Google Pixel 9 Pro : இன்று தொடங்கியது பிக்சல் 9 ப்ரோ ப்ரீ ஆர்டர் சேல்.. சிறப்பு சலுகைகள் என்ன என்ன? - Tamil News | Google pixel 9 pro pre order sale starts today in India | TV9 Tamil

Google Pixel 9 Pro : இன்று தொடங்கியது பிக்சல் 9 ப்ரோ ப்ரீ ஆர்டர் சேல்.. சிறப்பு சலுகைகள் என்ன என்ன?

Updated On: 

18 Oct 2024 18:22 PM

Pre Sale | கூகுள் பிக்சல் 9 மற்றும் கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்ட உடனே விற்பனை செய்யப்பட்ட நிலையில், அறிமுகம் செய்யப்பட்ட 2 மாதங்கள் கழித்து கூகுள் பிக்சல் 9 ப்ரோ விற்பனைக்கு வருகிறது. 

1 / 6கூகுள்

கூகுள் பிக்சல் 9 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆக்ஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அந்த ஸ்மார்ட்போன்களுக்கு ஃபிளிப்கார்ட்டில் ப்ரீ ஆர்டர் சேல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

2 / 6

கூகுள் பிக்சல் 9 மற்றும் கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்ட உடனே விற்பனை செய்யப்பட்ட நிலையில், அறிமுகம் செய்யப்பட்ட 2 மாதங்கள் கழித்து கூகுள் பிக்சல் 9 ப்ரோ விற்பனைக்கு வருகிறது. 

3 / 6

இந்த ஸ்மார்ட்போன் 16GB+256GB ஸ்டோரேஜ் உடன் விற்பனை செய்யபப்டுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஒரே ஒரு வேரியண்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. 

4 / 6

இந்த ஸ்மார்ட்போன் ரூ.1,09,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், பல இ காமர்ஸ் நிறுவனங்கள் சலுகைகளுடன் சேர்த்து வெறும் ரூ.99.999-க்கு விற்பனை செய்து வருகின்றன.

5 / 6

அந்த வகையில் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு ஃபிளிப்கார்ட் ரூ.10,000 வரை தள்ளுபடி வழங்குகிறது. இதேபோல பிளிப்கார்ட் ஆக்சிஸ் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ரூ.5,500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

6 / 6

பிக்சல் 9 ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்க நீங்கள் ஐபோன் 15 சீரீஸ் ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ் செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு ரூ.27,100 வழங்கப்படும். இதன் மூலம் நீங்கள் ரூ.1,09,999 மதிப்புள்ள பிக்சல் 9 ப்ரோ ஸ்மார்ட்போனை வெறும் ரூ.72,899-க்கு வாங்கிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

அசத்தலான புதிய அம்சங்களை அறிமுகம் செய்த யூடியூப்!
பப்பாளியை அதிகமாக எடுத்துக்கொள்வதை ஏன் தவிர்க்க வேண்டும் தெரியுமா?
கீர்த்தி சுரேஷ் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!
இந்த குழந்தை யார் தெரியுமா..? பிரபல நாயகி!