5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Google Pay: கூகுள் பே பணம் அனுப்புவதில் பிரச்னையா? – என்ன செய்யலாம்?

Google Pay Customer Care: கூகுள் பே செயலியினுள் சென்று அதில் வலதுப்பக்கம் மேல் பக்கத்தில் உங்களுடைய ஃப்ரோபைல் புகைப்படம் இருக்கும். அதனை கிளில் செய்தால் கீழே பார்த்தால் செட்டிங்ஸ் என்ற ஆப்ஷன் இருக்கும். அதனுள் சென்றால் Help and Feedback என்ற ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்து உள்ளே பார்த்தால் send and recieve money என்ற ஆப்ஷன் இருக்கும்.

Google Pay: கூகுள் பே பணம் அனுப்புவதில் பிரச்னையா? – என்ன செய்யலாம்?
கோப்பு புகைப்படம்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 18 Jul 2024 17:25 PM

யுபிஐ பணப்பரிவர்த்தனை: ஆன்லைன் பணபரிவர்த்தனைகள் கொரோனா காலத்தில் இருந்து மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. மக்களின் கைகளில் பணப்புழக்கம் குறைந்து வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கப்படும் அதே வேளையில் யுபிஐ எனப்படும் பண பரிவர்த்தனை செயலிகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட பல்வேறு செயலிகள் இதற்காக பிரத்யேகமாக செயல்படுகின்றன. இருந்த இடத்தில் இருந்தபடி ஆன்லைன் வழியாக பணம் செலுத்துவது மக்களுக்கும் மிகவும் வசதியாக போய்விட்டது. சாதாரண நடைபாதை கடை தொடங்கி மிகப்பெரிய நிறுவனங்கள் வரை ஆன்லைன் பணபரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றது. ஆனால் இன்டர்நெட் சிக்கல் கிடைப்பதில் சிக்கல், செயலிகள் பயன்பாடு குறையும் போது சில நேரங்களில் நாம் அனுப்பும் பணம் நடுவில் சிக்கிக்கொண்டு விடும். அதாவது நாம் யாருக்கு அனுப்புகிறோமோ அவர்களுக்கும் சென்று சேராது. நமக்கும் திரும்ப வராத நிலை உண்டாகும். அந்த சூழலை எப்படி சரி செய்யலாம் என பார்க்கலாம்.

Also Read: Train Ticket: எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஈஸியா சீட் கிடைக்கணுமா? – இதை ஃபாலோ பண்ணுங்க!

என்ன செய்யலாம்?

இந்த மாதிரியான சமயத்தில் முதலில் பதறாமலும், குழம்பாமலும் இருக்க வேண்டும். பெரும்பாலும் பணப்பரிவர்த்தனைகளின் போது அதில் பணம் பரிவர்த்தனை தோல்வியடைந்தால் எப்போது மீண்டும் கிடைக்கும் என நேரம் காட்டும். 2-3 நாட்கள் என காட்டப்பட்டு சிறிது நேரத்தில் அந்த பணப்பரிவர்த்தனைக்கான முடிவு தெரிந்து விடும். அப்படியும் இல்லாமல் பணம் பற்றிய தகவல் தெரியாமல் கவலைப்படுபவர்கள் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம். அப்படியும் இல்லாமல் பணம் பற்றிய தகவல் தெரியாமல் கவலைப்படுபவர்கள் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

கூகுள் பே செயலியினுள் சென்று அதில் வலதுப்பக்கம் மேல் பக்கத்தில் உங்களுடைய ஃப்ரோபைல் புகைப்படம் இருக்கும். அதனை கிளில் செய்தால் கீழே பார்த்தால் செட்டிங்ஸ் என்ற ஆப்ஷன் இருக்கும். அதனுள் சென்றால் Help and Feedback என்ற ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்து உள்ளே பார்த்தால் send and recieve money என்ற ஆப்ஷன் இருக்கும். அதில் சில ஆப்ஷன்கள் காட்டப்படும். தேவைப்படும் விவரங்களை பதிவு செய்து உங்களுடைய புகார்களை அளிக்கலாம். இது வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியுடன் மெசெஜ் உரையாடலாக அமையும்.

Also Read: Post Office: போஸ்ட் ஆபீஸ் பிளான்கள்.. ஆன்லைனில் பணம் செலுத்துவது எப்படி?

வாடிக்கையாளர்கள் ஒருவேளை சேவை மைய அதிகாரியுடன் பேச வேண்டும் என்றால் செட்டிங்ஸ் உள்ளே சென்று கீழே கடைசியில் பார்த்தால் Get Help என்ற ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்தால் கஸ்டமர் கேர் எண் இருக்கும். அதாவது 1-800-419-0157 என்ற எண்ணுக்கு 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு பேசலாம்.

Latest News