iPhone 16 : ஆப்பிள் ஐபோன் 16-க்கு தடை விதித்த இந்தோனேசியா.. ஏன் தெரியுமா? - Tamil News | Indonesia government banned iPhone 16 smartphone selling in the country | TV9 Tamil

iPhone 16 : ஆப்பிள் ஐபோன் 16-க்கு தடை விதித்த இந்தோனேசியா.. ஏன் தெரியுமா?

Published: 

28 Oct 2024 18:20 PM

Indonesia | ஐபோன் 16 ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது அந்நாட்டில் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளி நாடுகளில் இருந்து ஐபோன் 16 ஸ்மார்ட்போனை வாங்கி பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

1 / 6இந்தோனேசியாவில் கடந்த வாரம் ஐபோன் 16 ஸ்மார்ட்போன் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இனி ஐபோன் 16 ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படாது என்று அந்நாட்டு தொழில்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இந்தோனேசியாவில் கடந்த வாரம் ஐபோன் 16 ஸ்மார்ட்போன் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இனி ஐபோன் 16 ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படாது என்று அந்நாட்டு தொழில்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

2 / 6

ஐபோன் 16 ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது அந்நாட்டில் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளி நாடுகளில் இருந்து ஐபோன் 16 ஸ்மார்ட்போனை வாங்கி பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

3 / 6

இந்தோனேசியாவின் இந்த நடவடிக்கைக்கு முதலீட்டு விவகாரம் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. 1.71 ட்ரில்லியன் ரூபியா முதலீடு செய்ய வேண்டிய நிலையில், வெறும் 1.48 ட்ரில்லியன் ரூபியா முதலீடு செய்யப்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

4 / 6

அதன்படி, இந்தோனேசியாவின் பிரபல இ காமர்ஸ் நிறுவனங்களில் பட்டியலிடப்பட்டிருந்த ஐபோன்கள் அனைத்தும், தற்போது விற்பனை தளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. 

5 / 6

1.71 ட்ரில்லியன் ரூபியா முதலீடு செய்ய வேண்டிய நிலையில், வெறும் 1.48 ட்ரில்லியன் ரூபியா முதலீடு செய்யப்பட்டதால் ஆப்பிள் நிறுவனத்தால் TKDN சான்றிதழை பெற முடியாமல் போய்விட்டது. 

6 / 6

இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது உறுதிமொழிகளை நிறைவேற்றும் வரை, விற்பனை செய்வதற்கான அனுமதி வழங்கப்படாது என்று இந்தோனேசியா அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

நீங்கள் ஒரு விஷயத்தில் வெற்றி பெறாமல் இருக்க காரணம்!
உலகின் பாரம்பரியமான சந்தைகள் பற்றி தெரிஞ்சுகோங்க!
சரும வறட்சிக்கு சிகிச்சை அளிக்கும் கற்றாழை ஜெல்..!
மனித உடலில் உள்ள இரத்தம் ஏன் உப்பாக இருக்கிறது..?