Google AI : இருமும் சத்தத்தை வைத்தே என்ன நோய் என சொல்லும் ஏஐ.. கூகுளின் அசத்தல் கண்டுபிடிப்பு!
New AI tool by Google | சமீபத்தி செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படும் ஏஐ தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி வருகிறது கூகுள் நிறுவனம். இந்த நிலையில், இருமல் சத்தத்தை வைத்தே என்ன நோய் என்பதை கண்டறியும் வகையில் ஒரு புதிய ஏஐ அம்சத்தை தற்போது கூகுள் அறிமுகம் செய்துள்ளது.
கூகுளின் அசத்தல் கண்டுபிடிப்பு : உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று கூகுள். முன்னணி நிறுவனம் மட்டுமன்றி உலகின் முதன்மை நிறுவனமாகவும் கூகுள் உள்ளது. கூகுள் நிறுவனம் வழங்கும் பல்வேறு சேவைகளை, உலகம் முழுவதும் பிள்ளியன் கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். கூகுள் சர்ச், இ மெயில், ஜி மெயில், கூகுள் போட்டோஸ், கூகுள் மேப்ஸ் என கூகுளின் சேவை பட்டியல் நீண்டுக்கொண்டே போகும். இவ்வாறு உலகின் முதன்மை நிறுவனமாக விளங்கும் கூகுள் தனது பிள்ளியன் கணக்கான பயனர்களுக்கு புது புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தி செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படும் ஏஐ தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், இருமல் சத்தத்தை வைத்தே என்ன நோய் என்பதை கண்டறியும் வகையில் ஒரு புதிய ஏஐ அம்சத்தை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. அது என்ன அம்சம், எப்படி செயல்படுகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : WhatsApp : வாட்ஸ்அப்பின் அசத்தலான புதிய ஷார்ட்கட்.. இனி கவலை இல்லை.. என்ன தெரியுமா?
இருமும் சத்தத்தை வைத்தே என்ன நோய் என கூறும் கூகுள் ஏஐ
கூகுளின் இந்த புதிய ஏஐ அம்சம் டிபி உள்ளிட்ட மூச்சு மற்றும் நுறையீரம் தொடர்பாக நோய்களை கண்டறிய பயன்படுத்தப்படுகிறது. மூச்சு மற்றும் இருமல் சத்தத்தை வைத்தே என்ன நோய் உள்ளது என்பதை கண்டுபிடித்துவிடுகிறது. இந்த புதிய அம்சம் இருமல், வித்தியாசமாக மூச்சு விடுவது சுமார் 300 மில்லியன் ஆடியோ சாம்பிள்களை வைத்து சோதனை செய்யப்பட்டுள்ளது. மூச்சு சம்மந்தமான சுகாதார பாதுகாப்பு ஏஐ நிறுவனமான சால்சிட் டெக்னாலஜிஸ் என்ற இந்திய நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ள கூகுள் நிறுவனம். விரைவில் இதனை சுகாதார பாதுகாப்பு இல்லாத அதிக மக்கள் வாழும் பகுதிகளில் ஸ்மார்ட்போன்களில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க : Budget Smartphones : Vivo T3X முதல் Moto G64 வரை.. செப்டம்பர் மாதம் வாங்க கூடிய பட்ஜெட் ஸ்மார்ட்போனகள்.. அதுவும் வெறும் ரூ.15,000-க்குள்!
ஆரம்ப காலத்திலே பிரச்னையை கண்டறிய இது பயனுள்ளதாக இருக்கும்
பாதிக்கப்பட்ட நபர் இருமும் சத்தத்தை வைத்தே அவருக்கு என்ன மாதிரியான பிரச்னை உள்ளது என்பதை இந்த ஏஐ மூலம் சுலபமாக கண்டறிய முடியும். அதுமட்டுமன்றி ஆரம்பகாலத்திலே இதனை கண்டுபிடிப்பதன் மூலம் பெரிய பிரச்னைகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என்று கூறப்படுகிறது. கூகுள் நிறுவனத்தின் இந்த முன்னெடுத்து முறையான மருத்துவ வசதி இல்லாத, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நலிவுற்ற மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.