HDFC Bank: இன்று 2 மணி நேரம் UPI சேவை இயங்காது.. ஹெச்டிஎஃப்சி வங்கி அறிவிப்பு!
UPI Service | தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. பொருட்களை வாங்குவது முதல், பணப் பரிவர்த்தனை செய்வது வரை அனைத்தையும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் செய்து முடித்துவிடலாம். முன்னதாக வங்கி மற்றும் ஏடிஎம் இயந்திரங்களை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்து முற்றிலுமாக மாறிவிட்டது.
பொதுமக்களின் வாழ்வில் போன்பே, கூகுள் பே உள்ளிட்ட செயலிகளின் சேவைகள் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், இன்று (நவம்பர் 5) ஹெச்டிஎஃப்சி வங்கியின் யுபிஐ சேவை 2 மணி நேரம் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, வரும் நவம்பர் 23 ஆம் தேதியும் நண்பகல் முதல் யுபிஐ சேவை செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்களின் யுபிஐ சேவைகளை பிற்பகல் 12 மணி முதல் 2 மணி வரை திட்டமிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதையும் படிங்க : FD Interest Rate : 7.15% வரை வட்டி.. பொதுத்துறை வங்கிகளின் நவம்பர் மாத வட்டி விகிதங்கள்!
பணப் பரிவர்த்தனையை எளிதாக்கிய யுபிஐ
தற்போதைய காலக்கட்டத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. பொருட்களை வாங்குவது முதல், பணப் பரிவர்த்தனை செய்வது வரை அனைத்தையும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் செய்து முடித்துவிடலாம். முன்னதாக வங்கி மற்றும் ஏடிஎம் இயந்திரங்களை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்து முற்றிலுமாக மாறிவிட்டது. தற்போது யுபிஐ சேவை மூலம் வீட்டில் இருந்தபடியே பணப் பரிவர்த்தனைகளை செய்து முடித்துவிட முடியும்.
இதையும் படிங்க : நிவா பூபா ஹெல்த் இன்சூரன்ஸ் ஐபிஓ அறிவிப்பு.. 200 பங்குகள் வாங்க எவ்வளவு ஆகும் தெரியுமா?
இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட யுபிஐ
யுபிஐ சேவை இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் யுபிஐ சேவை தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சென்றடைந்துள்ளது. சிறிய கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ சேவை பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக ஸ்மார்ட்போன் மூலம் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்தது கருதப்படுகிறது. இவ்வாறு பொதுமக்களின் அன்றாட வாழ்வின் அங்கமாக யுபிஐ சேவை மாறியுள்ள நிலையில், நாளை 2 மணி நேரம், யுபிஐ சேவை செயல்படாது என்று ஹெச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : WhatsApp : வாட்ஸ்அப்பில் இனி எதுவுமே மிஸ் ஆகாது.. விரைவில் புதிய அம்சத்தை அறிமுகம்!
நாளை 2 மணி நேரம் யுபிஐ சேவை செயல்படாது
நாளை யுபிஐ சேவை 2 மணி நேரம் செயல்படாது என்று ஹெச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில், இன்று (நவம்பர் 5) மற்றும் நவம்பர் 23 ஆம் தேதி ஆகிய நாட்களில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் யுபிஐ சேவை செயல்படாது. அதாவது நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தங்களது வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து யுபிஐ சேவைகளும் இயங்காது என்று அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : Instagram Reels : இன்ஸ்டாகிராமில் ஆடியோ உடன் ரீல்ஸ் டவுன்லோடு செய்வது எப்படி.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!
பராமரிப்பு பணிகள் காரணமாக 2 மணி நேரம் இயங்காது
பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மற்றும் நவம்பர் 23 ஆம் தேதி ஆகிய நாட்களில் யுபிஐ சேவை நிறுத்தி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த பராமரிப்பு காலத்தில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகளின் யுபிஐ பணப் பரிவர்த்தனைகள் மற்றும் RuPay கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள், மொபைல் பேங்கிங், கூகுள் பே, வாட்ஸ்அப் பே, பேடிஎம், மொபிக்விக் உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Smartphone : ஸ்மார்ட்போனை எப்போது மாற்ற வேண்டும்.. இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
எனவே பொதுமக்கள் இந்த கால அளவீட்டை கருத்தில் கொண்டு தங்கள் பரிவர்த்தணை தொடர்பான பணிகளை திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.