5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Near Me Google Search : ராம் மந்திர் முதல் காஃபி ஷாப் வரை.. 2024-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இடங்கள் இவைதான்!

Google Search 2024 | கூகுள் முகவரிக்கான வழியை காட்டுவது மட்டுமன்றி, நாம் நம்மை சுற்றி ஏதேனும் உள்ளதா என்பதையும் கூட எளிதாக கூகுளின் உதவி மூலம் தெரிந்துக்கொள்ளலாம். உதாரணமாக, எங்கேனும் பெட்ரோல் இல்லாமல் நின்றுவிட்டால் எனக்கு அருகில் ஏதேனும் பெட்ரோல் பங்குகள் உள்ளனவா என்று கூகுளிடம் கேட்டால், அது எத்தனை கிலோ மீட்டர் தொலைவில் பெட்ரோல் பங்க் உள்ளது என்பதையும் அதற்கான வழியையும் காட்டும்.

Near Me Google Search : ராம் மந்திர் முதல் காஃபி ஷாப் வரை.. 2024-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இடங்கள் இவைதான்!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Updated On: 11 Dec 2024 18:53 PM

கூகுள் நிறுவனத்தின் பல்வேறு சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்தினாலும், அதன் மேப் சேவை முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. முன்பெல்லாம், ஒரு முகவரி தெரியவில்லை என்றால், அந்த இடத்திற்கு தனியாக செல்ல யோசிக்கும் நிலை இருந்தது. ஆனால், தற்போது அந்த கவலை எல்லாம் இல்லை. கூகுள் மேப் வசதியுடன் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் செல்லலாம். கூகுளில் முகவரியை பதிவிட்டால் அதுவே, அந்த இடத்திற்கான வழியை காட்டிவிடும். கூகுள் முகவரிக்கான வழியை காட்டுவது மட்டுமன்றி, நாம் நம்மை சுற்றி ஏதேனும் உள்ளதா என்பதையும் கூட எளிதாக கூகுளின் உதவி மூலம் தெரிந்துக்கொள்ளலாம். உதாரணமாக, எங்கேனும் பெட்ரோல் இல்லாமல் நின்றுவிட்டால் எனக்கு அருகில் ஏதேனும் பெட்ரோல் பங்குகள் உள்ளனவா என்று கூகுளிடம் கேட்டால், அது எத்தனை கிலோ மீட்டர் தொலைவில் பெட்ரோல் பங்க் உள்ளது என்பதையும் அதற்கான வழியையும் காட்டும். அந்த வகையில், கடந்த ஆண்டு முழுவதும் Near me என்ற தலைப்பில் பொதுமக்கள் தேடியவற்றை குறித்த பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. அதில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Year in Search 2024 : ஐபிஎல் முதல் ரத்தன் டாடா வரை.. 2024-ல் இந்தியர்கள் அதிகம் தேடிய டாப் 10 விஷயங்கள் இவைதான்!

1. AQI Near Me

கூகுளின் இந்த பட்டியலில் AQI (Air Quality Index) near me என்ற தேடுதல் முதல் இடத்தை பெற்றுள்ளது. AQI என்பது காற்றின் தர கட்டுப்பாட்டு அமைப்பு ஆகும். டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் ஒரு சில பகுதிகள் கடுமையான காற்று மாசை எதிர்க்கொண்டு வரும் நிலையில், AQI குறித்து அதிகம் தேடப்பட்டுள்ளது.

2. Onam Sadhya Near Me

ஓணம் சத்யா என்பது ஓணம் பண்டிகையின் போது பரிமாறப்படும் ஒரு உணவு வகையாகும். இந்த நிலையில், ஓணம் சத்யா எங்கு கிடைக்கும் என ஏராளமான மக்கள் கூகுளில் தேடியுள்ளனர். இதன் காரணமாக, ஓணம் சத்யா இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

3. Ram Mandir Near Me

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கோடி கணக்கான மதிப்பு கொண்ட பிரம்மாண்ட ராமர் கோயில் திறக்கப்பட்டுள்ளது. இந்த ராமர் கோயில் மிகவும் புனிதமாக கருதப்படுவதால் ஏராளமான பொதுமக்கள் ராமர் கோயில் குறித்து தேடியுள்ளனர். இது பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.

4. Sports Bar Near Me

பெரும்பாலான மக்கள் விளையாட்டில் ஆர்வமாக உள்ள நிலையில், விளையாட்டு அம்சங்களை கொண்ட உணவகங்கள், விளையாட்டு அரங்கங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஏராளமான மக்கள் ஸ்போர்ட்ஸ் பார்கள் குறித்து சர்ச் செய்துள்ளனர். இது பட்டியலில் 4வது இடம் பிடித்துள்ளது.

5. Best Bakery Near Me

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் தின்பண்டங்கள் மீது தனி பிரியம் இருக்கும். இந்த நிலையில், பேக்கரிக்கள் குறித்த தேடுதல்கள் 5வது இடத்தை பிடித்துள்ளது.

6. Trendy Cafes Near Me

எந்த ஒரு விஷயம் என்றாலும் அது வித்தியாசமாக இருப்பின் மக்களை அதிகம் ஈர்க்கும். அந்த வகையில் நவீன மயமான காஃபி ஷாப்கள் குறித்து ஏராளமான மக்கள் தேடியுள்ளனர். இது கூகுளின் பட்டியலில் 6வது இடத்தை பிடித்துள்ளது.

7. Polio Drops Near Me

பிறந்த குழந்தைகள் முழுமையான உடல் வளர்ச்சி அடைவதற்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில், ஏராளமான மக்கள் போலியோ சொட்டு மருந்து வழங்கும் இடங்கள் குறித்து மக்கள் அதிகம் தேடியுள்ளனர். இது பட்டியலில் 7வது இடம் பிடித்துள்ளது.

8. Shiv Temple Near Me

கோயில்களுக்கும் மனிதர்களுக்கும் பிரிக்க முடியாத பந்தம் உள்ளது. சாமி தரிசனம் செய்ய கோயிலுக்கு செல்லவில்லை மன அமைதிக்காக கோயிலுக்கு செல்கின்றனர். இந்த நிலையில், சிவன் கோயில்கள் குறித்து கூகுளில் அதிகம் தேடப்பட்டுள்ளது. இது பட்டியலில் 8வது இடம் பிடித்துள்ளது.

9. Best Coffee Near Me

இந்தியர்கள் மத்தியில் காஃபி மற்றும் டீ அருந்தும் பழக்கம் உள்ளது. தங்களது நாளை தொடங்குவதே டீ, காஃபியில் தான் பெரும்பாலானோர் தொடங்குவர். இந்த நிலையில், காஃபி ஷாப்கள் குறித்து ஏராளமான மக்கள் தேடியுள்ளனர். இது பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

10. Hanuman Movie Near Me

2024 ஆம் ஆண்டு அனுமன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில், அது குறித்து ஏராளமான மக்கள் தேடியுள்ளனர். இது பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News