Price Decreased : ஐபோன் 14 முதல் 15 ப்ரோ மேக்ஸ் வரை.. அதிரடியாக விலை குறைந்த ஸ்மார்ட்போன்கள்.. முழு விவரம் இதோ! - Tamil News | From iphone 14 to iphone 15 pro max price decreased in the effect of budget 2024 | TV9 Tamil

Price Decreased : ஐபோன் 14 முதல் 15 ப்ரோ மேக்ஸ் வரை.. அதிரடியாக விலை குறைந்த ஸ்மார்ட்போன்கள்.. முழு விவரம் இதோ!

Published: 

27 Jul 2024 15:18 PM

iphone price decreased | முன்னதாக செல்போன்களுக்கு 22% இறக்குமதி வரி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பட்ஜெட்டிற்கு பிறகு அது வெறும் 15% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொபைல் போன்களின் விலை குறையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்துள்ளது. 

1 / 62024-

2024- 2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, கடந்த ஜுலை 23 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதன்படி செல்போன் மற்றும் மின்சாதன பொருட்களின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படுவதாக அவர் அறிவித்தார். முன்னதாக செல்போன்களுக்கு 22% இறக்குமதி வரி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பட்ஜெட்டிற்கு பிறகு அது வெறும் 15% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொபைல் போன்களின் விலை குறையும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்துள்ளது. 

2 / 6

ஐபோன் 15 (iphone 15) : 128 ஜிபி கொண்ட ஐபோன் 15-ன் விலை ரூ.79,900 ஆக இருந்த நிலையில் ரூ.79,600 ஆக விலை குறைக்கப்பட்டுள்ளது. 256 ஜிபி கொண்ட ஐபோன் 15-ன் விலை ரூ.89,900 ஆக இருந்த நிலையில் ரூ.89,600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 512 ஜிபி கொண்ட ஐபோன் 15-ன் விலை ரூ. 1,09,900 ஆக இருந்த நிலையில் ரூ.1,09,600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

3 / 6

ஐபோன் 15 பிளஸ் (iphone 15 Plus ) : 128 ஜிபி கொண்ட ஐபோன் 15 பிளஸ் விலை ரூ.89,900 ஆக இருந்த நிலையில், ரூ.89,600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 256 ஜிபி கொண்ட ஐபோன் 15 பிளஸ் விலை ரூ.99,900 ஆக இருந்த நிலையில், ரூ.99,600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 512 ஜிபி கொண்ட ஐபோன் 15 பிளஸ் விலை ரூ.1,19,900 ஆக இருந்த நிலையில், ரூ.1,19,600 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

4 / 6

ஐபோன் 15 ப்ரோ (iphone 15 Pro): 128 ஜிபி கொண்ட ஐபோன் 15 ப்ரோ விலை ரூ.1,34,900 ஆக இருந்த நிலையில், 1,29,800 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 256 ஜிபி கொண்ட ஐபோன் 15 ப்ரோ விலை ரூ.1,44,900 ஆக இருந்த நிலையில், ரூ.1,39,800 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 512 ஜிபி கொண்ட ஐபோன் 15 ப்ரோ விலை ரூ.1,64,900 ஆக இருந்த நிலையில், ரூ.1,59,700 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி 1டிபி கொண்ட ஐபோன் 15 ப்ரோ விலை ரூ.1,84,900 ஆக இருந்த நிலையில், ரூ.1,79,400 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

5 / 6

ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iphone 15 Pro Max):256 ஜிபி கொண்ட ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ரூ.1,59,900 ஆக இருந்த நிலையில், ரூ.1,54,000 ஆக விலை குறைக்கப்பட்டுள்ளது. 512 ஜிபி கொண்ட ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் விலை ரூ.1,79,900 ஆக இருந்த நிலையில், ரூ.1,73,900 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 1 டிபி கொண்ட ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் விலை ரூ.1,99,900 ஆக இருந்த நிலையில், ரூ.1,93,500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

6 / 6

ஐபோன் 14 (iphone 14): 128 ஜிபி கொண்ட ஐபோன் 14 விலை ரூ.69,900 ஆக இருந்த நிலையில், ரூ.69,600 ஆக விலை குறைக்கப்பட்டுள்ளது. 256 ஜிபி கொண்ட ஐபோன் 14 விலை ரூ.79,900 ஆக இருந்த நிலையில், ரூ.79,600 ஆக விலை குறைக்கப்பட்டுள்ளது. 512 ஜிபி கொண்ட ஐபோன் 14 விலை ரூ.99,900 ஆக இருந்த நிலையில், ரூ.99,600 ஆக விலை குறைக்கப்பட்டுள்ளது. 

Follow Us On
Related Stories
Flipkart Big Billion Days Sale : பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்.. ஆப்பிள் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி!
Motorola Edge 50 Neo : மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ இந்தியாவில் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன.. முழு விவரம் இதோ!
Jio Mobile Recharge : கூடுதல் கட்டணம் செலுத்தாமல் ஜியோ ரீச்சார்ஜ் செய்வது எப்படி.. இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
Realme P2 Pro : இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி பி2 ப்ரோ.. விலை மற்றும் சிறப்பு அமங்கள் என்ன.. முழு விவரம் இதோ!
Apple 16 Series : இன்று தொடங்குகிறது ஆப்பிள் 16 சீரீஸ் ப்ரீ புக்கிங்.. எப்படி ஆர்டர் செய்வது.. முழு விவரம் இதோ!
Google Pay Scam : கூகுள் பே, போன் பே பயன்படுத்துறீங்களா உஷார்.. புதுவித மோசடி குறித்து எச்சரிக்கும் சைபர் கிரைம் காவல்துறை!
இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version