5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Google Pay : இனி வாய்ஸ் மூலமே பணம் அனுப்பலாம்.. டை பண்ண வேண்டிய அவசியம் இல்லை.. கூகுள் பே அதிரடி!

New Update | சாலையோர கடைகள் தொடங்கி பெரிய வணிக கடைகள் வரை யுபிஐ பயன்பாடு உள்ளது. இதனால், யுபிஐ செயலிகளில் வங்கிகள் பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் கூகுள் பேயில் குரல் மூலம் பரிவர்த்தனை செய்யும் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Google Pay : இனி வாய்ஸ் மூலமே பணம் அனுப்பலாம்.. டை பண்ண வேண்டிய அவசியம் இல்லை.. கூகுள் பே அதிரடி!
கோப்பு புகைப்படம் (Photo Credit : Carlina Teteris/Moment/Getty Images)
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 02 Sep 2024 20:04 PM

கூகுள் பேயில் புதிய சேவை அறிமுகம் :  இந்தியாவில் தொழில்நுட்ப வசதி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாததாக மாறியுள்ளது. அந்த வகையில் பல வங்கி கணக்குகளையும் ஒரே மொபைல் செயலி மூலம் எளிதாக கையாளக்கூடியது யுபிஐ வசதி. ஆரம்பத்தில் பெரிய அளவில் வளர்ச்சி இல்லாத நிலையில், ஸ்மார்ட் போன்கள் வந்துவிட்ட பிறகு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. அதற்கேற்ப பல்வேறு செயலிகள் உள்ளன. கூகுள் பே, பேடிஎம், போன்பே என பல்வேறு செயலிகள் உள்ளன. சாலையோர கடைகள் தொடங்கி பெரிய வணிக கடைகள் வரை யுபிஐ பயன்பாடு உள்ளது. இதனால், யுபிஐ செயலிகளில் வங்கிகள் பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் கூகுள் பேயில் குரல் மூலம் பரிவர்த்தனை செய்யும் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Credit Card Scam : கிரெடிட் கார்டு மோசடியில் ரூ.72 லட்சத்தை இழந்த மூதாட்டி.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்..பாதுகாப்பாக இருப்பது எப்படி?

கூகுள் பேயில் இனி வாய்ஸ் மூலம் யுபிஐ பணப் பரிவர்த்தனை

இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு யுபிஐ சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் யுபிஐ சேவை சென்றடைந்துள்ளது. நகரங்கள் முதல் சிறிய கிராமங்கள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ சேவை பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் ஸ்மார்ட்போன் மூலம் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தது தான். கூகுள் பேயில் யுபிஐ பயன்படுத்தி பணம் அனுப்பட்டு வரும் நிலையில், குரல் மூலம் பணம் அனுப்பும் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Realme 13+ 5G : இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி 13+ 5ஜி ஸ்மார்ட்போன்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன.. முழு விவரம் இதோ!

அதன்படி, பயனர்கள் இனி வாடிக்கையாளர்கள் யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதற்கு தங்கள் மொபைல் எண் அல்லது யுபிஐ எண்ணை தட்டச்சு செய்ய தேவையில்லை. அதற்கு மாறாக குரல் மூலமாகவே அந்த தகவல்களை உள்ளீடு செய்து பரிவர்த்தனை செய்துக்கொள்ளலாம்.

இந்தியாவில் UPI சேவை மேலு பல நாடுகளில் பயன்படுத்த வாய்ப்புள்ளது – சக்திகாந்த் தாஸ்

முன்னதாக ஒரு நாள் பயணமாக ஒடிசா சென்ற ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் புவனேஸ்வரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆன்லைன் முறையில் பண பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான தொழில்நுட்பமான UPI, மேலும் பல நாடுகளில் பயன்பாட்டிற்கு வர வாய்ப்புளளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார்.

Latest News