றும் 5ஜி சிம் கார்டுகளை விற்பனை செய்ய தொடங்கிவிட்டது.
பிஎஸ்என்எல் சிம் கார்டு : சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ப்ரீ பெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் பிளான்களின் விலையை அதிரடியாக உயர்த்தின. எதிர்பாரத விதமாக விலை உயர்த்தப்பட்டதால் பயனர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஜியோ நிறுவனம் ரீச்சார்ஜ் பிளான்களின் விலையை உயர்த்தியது மட்டுமன்றி, 5ஜி சேவையை பயன்படுத்தவும் கட்டுப்பாடுகளை விதித்தது. ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்த பயனர்களை இது கோபமூட்டும் விதமாக அமைந்தது. இதன் காரணமாக ஏராளமான பயனர்கள் தங்களின் மொபைல் எண்ணை, அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL-க்கு மாற்ற தொடங்கினர். அதன்படி சாரை சாரையாக மக்கள் BSNL-க்கு மாற தொடங்கினர். இந்த சமையத்தை பயன்படுத்திக்கொள்ள நினைத்த BSNL, பயனர்களுக்கு சலுகைகளை வாரி வழங்க தொடங்கி விட்டது. அதுமட்டுமன்றி விரைவில் 5 ஜி சேவையையும் வழங்க திட்டன்மிட்டுள்ளது. இந்நிலையில், BSNL நிறுவனம் 4ஜி மற்றும் 5ஜி சிம் கார்டுகளை விற்பனை செய்ய தொடங்கிவிட்டது.
இதையும் படிங்க : BSNL Recharge Plan: 18 ரூபாய் இருந்தாலே போதும்… பிஎஸ்என்எல் வழங்கும் சூப்பரான ரீசார்ஜ் பிளான்.. மிஸ் பண்ணாதீங்க!
விருப்பம் உள்ள பொதுமக்கள் சந்தை அல்லது BSNL நிறுவனத்திடம் இருந்து சிம் கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம். இந்த நிலையில் ஆந்திர பிரதேசத்தில் கடந்த ஜூலை மாதம் மட்டும் BSNL நிறுவனம் சுமார் 2.7 லட்சம் புதிய இணைப்புகளை புதிய வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி, அங்கு BSNL சந்தாதாரர்களின் எண்ணிக்கை 40 லட்சமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புதியதாக வாங்கிய BSNL சிம் கார்டை ஆக்டிவேட் செய்வது எப்படி என பார்க்கலாம்.
BSNL சிம் கார்டை ஆக்டிவேட் செய்வது எப்படி?
- முதலில் சிம் கார்டை உங்கள் உங்கள் மொபைல் போனில் செலுத்துங்கள்.
- மொபைல் போனில் நெட்வொர்க் குறியீடு வரும் வரை காத்திருங்கள்.
- நெட்வொர்க் குறியீடு தோன்றிய பிறகு போன் ஆப்பை திறந்து 1507 என்ற எண்ணுக்கு கால் செய்யுங்கள்.
- அதில் கூறப்படும் அறிவுரைகளை கவனமாக கேளுங்கள்.
- இந்த நடைமுறைக்கு பிறகு உங்களது சிம் கார்டு ஆக்டிவேட் செய்யப்படும்.
- இதற்கு பிறகு Settings-க்கு சென்று உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்துக்கொள்ளலாம்.
- உங்கள் மொபைலில் மாற்றங்கள் செய்த பிறகு சரியாக இயங்குகிறதா என்பதை ஒருமுறை சோதித்து பார்ப்பது அவசியம்.
இதையும் படிங்க : Zomato food delivery : சில்லறை இல்லனா இனி கவலை வேண்டாம்.. அசத்தல் அம்சத்தை அறிமுகப்படுத்திய சொமேட்டோ!
மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றி நீங்கள் எளிதாக உங்கள் சிம் BSNL சிம் கார்டை சுலபமாக ஆக்டிவேட் செய்துக்கொள்ளலாம்.