5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Google Chat : இனி கூகுள் சாட்டில் வீடியோ மெசேஜ் அனுப்பலாம்.. அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்த கூகுள்!

New Feature | கூகுள் நிறுவனம் மக்கள் பயன்படுத்த எளிதான வகையில் தனது செயலிகளில் புதிய புதிய மாற்றங்களை கொண்டு வருவதால், அது பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அந்த வகையில் கூகுள் நிறுவனம் தற்போது ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது கூகுள் சாட்டில், வீடியோ மெசேஜ் அனுப்பும் புதிய அம்சம் தான் அது. 

Google Chat : இனி கூகுள் சாட்டில் வீடியோ மெசேஜ் அனுப்பலாம்.. அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்த கூகுள்!
கூகுள் சாட்
vinalin
Vinalin Sweety | Updated On: 10 Oct 2024 16:50 PM

கூகுள் சாட்டில் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது கூகுள் நிறுவனம். அதாவது, இனி கூகுள் சாட் செய்யும்போது, வீடியோ மெசேஜ் அனுப்ப முடியும் என்ற புதிய அம்சம்தான் அது. கூகுளின் இந்த புதிய முயற்சி, உரையாடலை எளிதாக்க உதவும் என்று கூறப்படுகிறது. சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கூகுளின் இந்த புதிய அம்சம் என்ன, அதன் பயன்கள் என்ன மற்றும் அதனை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Android Tricks : ஆண்ட்ராய்டு பயனர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 5 ட்ரிக்ஸ்.. என்ன என்ன தெரியுமா?

கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனம் எப்பொழுதும் தனது பயனர்களின் தேவைகளை பூர்த்தி செய்யாமல் இருந்ததே இல்லை. காலத்திற்கு ஏற்றார்போல் பயனர்களின் வசதிக்காக அவ்வப்போது பல மாற்றங்களை செய்து வருகிறது. இதன் காரணமாகவே ஏராளமானவர்கள் கூகுள் செயலிகளை பயன்படுத்துகின்றனர். கூகுள் நிறுவனம் மக்கள் பயன்படுத்த எளிதான வகையில் தனது செயலிகளில் புதிய புதிய மாற்றங்களை கொண்டு வருவதால், அது பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அந்த வகையில் கூகுள் நிறுவனம் தற்போது ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது கூகுள் சாட்டில், வீடியோ மெசேஜ் அனுப்பும் புதிய அம்சம் தான் அது.

இதையும் படிங்க : Airtel : இனி மோசடிகள் குறித்து கவலை இல்லை.. ஏர்டெல் வழங்கும் அசத்தல் சேவை.. முற்றிலும் இலவசம்!

கூகுள் சாட்டின் வீடியோ மெசேஜ் அம்சங்கள்

  • கூகுள் சாட்டின் வீடியோ மெசேஜ் அம்சம் உரையாடலை எளிதாக்கும்.
  • நீங்கள் ஒரு வணிக நிறுவனம் அல்லது சேல்ஸ் துறையில் பணியாற்றுகிறீர்கள் என்றால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • உதாரணமாக எதேனும் அறிவிப்புகள் அல்லது ப்ராஜெக்ட் குறித்த அப்டேட்டுகளை தெரிவிக்க இது சிறப்பானதாக இருக்கும்.
  • கூகுள் சாட்டின் இந்த வீடியோ மெசேஜ் அம்சம் நேரத்தை சேமிக்க பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Airtel : 84 நாட்கள் வேலிடிட்டி.. தினமும் 2.5ஜிபி டேட்டா.. ஏர்டெலின் அசத்தலான 3 திட்டங்கள்!

கூகுள் சாட்டின் வீடியோ மெசேஜ் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி?

  • முதலில் கூகுள் சாட் செயலிக்குள் செல்லுங்கள். அங்கு, நீங்கள் குறுஞ்செய்திகளை அனுப்ப பயன்படுத்தும் Compose Box-ஐ கிளிக் செய்யுங்கள்.
  • பிறகு Record Button-ஐ கிளிக் செய்து Video Message என்பதை தேர்வு செய்யுங்கள்.
  • பிறகு நீங்கள் தெரிவிக்க விரும்பும் தகவலை பதிவு செய்யுங்கள்.
  • வீடியோவை பதிவு செய்த பிறகு எல்லாம் சரியாக இருக்கிறது என்று உங்களுக்கு தோன்றினால் Send என்பதை கிளிக் செய்து உங்கள் வீடியோ மெசேஜை அனுப்புங்கள்.

இதையும் படிங்க : Free Apple AirPod : தீபாவளி சலுகை.. இலவசமாக ஏர்பாட் வழங்கும் ஆப்பிள்.. 2 நாட்களுக்கு மட்டும் தான்.. மிஸ் பண்ணிடாதீங்க!

மேற்குறிப்பிட்ட முறையை பயன்படுத்தி நீங்கள் அனுப்பும் வீடியோ மேசேஜ் Direct Message வழியாக தனிநபர், குழுக்களுக்கு சென்று சேர்ந்துவிடும். மற்ற செயலிகளில் குறுஞ்செய்திகளுக்கு ரியாக்ட் அல்லது ரிப்ளை செய்வதை போலவே இந்த வீடியோ மெசேஜ் அம்சமும் மிகவும் எளிமையானது.

இதையும் படிங்க : WhatsApp : மொபைல் எண்ணை பதிவு செய்யாமல் WhatsApp-ல் மெசேஜ் அனுப்புவது எப்படி.. ரொம்ப சிம்பிள்!

கூகுளின் இந்த சிறப்பு அம்சம் கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இன்னும் 15 நாட்களில் அதாவது வரும் அக்டோபர் 25 ஆம் தேதிக்குள் அனைத்து பயனர்களின் பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News