Budget Smartphones : Vivo T3X முதல் Moto G64 வரை.. செப்டம்பர் மாதம் வாங்க கூடிய பட்ஜெட் ஸ்மார்ட்போனகள்.. அதுவும் வெறும் ரூ.15,000-க்குள்! - Tamil News | From Vivo T3X to Moto G64 : Best smartphones to buy under 15000 rupees in September 2024 | TV9 Tamil

Budget Smartphones : Vivo T3X முதல் Moto G64 வரை.. செப்டம்பர் மாதம் வாங்க கூடிய பட்ஜெட் ஸ்மார்ட்போனகள்.. அதுவும் வெறும் ரூ.15,000-க்குள்!

Published: 

03 Sep 2024 13:30 PM

Best Buys | முன்பெல்லாம் பல மணி நேரம் காத்திருந்து செய்த வேலைகளை இப்போது வீட்டில் இருந்தபடியே சுலபமாக செய்து முடித்துவிடலாம். இதன் காரணமாக ஸ்மார்ட்போன் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் செப்டம்பர் மாதம் விற்பனையில் உள்ள சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனகள் எவை என்பதை பார்க்கலாம்.

1 / 6கையில்

கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும், நாம் பல வேலைகளை வீட்டில் இருந்த படியே செய்து முடித்துவிடலாம். முன்பெல்லாம் பல மணி நேரம் காத்திருந்து செய்த வேலைகளை இப்போது வீட்டில் இருந்தபடியே சுலபமாக செய்து முடித்துவிடலாம். இதன் காரணமாக ஸ்மார்ட்போன் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் செப்டம்பர் மாதம் விற்பனையில் உள்ள சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனகள் எவை என்பதை பார்க்கலாம்.

2 / 6

சிஎமெஃப் போன் 1 (CMF Phone 1) : மீடியா டெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் அம்சத்துடன் கூடிய இந்த சிஎமெஃப் போன் 1 ஸ்மார்ட்போனில் 6GB RAM மற்றும் 128 GB ஸ்டோரேஜ் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.15,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பிளிப்கார்ட் தளத்தில் வங்கிகளின் சலுகை போக இந்த ஸ்மார்ட்போன் ரூ.15,000-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. 

3 / 6

மோடோரோலா ஜி64 (Motorola G64): மீடியாடெக் டைமன்சிட்டி 7025 ப்ராசஸர் அம்சம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் Full HD + IPC LCD டிஸ்பிளே கொண்டுள்ளது. 6,000 mAh பேட்டரி அம்சத்துடன் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 33W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.14,999-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. 

4 / 6

விவோ டி3எக்ஸ் (Vivo T3X):இந்த விவோ டி3எக்ஸ் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 SoC அம்சம் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 128 GB ஸ்டோரேஜ் உள்ளது. மேலும்  இதன் ஸ்டோரேஜை 1TB வரை நீட்டித்துக்கொள்ள முடியும். இந்த ஸ்மார்ட்போனில் 6,000 mAh பேட்டரி உடன் 44 ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சமும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

5 / 6

போக்கோ எம்6 பிளஸ் (Poco M6 Plus):இந்த போக்கோ எம்6 பிளஸ் ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 AE சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6GB RAM / 128 GB ஸ்டோரேஜ் மற்றும் 8 GB RAM / 128 ஸ்டோரேஜும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5,030 mAh பேட்டரி அம்சத்துடன் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,499 என்பது குறிப்பிடத்தக்கது. 

6 / 6

சாம்சங் கேலக்ஸி எஃப் 1 5ஜி (Samsaung Galaxy F1 5G):சாம்சங் கேலக்ஸி எஃப் 1 5ஜி மீடியாடெக் டைமன்சிட்டி 6100 + பிராசஸர் அம்சத்தை கொண்டுள்ளது. 4GB RAM / 128 GB ஸ்டோஜ் கொண்ட இந்த ஸ்மார்ட்போனை 6GB RAM / 128 GB ஸ்டோரேஜ் வரை பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,490 என்பது குறிப்பிடத்தக்கது. 

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!