Google Pixel முதல் Poco வரை.. ஆகஸ்ட் மாதம் அறிமுகமாகவுள்ள ஸ்மார்ட்போன்கள்.. பட்டியல் இதோ! - Tamil News | Google pixel vivo motorola and some other smartphone will be launch in August | TV9 Tamil

Google Pixel முதல் Poco வரை.. ஆகஸ்ட் மாதம் அறிமுகமாகவுள்ள ஸ்மார்ட்போன்கள்.. பட்டியல் இதோ!

Published: 

02 Aug 2024 18:14 PM

Smartphones | ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ள நிலையில், இந்த மாதம் அறிமுகம் செய்யப்படுவதற்காக பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தயாராக உள்ளன. இந்த மாதம் என்ன என்ன ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆக உள்ளது, அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை பார்க்கலாம். 

1 / 6ஆகஸ்ட்

ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ள நிலையில், இந்த மாதம் அறிமுகம் செய்யப்படுவதற்காக பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தயாராக உள்ளன. இந்த மாதம் என்ன என்ன ஸ்மார்ட்போன் அறிமுகம் ஆக உள்ளது, அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை பார்க்கலாம். 

2 / 6

Google Pixel 9 Series : கூகுள் நிறுவனம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி Google Pixel 9 Series மொபைல் போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட அடுத்த நாளே Pixel 9,Pixel 9 Pro, Pixel 9 Pro XL, Pixel 9 Pro Fold உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்த மொபைல் போன்களை ஃபிளிப்கார்ட் மூலம் வாங்கிக்கொள்ளலாம். 

3 / 6

Vivo V40 Series : Vivo V40 Series ஸ்மார்ட்போன்கள் வரும் ஆக்ஸ்ட் 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதன்படி Vivo V40 மற்றும் V40 Pro ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த ஸ்மார்ட்போன்கள் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 மற்றும் மீடியாடெக் டைமன்சிட்டி 92000+ சிப்செட் அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. Vivo V40 Pro ஸ்மார்போனில், 2x ஆப்டிக்கல் சூம் மற்றும் 50 MP அல்ட்ரா வைட் கேமரா அம்சமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

4 / 6

Motorola Edge 50 : Motorola Edge 50 ஆகஸ்ட் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இது உலகின் மிக மெல்லிய தோற்றம் கொண்ட ஸ்மார்ட்போனாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் pOLED டிஸ்பிளே மற்றும் 1900 நிட்ஸ் பிரைட்னஸ் அம்சமும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்கம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 சிப்செட் அம்சம் கொண்டது குறிப்பிடத்தக்கது. 

5 / 6

Honor Magic 6 Pro : Honor Magic 6 Pro ஆகஸ்ட் 2 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் ஹெச்.டி LTPO OLED ஸ்கிரீன் உடன் 120Hz பிரைட்னஸ் அம்சமும் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி RAM உடன் வருகிறது. இது அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

6 / 6

Poco M6 Plus 5G and Poco Buds X1 : Poco M6 Plus 5G and Poco Buds X1 ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த ஸ்மார்ட்போன்களில் 6.8 இன்ச் LED ஸ்கிரீன் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 AE அம்சம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Follow Us On
உங்கள் வாழ்க்கையை அழகாக மாற்ற எளிய வழிகள் இதோ!
கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை வெள்ளையா பிறக்குமா?
உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்யலாம்..?
Exit mobile version