5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Zomato : தீபாவளியை முன்னிட்டு பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ.. எவ்வளவு தெரியுமா?

Platform Fee | தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அனைத்து பொருட்களும் பொதுமக்களின் வீடுகளுக்கே விநியோகம் செய்யபப்டுகின்றன. உடைகள், அணிகலன்கள் முதல் உணவு வரை அனைத்தும் ஆன்லைனில் விநியோகம் செய்யப்படுகிறது. உணவு ஆர்டர் செய்த 40 முதல் 50 நிமிடங்களுக்கும் உணவும் டெலிவரி செய்யப்படுகிறது.

Zomato : தீபாவளியை முன்னிட்டு பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ.. எவ்வளவு தெரியுமா?
சொமேட்டோ
vinalin
Vinalin Sweety | Updated On: 23 Oct 2024 17:54 PM

வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்வேறு நிறுவனங்கள் சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன. ஆனால், பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ இந்த விழாக்காலத்தை லாபகரமாக மாற்றுவதன் நோக்கில் பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. முன்னதாக வெறும் ரூ.7 ஆக இருந்த சொமேட்டோவின் பிளாட்ஃபார்ம் கட்டணம் இந்த விழாக்காலத்தின் போது ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது சொமேட்டோ பயனர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : BSNL Logo: காவி நிறத்துக்கு மாறிய பிஎஸ்என்எல் லோகோ.. இந்தியா வார்த்தை நீக்கம்!

மக்களின் வாழ்வின் அங்கமாக மாறிய உணவு டெலிவரி செயலிகள்

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அனைத்து பொருட்களும் பொதுமக்களின் வீடுகளுக்கே விநியோகம் செய்யபப்டுகின்றன. உடைகள், அணிகலன்கள் முதல் உணவு வரை அனைத்தும் ஆன்லைனில் விநியோகம் செய்யப்படுகிறது. உணவு ஆர்டர் செய்த 40 முதல் 50 நிமிடங்களுக்கும் உணவும் டெலிவரி செய்யப்படுகிறது. இதனால் ஆன்லைன் உணவு டெலிவரி செயலிகளுக்கு வாடிக்கையாளர்கள் அதிகம். இந்தியாவில் இரண்டு உணவு டெலிவரி நிறுவனங்கள் தான் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன. வாடிக்கையாளர்கள் நலன் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றின் காரணமாக பெரும்பாலான மக்கள் ஸ்விக்கி, சொமேட்டோ ஆகிய இரண்டு உணவு டெலிவரி செயலிகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : Bank Holidays : தீபாவளி தொடர் விடுமுறை.. இந்த 4 நாட்கள் வங்கிகளுக்கு செல்ல திட்டமிடாதீர்கள்!

பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ

வழக்கமான நாட்களை போல் அல்லாமல் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் இந்த ஆன்லைன் உணவு டெலிவரி செயலிகளில் மக்கள் அதிக அளவு உணவை ஆர்டர் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்று ஆன்லைன் உணவு டெலிவரி செயலிகளின் வியாபரம் கலைக்கட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தை பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ள சொமேட்டோ, தனது பிளாட்ஃபார்ம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

இதையும் படிங்க : Budget Smartphone : தீபாவளி சேல்.. பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க!

சொமேட்டோ பிளாட்ஃபார் கட்டணம் ரூ.10 ஆக உயர்வு

தீபாவளி பண்டிகையை விற்பனையை பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ள சொமேட்டோ தனது பிளாட்ஃபார்ம் கட்டணத்தை ரூ.10 ஆக உயர்த்தியுள்ளது. முன்னதாக ரூ.7 ஆக இருந்த சொமேட்டோவின் பிளாட்ஃபார்ம் கட்டணம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து சொமேட்டோ செயலியில் பயனர்களுக்கு அறிவிப்பும் செய்யப்படுகிறது. அந்த அறிவிப்பை பயனர்கள் தற்போது தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : Flipkart Big Diwali Sale : இன்று தொடங்கியது பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்.. ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி!

பயனர்களுக்கு அறிவிப்பு விடுத்த சொமேட்டோ

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொமேட்டோ உணவு டெலிவரி நிறுவனம் தனது பிளாட்ஃபார்ம் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளது.

இது குறித்து செயலியில் அறிவிப்பு வெளியிட்டுள்ள சொமேட்டோ, இந்த கட்டணம் செமோட்டோ தடையின்றி இயங்க உதவி செய்யும். பண்டிகைகால நெரிசலை சமாளிக்க சற்று  விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று சொமேட்டோ கூறியுள்ளது.

Latest News