Mobile Network : உங்கள் ஸ்மார்ட்போனில் நெட்வொர்க் Slow-வாக உள்ளதா?.. இந்த 5 டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க!
Hacks | அவ்வாறு உங்கள் ஸ்மார்ட்போனில் நெட்வொர்க் மிகவும் மெதுவாக இயங்கினால், இந்த 5 டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம் நெட்வொர்க் வேகமாகவும், சீராகவும் இயங்க வாய்ப்புள்ளது.
மாதிரி புகைப்படம்
சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரது வாழ்விலும் ஸ்மார்ட்போன்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஸ்மார்ட்போன்களில் முக்கியமானது நெட்வொர்க். நெட்வொர்க் இல்லையென்றால் பல வேலைகளை செய்ய முடியாது.
அவ்வாறு உங்கள் ஸ்மார்ட்போனில் நெட்வொர்க் மிகவும் மெதுவாக இயங்கினால், இந்த 5 டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம் நெட்வொர்க் வேகமாகவும், சீராகவும் இயங்க வாய்ப்புள்ளது.
ரீஸ்டார்ட் : உங்கள் மொபைல் போனில் நெட்வொர்க் வேகம் மிக குறைவாக இருக்கும் பட்சத்தில், ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்யுங்கள். இது உங்கள் போனில் உள்ள கிளிட்ச்களை (Glitch) சுத்தம் செய்து நெட்வொர்க் சேவையை சீராக்கும்.
அப்டேட் : உங்கள் மொபைல் போனின் நெட்வொர்க் வேகம் மிக குறைவாக இருந்தால், உங்கள் மொபைல் போன் மற்றும் ஆப்களை அப்டேட் செய்யுங்கள். இதன் மூலம் உங்களுக்கு சீரான் நெட்வொர்க் கிடைக்க வாய்ப்புள்ளது.
கேட்ச் (Catch) : உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஆப்களில் கேட்ச்கள் இருக்க வாய்ப்புள்ளது. அதை சுத்தம் செய்யும்போது நெட்வொர்க் சேவை சீராக இயங்க வாய்ப்புள்ளது.
டேட்டா பயன்பாடு : உங்கள் ஸ்மார்ட்போனின் டேட்டே பயன்பாட்டை பரிசோதியுங்கள். குறிப்பாக நீங்கள் பயன்படுத்தாத செயலிகள் உங்கள் டேட்டாவை எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது என்பதால் அவற்றை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.
நெட்வொர்க் செட்டிங்ஸ் : மேற்கண்ட டிப்ஸ்களை பின்பற்றியும் உங்களது நெட்வொர்க் பிரச்னை தீரவில்லை என்றால், நெட்வொர்க் செட்டிங்ஸை ரீ செட் செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் ஏதேனும் தவறாக செட் செய்யப்பட்டிருந்தால் அது சரிசெய்யப்பட்டு நெட்வொர்க் சேவை சீராகும்.