Train Ticket: எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஈஸியா சீட் கிடைக்கணுமா? – இதை ஃபாலோ பண்ணுங்க!
Train Journey: குறைவான கட்டணம், பாதுகாப்பான பயணம், சரியான நேரம் கடைபிடிப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கருத்தில் கொண்டு லட்சக்கணக்கான மக்கள் தினம்தோறும் ரயில் சேவைகளை பயன்படுத்திவருகின்றனர். ஆனால் முன்பதிவு செய்ய சென்றால் பெரும்பாலானோருக்கு டிக்கெட்டுகள் கிடைக்காமல் போகிறது.
ரயில் பயணம்: இந்தியாவில் பேருந்து, ரயில், விமானம் மற்றும் கப்பல் என 4 வகையான போக்குவரத்து செயல்பட்டு வருகிறது. இதில் விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்துக்கான கட்டணம் அதிகளவில் இருப்பதால், பேருந்தை விட பெரும்பாலான மக்களின் விருப்பமான பயணமாக ரயில் போக்குவரத்து அமைகிறது. இந்திய ரயில்வே பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதனடிப்படையில் ரயில் சேவைகளை வழங்கி வருகிறது. குறைவான கட்டணம், பாதுகாப்பான பயணம், சரியான நேரம் கடைபிடிப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கருத்தில் கொண்டு லட்சக்கணக்கான மக்கள் தினம்தோறும் ரயில் சேவைகளை பயன்படுத்திவருகின்றனர். ஆனால் முன்பதிவு செய்ய சென்றால் பெரும்பாலானோருக்கு டிக்கெட்டுகள் கிடைக்காமல் போகிறது. இதனால் இந்திய ரயில்வேயை திட்டாமல் ஒருவரும் இருந்தது இல்லை. சில வழிகளை நாம் பின்பற்றினால் எளிதாக டிக்கெட் பெறலாம்.
எளிதாக டிக்கெட் பெறுவது எப்படி?
இந்திய ரயில்வேயை பொறுத்தவரை பாசஞ்சர், எக்ஸ்பிரஸ், சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், வந்தே பாரத், தேஜஸ் உள்ளிட்ட பல பெயர்களில் கட்டண முறைகளுக்கு ஏற்ப ரயில்களை இயக்கி வருகிறது. இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் பாசஞ்சர் ரயில்களை தவிர்த்து மற்ற ரயில்களில் முன்பதிவு செய்து பயணிக்கும் நடைமுறை இருந்து வருகிறது.
டிக்கெட்டுகள் முன்பதிவு நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும், ஏஜெண்டுகள் மூலமாகவும் நடைபெறும் நிலையில் பல நேரங்களில் டிக்கெட்டுகள் கிடைக்காமல் காத்திருப்போர் பட்டியலில் இடம் கிடைக்கும். இது ரயில் கிளம்புவதற்கு முன்னர் வரை உறுதியாகாமல் இருக்கும். இதனை எப்படி சரி செய்யலாம்?
Also Read: கிச்சனில் இனி ரொம்ப நேரம் செலவிட வேணாம்.. டிப்ஸ் இதோ
நீங்கள் உங்கள் ஊருக்கு டிக்கெட் முன்பதிவு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்ளலாம். உதாரணமாக மதுரையில் இருந்து சென்னை செல்கிறீர்கள் என வைத்துக்கொள்ளலாம். தினமும் சென்னையில் இருந்து மதுரைக்கு பாண்டியன், வைகை, தேஜஸ் ஆகிய 3 ரயில்கள் நேரடியாக செல்கிறது. 7க்கும் மேற்பட்ட ரயில்கள் மதுரை வழியாக பிற ஊர்களுக்கு செல்கிறது.
நீங்கள் பிற ஊர்களில் இருந்து செல்லும் ரயில்களில் சென்னை செல்ல முன்பதிவு செய்ய முயற்சிக்கும்போது மதுரையில் இருந்து வெயிட்டிங் லிஸ்ட் காட்டலாம். இதனால் டிக்கெட் கிடைக்குமா என்ற சந்தேகத்தில் பேருந்து பயணத்துக்கு தயாராவார்கள். ஆனால் நீங்கள் உங்கள் பயணத்தை மதுரையில் தொடங்கினாலும், டிக்கெட்டை ரயில் புறப்படும் இடத்தில் தொடங்குவதாக போட்டால் எளிதாக பயணம் செய்ய இடம் கிடைக்கும்.
Also Read: Behind The Video: பாக்யராஜ் படத்தின் இசை..சூர்யவம்சம் பாடலாக மாறிய கதை!பஃ
அதாவது, கன்னியாகுமரி – சென்னை செல்லும் ரயிலில் புறப்படும் இடத்தில் கன்னியாகுமரியும், சேரும் இடத்தில் சென்னையும் குறிப்பிட்டு விட்டு அதற்கான முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும். ஆனால் Boarding station என்ற இடத்தில் மதுரை என்பதை மறக்காமல் குறிப்பிட வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் டிக்கெட் கன்னியாகுமரியில் இருந்து முன்பதிவு செய்ததாக காட்டப்பட்டு மதுரை வருவதற்குள் பயணி பயணிக்கவில்லை என கூறி டிக்கெட் கேன்சலாகி விடும் என்பதை மறக்க வேண்டாம். இது எந்த ஊருக்கு செல்லும் ரயில்களுக்கும் பொருந்தும் என்பதால் இனிமேல் சற்று முயற்சித்தால் எளிதாக பயணிக்கலாம்.