Google Pay: இன்டர்நெட் இல்லனாலும் கவலை வேண்டாம்.. ஈஸியா கூகுள் பே மூலம் பணம் அனுப்பலாம்.. எப்படி?
இந்தியாவில் தொழில்நுட்ப வசதி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாததாக மாறியுள்ளது. அந்த வகையில் பல வங்கி கணக்குகளையும் ஒரே மொபைல் செயலி மூலம் எளிதாக கையாளக்கூடியது யுபிஐ வசதி. ஆரம்பத்தில் பெரிய அளவில் வளர்ச்சி இல்லாத நிலையில், ஸ்மார்ட் போன்கள் வந்துவிட்ட பிறகு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. அதற்கேற்ப பல்வேறு செயலிகள் உள்ளன.
யுபிஐ வசதி: இந்தியாவில் தொழில்நுட்ப வசதி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாததாக மாறியுள்ளது. அந்த வகையில் பல வங்கி கணக்குகளையும் ஒரே மொபைல் செயலி மூலம் எளிதாக கையாளக்கூடியது யுபிஐ வசதி. ஆரம்பத்தில் பெரிய அளவில் வளர்ச்சி இல்லாத நிலையில், ஸ்மார்ட் போன்கள் வந்துவிட்ட பிறகு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. அதற்கேற்ப பல்வேறு செயலிகள் உள்ளன. கூகுள் பே, பேடிஎம், போன்பே என பல்வேறு செயலிகள் உள்ளன. சாலையோர கடைகள் தொடங்கி பெரிய வணிக கடைகள் வரை யுபிஐ பயன்பாடு உள்ளது. இதனால், யுபிஐ செயலிகளில் வங்கிகள் பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர். அதில், ஒன்று தான் இணைய வசதி இல்லாமலேயே பணப் பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும். அது எப்படி என்று தானே நீங்கள் நினைக்கிறீர்கள். அதாவது, கூகுள் பே செயலி மூலம் இணைய வசதி இல்லாமல் பணம் அனுப்ப முடியும். கூகுள் பே மட்டுமில்லாமல் பேடிஎம், போன் பேயிலும் இணைய வசதி இல்லாமல் பணம் அனுப்பலாம். அது எப்படி என்று பார்ப்போம்.
Also Read: பிஎஸ்என்எல் 4ஜி சிம் ஆக்டிவேட் செய்வது எப்படி? .. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!
இணைய வசதி இல்லாமல் பணம் அனுப்பலாம்:
- முதலில் உங்கள் போன்களில் *99# என்று கால் செய்யுங்கள். உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள அதே மொபைல் எண்ணைப் பயன்படுத்தவும்.
- இதன்பின், உங்கள் விருப்பத்திற்கேற்ப மொழியை தேர்ந்தெடுத்து, உங்கள் வங்கி பெயரை உள்ளீட வேண்டும்.
- உங்கள் எண்ணுடன் இணைக்கப்படும் வங்கி கணக்கிகளின் பட்டியல் தோன்றும்.
- அதன்பின், உங்கள் டெபிட் கார்டின் கடைசி 6 இலக்கு எண்கள் மற்றும் காலாவதி தேதிய உள்ளீட வேண்டும்.
- இதை சரியாக செய்துவிட்டால் அடுத்து எப்போது வேண்டுமானாலும் இணைய வசதி இல்லாமல் யுபிஐ மூலம் கட்டணம் செலுத்தலாம்.
வழிமுறைகள்:
உங்கள் மொபையில் டயல் செய்டு, பணம் அனுப்ப 1 என்று அழுத்தவும். நீங்கள் யாருக்கு பணம் அனுப்பி வேண்டுமோ அவரது யுபிஐ ஐடியை உள்ளீட வேண்டும். இதன்பிறகு நீங்கள் அனுப்ப விரும்பும் தொகை உள்ளீட்டு, யுபிஐ நம்பரை உள்ளீட்ட செலுத்த வேண்டும். இந்த சேவையை பயன்படுத்தி ஒருவர் அதிகபட்சமாக ரூ.5000 வரை மட்டும் பணம் அனுப்ப முடியும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது.
Also Read: சூப்பர் பேட்டரி.. அதிவேக சார்ஜிங்.. ஹானர் ரிலீஸ் செய்த 2 மாடல் போன்கள்!
மற்றொரு வழி:
முதலில், உங்கள் யுபிஐ செயலியில் முகப்பு பக்கத்தில் யுபிஐ லைட் அக்டீவேட் (UPI lite Activate) என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுவும். அதில் உங்கள் வங்கி கணக்கை தேர்வு செய்தால் வங்கியுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு மெசேஜ் வரும். இதன்பின், உங்கள் வங்கி கணக்கில் இருந்து எவ்வளவு பணத்தை யுபிஐ லைட் என்ற சேமிக்க வேண்டும் என்பதை உள்ளீடவும். இதன்பின், உங்கள் யுபிஐ பின்னை உள்ளீட்டு எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும் என்பதை முடிவு செய்து அனுப்பலாம் என்பது குறிப்பிடத்தக்கது.