5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

WhatsApp : மொபைல் எண்ணை பதிவு செய்யாமல் WhatsApp-ல் மெசேஜ் அனுப்புவது எப்படி.. ரொம்ப சிம்பிள்!

Chat | சமீப காலமாகவே மக்கள் மத்தியில் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளின் ஆதிக்கம் அதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வாட்ஸ்அப் செயலி பொழுதுபோக்கிற்காக மட்டுமன்றி பள்ளி, கல்லூரிகள் முதல் அலுவலகங்கள் வரை தகவலை பரிமாறிக்கொள்ள அனைத்து துறைகளும் இந்த செயலியை பயன்படுத்துகின்றன.

WhatsApp : மொபைல் எண்ணை பதிவு செய்யாமல் WhatsApp-ல் மெசேஜ் அனுப்புவது எப்படி.. ரொம்ப சிம்பிள்!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 01 Oct 2024 17:52 PM

வாட்ஸ்அப் செயலியில் மொபைல் எண்ணை பதிவு செய்யாமல் ஒருவருக்கு குறுஞ்செய்தி அனுப்ப முடியாது. இதனால் பலரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். காரணம் குறுஞ்செய்தி அனுப்பவதற்காக மொபைல் எண்ணை பதிவு செய்யும் பட்சத்தில், அதிகப்படியான மற்றும் தேவையற்ற மொபைல் எண்கள் போனில் பதிவாக வாய்ப்புள்ளது. ஆனால் மொபைல் எண்ணை பதிவு செய்யாமலே மெசேஜ் அனுப்பும் வசதி உள்ளது. இந்த நிலையில், வாட்ஸ்அப்பில் மொபைல் எண்ணை பதிவு செய்யாமல் குறுஞ்செய்தி அனுப்புவது எப்படி என விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : OnePlus 12 : ஒன்பிளஸ் 12-க்கு ரூ.9,000 வரை அதிரடி தள்ளுபடி.. விஜய் சேல்ஸின் சூப்பர் ஆஃபர்.. முழு விவரம் இதோ!

சமீப காலமாக மக்கள் மத்தியில் அதிகரித்த வாட்ஸ்அப் பயன்பாடு

சமீப காலமாகவே மக்கள் மத்தியில் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளின் ஆதிக்கம் அதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வாட்ஸ்அப் செயலி பொழுதுபோக்கிற்காக மட்டுமன்றி பள்ளி, கல்லூரிகள் முதல் அலுவலகங்கள் வரை தகவலை பரிமாறிக்கொள்ள அனைத்து துறைகளும் இந்த செயலியை பயன்படுத்துகின்றன. மற்ற சமூக ஊடகங்களை காட்டிலும் வாட்ஸ்அப் செயலி பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் உள்ளதால் அதற்கு பயனர்கள் அதிகம். இருப்பினும் வாட்ஸ்அப் மூலம் சில பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படுகிறது. இந்த நிலையில் வாட்ஸ்அப்பில் மொபைல் எண்ணை பதிவு செய்யாமல் குறுஞ்செய்தி அனுப்புவது எப்படி என விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : iPhone 15 : ரூ.55,999-க்கு விற்பனை செய்யப்படும் ஐபோன் 15 ஸ்மார்ட்போன்.. அதிரடி சலுகை.. மிஸ் பன்னிடாதீங்க!

மொபைல் எண்ணை பதிவு செய்யாமல் வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்புவது எப்படி ?

  • முதலில் உங்கள் மொபைல் போனில் Web Browser ஓபன் செய்துக்கொள்ளுங்கள்.
  • அதில் http://wa.me/ என்பதை பதிவு செய்யுங்கள்.
  • பிறகு அதனை தொடர்ந்து நீங்கள் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டிய மொபைல் எண்ணை டைப் செய்யுங்கள்.
  • உதாரணமாக http://wa.me/ 1234567890 என்று டைப் செய்யுங்கள்.
  • பிறகு Enter அழுத்துங்கள்.
  • இப்போது நீங்கள் குறுஞ்செய்தி அனுப்ப விரும்பும் எண்ணுக்கு செல்லும்.
  • இப்போது நீங்கள் அனுப்ப வேண்டியை செய்தியை டைப் செய்து send என்பதை கிளிக் செய்யுங்கள்.

இதையும் படிங்க : iPhone 16 Series : ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க வரிசையில் நிற்க தேவை இல்லை.. வெறும் 20 நிமிடங்களில் டெலிவரி செய்யும் நிறுவனங்கள்!

மொபைல் எண்ணை பதிவு செய்யாமல் வாட்ஸ்அப் செயலியில் குறுஞ்செய்தி அனுப்ப வேறு சில வழிகள்

  • வாட்ஸ்அப்பில் மொபைல் எண்ணை பதிவு செய்யாமல் குறுஞ்செய்தி அனுப்புவதற்கு Web Browser பயன்படுத்துவது மட்டுமன்றி True Caller செயலியையும் பயன்படுத்தலாம்.
  • அதற்கு முதலில் True Caller செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • பிறகு செயலியை திறந்து அதில் நீங்கள் குறுஞ்செய்தி அனுப்ப விரும்பும் எண்ணை தேடவும்.
  • அப்போது அந்த எண்ணுக்கு அருகில் தோன்றும் வாட்ஸ்அப் ஐகானை தொடவும்.
  • இதற்கு பிறகு நீங்கள் குறுஞ்செய்தி அனுப்ப விரும்பும் எண்ணுடன் சேட் ஓபன் ஆகும்.
  • அதில் நீங்கள் பகிர விரும்பும் தகவலை டைப் செய்து குறுஞ்செய்தி அனுப்பலாம்.

இதையும் படிங்க : Google Pay Scam : கூகுள் பே, போன் பே பயன்படுத்துறீங்களா உஷார்.. புதுவித மோசடி குறித்து எச்சரிக்கும் சைபர் கிரைம் காவல்துறை!

மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றி வாட்ஸ்அப் செயலியில் மொபைல் எண்ணை பதிவு செய்யாமலே குறுஞ்செய்தி அனுப்பலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News