5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

செல்போன் கேமரா பளிச்சுனு இருக்கணுமா? இந்த விஷயத்தை ஃபாலோ பண்ணுங்க!

Mobile Tips : செல்போன் கேமராவை சுத்தமாக வைத்துக்கொள்வதும் அவசியமாக உள்ளது. அது எப்படி என பார்க்கலாம்

செல்போன் கேமரா பளிச்சுனு இருக்கணுமா? இந்த விஷயத்தை ஃபாலோ பண்ணுங்க!
செல்போன்
Follow Us
tamil-tv9
Tamil TV9 | Published: 14 May 2024 13:49 PM

தற்போதைய நவீன உலகத்தில் ஸ்மார்ட் போன் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறி விட்டது. ஸ்மார்ட் போன் இல்லாதவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவான அளவிலேயே உள்ளது. பலரும் தங்களது ஸ்மார்ட் போனை வாங்கும்போது அதனுடைய கேமரா குவாலிட்டி எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து தான் வாங்குகிறார்கள். சிலர் நல்ல குவாலிட்டி கேமரா வேண்டுமென்றே குறிப்பிட்ட மாடல் செல்போன்களை வாங்குபவர்களும் உண்டு. அப்போது தான் அவர்களது புகைப்படங்கள், வீடியோக்களை சிறப்பாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு லைக்ஸ் மற்றும் ஃபாலோபர்களை அள்ள முடியும் என்று நம்புகின்றனர்.

Also Read : விரல் நுனியில் எலக்ட்ரானிக் வாகன சார்ஜிங் ஸ்டேஷன்: கூகுளில் புதிய வசதி!

இந்த நிலையில் இவ்வளவு முக்கியத்துவம்பெறும் விஷயங்களில் ஒன்றாக உள்ள செல்போன் கேமராவை சுத்தமாக வைத்துக்கொள்வதும் அவசியமாக உள்ளது. அதை சுத்தப்படுத்தவில்லை என்றால் புகைப்படங்களோ, வீடியோக்களோ சரியாக பதிவு ஆகாது. நாம் நினைத்தது போன்ற புகைப்படம் அல்லது வீடியோக்களை எடுக்க முடியாது.

செல்போன் கேமராவை சுத்தம் செய்யும்போது ஃபாலோ செய்ய வேண்டியவை

  1. செல்போன் கேமராவை சுத்தம் செய்வதற்கு முன்பாக உங்களது செல்போனை ஸ்விட்சு ஆப் செய்வது நல்லது
  2. சுத்தம் செய்யும்போது செல்போன் கேமரா லென்ஸில் கீறல்கள் ஏற்படாமல் தடுக்க மென்மையான மைக்ரோஃபைபர் துணியைப் பயன்படுத்துவது நல்லது
  3. லென்ஸை முழுமையாக சுத்தம் செய்ய வட்ட இயக்கத்தில் சுத்தம் செய்ய வேண்டும்
  4. முடிந்தவரைக்கும் செல்போன் கேமரா பகுதியில் தூசியோ, கீரல்களோ ஏற்படாதவாறு பாதுகாப்பாக கையாள வேண்டும்
  5. அதிகப்படியான அழுக்கு இருக்கும் பகுதிகளில் துணியில் லென்ஸ் க்ளீனரை தெளித்துவிட்டு அந்த துணியை வைத்து சுத்தம் செய்யவும்
  6. லென்ஸை சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தம் செய்தால் கேமராவின் ஃபர்பார்மன்ஸ் இன்னும் சிறப்பாக இருக்கும்
  7. துணியால் சுத்தம் செய்யமுடியாத குறுகிய பகுதிகளில் மென்மையான ஃபெர்ஷ்களை வைத்து மென்மையாக சுத்தம் செய்ய வேண்டும்.

செல்போன் கேமரா லென்ஸை சுத்தம் செய்யும் போது செய்யக்கூடாதவை:

  1. லென்ஸ் க்ளீனரை நேரடியாக லென்சின் மீது ஊற்றி சுத்தம் செய்யக்கூடாது
  2. லென்ஸில் உள்ள அழுக்குகளை எடுக்க கூர்மையான ஊசி, சிம் எஜெக்டர் போன்ற கருவிகளை பயன்படுத்த கூடாது
  3. செல்போன் கேமரா லென்ஸை சுத்தம் செய்யும் போது அதிகப்படியான அழுத்தத்தை கொடுத்து தேய்க்க கூடாது
  4. செல்போன் லென்ஸை கை விரல் மற்றும் உள்ளங்கையால் தொடக்கூடாது; அப்படி தொட்டால் தேவையில்லாத கறைகள், எண்ணெய் பிசுக்கள் அதில் ஒட்டிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

Latest News