5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Google: எல்லாமே AI தானா? கூகுளின் அடுத்த பிளான்.. google I/O நிகழ்வில் முக்கிய அறிவிப்புகள்!

AI Updates: செயற்கை நுண்ணறிவில் அடுத்தகட்டத்திற்கும் நகரும் கூகுள்: கூகுள் ஐ/ஒ நிகழ்வில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகி டெக் பிரியர்களை அதிர வைத்துள்ளது. கடந்த செவ்வாய் அன்று நடைபெற்ற கூகுள் ஐ/ஒ கருத்தரங்கில், கூகுள் செயற்கை நுண்ணறிவான ஜெமினி, ஜெம்மொ மற்றும் அண்ராயிடுக்கான பிரத்தியேக செயற்கை நுண்ணறிவு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

Google: எல்லாமே AI தானா? கூகுளின் அடுத்த பிளான்.. google I/O நிகழ்வில் முக்கிய அறிவிப்புகள்!
சுந்தர் பிச்சை
Follow Us
tamil-tv9
Tamil TV9 | Published: 17 May 2024 14:02 PM

கூகுள் : இன்று ஒரு நாளை நாம் ஸ்மார்ட்போன், இண்டர்நெட் இல்லாமல் கடக்க முடியுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. காலையில் அடிக்கும் அலாரம் முதல் இரவில் தூங்குவது வரை செல்போனும், இண்டர்நெட்டும் நம் வாழ்வில் அங்கமாகிவிட்டது. இந்த தொழில்நுட்ப உலகில் நாம் தவிர்க்க முடியாத ஒன்றுதான் கூகுள். அனைத்து தளங்களிலும் கூகுள் கடை வைத்துள்ளது. மக்களின் அன்றாட தேவைகளை புரிந்து டிஜிட்டல் உலகில் பல மாற்றங்களை கூகுள் கொண்டு வருகிறது. கடந்த செவ்வாய் அன்று நடைபெற்ற கூகுள் ஐ/ஒ கருத்தரங்கில், கூகுள் செயற்கை நுண்ணறிவான ஜெமினி, ஜெம்மொ மற்றும் அண்ராயிடுக்கான பிரத்தியேக செயற்கை நுண்ணறிவு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஜெமினி 1.5 (Gemini 1.5)

கூகுளின் தனித்துவம் வாய்ந்த செயற்கை நுண்ணறிவான ஜெமினி அதன் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதற்கு முன்னர் செயல்பட்டதை விட வேகமாகவும், திறன்வாய்ந்தும் செயலாற்றும் விதமாக 1 மில்லியன் அளவுகளின் கணக்கில் தகவல்களை வழங்குமென கூறப்படுகிறது. இவை அனைத்தும் குறைந்த நேரத்தில் செயலாற்றும் படி வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஜெம்மொ (Gemma)

மேலும், ஜெம்மொ என்ற புதிய செயற்கை நுண்ணறிவு மாதிரியை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. இது டென்சர் ப்ராஸசிங் யூனிட் மற்றும் கிராபிக்ஸ் ப்ராஸசிங் யூனிட்-களுக்கு உகந்ததாக 27 பில்லியன் அளவுருக்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Also Read : ஒன்பிளஸ் ஸ்மார்ட் போன்களின் அடுத்த மாடல்கள் தயார்.. களமிறங்கும் Nord 4!

ஆஸ்க் போட்டோஸ் (Ask Photos)

ஏற்கனவே உள்ள கூகுள் போட்டோஸ் வசதி இனி, ஜெமினி செயற்கை நுண்ணறிவு மூலம் கையாளும் படி எளிமைபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை, Ask Photos என கூகுள் அறிமுகம் செய்துள்ளது. உதாரணத்திற்கு, குறிப்பிட்ட நிகழ்வு, பொருள் அல்லது நபரை குறிப்பிடுவதன் மூலம் நமக்கு தேவையான புகைப்படத்தை இதில் பார்த்துக் கொள்ளலாம்.

ஆண்ட்ராய்ட்-ல் செயற்கை நுண்ணறிவு (AI in Android)

ஆண்ட்ராய்ட் 15-ல் முன்னெடுக்கப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து கூகுள் பெரிதாக எடுத்துக் கூறவில்லை என்றாலும், அதில் பல செயற்கை நுண்ணறிவு சிறப்பம்சங்கள் அறிமுகம் செய்யப்படுமென தெரிவித்துள்ளனர். முன்னதாக பிக்ஸல் மற்றும் சாம்சங் ஸ்மார்ட் போன்களில் செயற்கை நுண்ணறிவு மூலம் மாணவர்கள் பயனடையும் வகையில் இயற்பியல் மற்றும் கணித பாடங்களின் வினாக்களுக்கு விடையளிக்கும் வசதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமின்றி, ஜெமினி நானோ மூலம் எழுத்துக்களை தவிர்த்து சப்தம் மற்றும் நாம் கேட்பதற்கு பதிலளிக்கும் வகையில் உருவாகப்படிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜெமினி நானோ மூலம் நமக்கு வரக்கூடிய மோசடி அழைப்புகளை அடையாளம் காண முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VEO

செயற்கை நுண்ணறிவை கொண்டு காணொளிகளை உருவாக்கும் வகையில் VEO என்ற புதிய அம்சத்தை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. சினிமா தரத்தில் நாம் கூறும் கட்டளைகளின் படி காணொளியை உருவாக்கி கொள்ள முடியுமென கூகுள் தெரிவித்துள்ளது.

Project Astra

இந்நிகழ்வில் முக்கிய அங்கமாக Project Astra இடம்பெற்றிருந்தது. இந்த பிரத்தியேக நுண்ணறிவை கொண்டு குறிப்பிட்ட அறையில் இருக்கும் பொருள்கள், துல்லியமான இருப்பிடம் உள்ளிட்டவற்றை கூற முடிந்தது. இவை ஸ்மார்ட் போன்கள் அல்லது, கண்களில் அணியக்கூடிய ஸ்மார்ட் கண்ணாடிகள் மூலமாக செயலாற்றும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

Latest News