5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Gmail : ஜிமெயிலில் அறிமுகம் செய்யப்பட்ட கேள்வி பதில் அம்சம்.. இனி எல்லாம் ஈசி தான்!

Google | கூகுள் நிறுவனம் தொழில்நுட்பத்தில் இத்தனை சிறந்த இடம் பிடித்துள்ள நிலையில், பயனர்களின் நலனுக்கா கூகுள் நிறுவன சேவைகளில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்யபடும். அந்த வகையில் தற்போது அத்தகைய ஒரு அறிவிப்பை தான் கூகுள் வெளியிட்டுள்ளது. அது என்ன அறிவிப்பு, அதன் பலன்கள் என்ன என விரிவாக பார்க்கலாம். 

Gmail : ஜிமெயிலில் அறிமுகம் செய்யப்பட்ட கேள்வி பதில் அம்சம்.. இனி எல்லாம் ஈசி தான்!
ஜிமெயில் (Jaque Silva/SOPA Images/LightRocket via Getty Images)
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 31 Aug 2024 15:18 PM

கூகுள் நிறுவனத்தில் புதிய அறிவிப்பு : தொழிநுட்ப உலகில் ராஜாவாக இருப்பது கூகுள் நிறுவனம் தான். ஏனென்றால் கூகுள் நிறுவத்திடம் தான் அனைத்து சேவைகளும் உள்ளது. கூகுள் சர்ச், ஜி மெயில், இ மெயில், கூகுள் மேப், யுடியூப்  என பல்வேறு அம்சங்களை தன்னுள் கொண்டுள்ளது கூகுள் நிறுவனம். கூகுளின் இந்த சேவைகள் மூலம் பல கோடி மக்கள் பயனடைந்து வருகின்றனர். மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகவும் கூகுளின் இந்த சேவைகள் மாறிவிட்டன. கூகுள் நிறுவனம் தொழில்நுட்பத்தில் இத்தனை சிறந்த இடம் பிடித்துள்ள நிலையில், பயனர்களின் நலனுக்கா கூகுள் நிறுவன சேவைகளில் அவ்வப்போது சில மாற்றங்கள் செய்யபடும். அந்த வகையில் தற்போது அத்தகைய ஒரு அறிவிப்பை தான் கூகுள் வெளியிட்டுள்ளது. அது என்ன அறிவிப்பு, அதன் பலன்கள் என்ன என விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Telegram : டெலிகிராம் செயலி தடை செய்யப்பட்டால் என்ன செய்வது.. கவலை வேண்டாம்.. இந்த 5 செயலிகள் இருக்கிறதே!

ஜிமெயிலில் கேள்வி பதில் அம்சத்தை அறிமுகப்படுத்திய கூகுள்

தொடர்ந்து பல்வேறு பயனுள்ள அம்சங்களை வெளியிட்டு வரும் கூகுள் நிறுவனம், தற்போது மொபைல் பயனர்களுக்கு ஜிமெயிலில் ஒரு புதிய அம்சத்தை சேர்த்துள்ளது. அதாவது கூகுள் நிறுவனம் ஜிமெயிலில் கேள்வி, பதில் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஜிமெயில் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அம்சம் மூலம் நீங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் பற்றிய கேள்விகளை கேட்கவும், ஜெமினி ஏஐ சாட்பாட் பயன்படுத்தவும் கூகுள் அனுமதிக்க தொடங்கியுள்ளது. இந்த புதிய அம்சம் தற்போது மொபைல் போனிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆனால் இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்டு சாதனங்களில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் ஐஓஎஸ் கொண்ட மொபைல் செயலிகளிலும் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Redmi Note 13: அதிரடி சலுகையுடன் விற்பனையாகும் ரெட்மி நோட் 13.. இதுதான் சரியான நேரம்.. மிஸ் பண்ணிடாதீங்க!

ஜிமெயில் புதிய கேள்வி பதில் அம்சத்தின் பயன்கள் என்ன

குறிப்பாக கூகுளின் இந்த புதிய அம்சத்தை பயன்படுத்தி ஜிமெயில் இன்பாக்ஸ் பற்றி கேள்விகளை ஜெமினியிடம் கேட்கலாம் அல்லது உங்கள் மின்னஞ்சல்களில் குறிப்பிட்ட விவரங்களை கண்டறிதல், படிக்காத செய்திகளை காண்பித்து அனுப்புநரிடம் இருந்து செய்திகளை பார்ப்பது அல்லது உங்கள் இன்பாக்ஸில் உள்ள மின்னஞ்சல்களை சுருக்குமாக கூறுவது உள்ளிட்ட சேவைகளை செய்யும். இது மிகவும் பயனுள்ள அம்சமாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

Latest News