Instagram : திடீரென முடங்கிய இன்ஸ்டாகிராம்.. குறுஞ்செய்தி அனுப்ப முடியாமல் தவிக்கும் பயனர்கள்!
Server Down | இன்று மாலை முதல் இன்ஸ்டாகிராம் செயலி முடங்கியுள்ளதால், குறுஞ்செய்தி அனுப்ப முடியவில்லை என்று ஆயிரக்கணக்கான பயனர்கள் குற்றம்சாட்டியுள்ளானர்.
பிரபல சமூக ஊடக செயலியான இன்ஸ்டாகிராமில் இன்று (அக்டோபர் 29) மாலை முதல் குறுஞ்செய்தி அனுப்ப முடியவில்லை என்று ஆயிரக்கணக்கான பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மாலை 5.14 மணி முதல் இன்ஸ்டாகிராமில் தனிப்பட்ட சேட்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்ப முடிவயில்லை என்றும் குறுஞ்செய்தி அனுப்பினால் Failed to Send என வருவதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : WhatsApp : வாட்ஸ்அப்பில் தீபாவளி பரிசு மோசடி.. ரூ.4.5 லட்சம் பணத்தை இழந்த நபர்.. அதிர்ச்சி சம்பவம்!
பொதுமக்களின் வாழ்வின் அங்கமாக மாறிய இன்ஸ்டாகிராம்
மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலிக்கு உலகம் முழுவதும் பல லட்சம் பயனர்கள் இருக்கின்றனர். பொழுதுபோக்கிற்காக மட்டுமன்றி, சினிமா, கலை, வியாபாரம், என பல தேவைகளுக்காகவும் மக்கள் இந்த இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக ஒவ்வொரு தனி மனிதரும் தங்களுக்கென இன்ஸ்டாகிராமில் ஒரு தனி கணக்கு தொடங்கி அதில் தங்களது புகப்படங்கள், குடும்பம், வேலை, சினிமா, கலை என தங்களுக்கு பிடித்தவற்றை பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க : iPhone 15 Pro : ஐபோன் 15 ப்ரோவுக்கு ரூ.30,000 தள்ளுபடி.. அசத்தல் சலுகையை வழங்கும் பிளிப்கார்ட்!
இன்ஸ்டாகிராம் செயலியில் நமது குடும்ப உறுப்பினர்கள், திரை பிரபலங்கள் ஆகியவர்களை பின்தொடரவும் முடியும். அதன் மூலம அவர்களை பற்றிய தகவல்களை சுலபமாக தெரிந்துக்கொள்ள முடியும். இவ்வாறு பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராமில் பல சிறப்பு அம்சங்கள் நிறைந்துள்ளன. சொல்லப்போனால் இன்ஸ்டாகிராம் பொதுமக்களின் தினசரி வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது.
இதையும் படிங்க : Budget Gifts : ரூ.10,000-க்குள் கிடைக்கும் பட்ஜெட் பொருட்கள்.. தீபாவளிக்கு பரிசு கொடுக்க சிறந்த ஆப்ஷன்!
திடீரென முடிங்கிய இன்ஸ்டாகிராம் செயலி
இவ்வாறு பொதுமக்களின் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கும் இன்ஸ்டாகிராம் செயலி இன்று மாலை முதல் முடங்கியுள்ளதால் பயனர்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளானர். இன்று மாலை 5.14 மணி முதல் இன்ஸ்டாகிராமில் தனிப்பட்ட சேட்களுக்கு குறுஞ்செய்தி அனுப்ப முடியவில்லை என்று ஆயிரக்கணக்கான பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். இதுவரை சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் இந்த பிரச்னை குறித்து புகார் அளித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் ஆயிரக்கணக்கான பயனர்கள் மெட்டா நிறுவனத்தின் எக்ஸ் தளத்தில் இது குறித்து பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : JioBharat 4G : வெறும் ரூ.699-க்கு 4ஜி மொபைல் போன்.. அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்ட ஜியோ!
பகுதி சேவைகள் மட்டும் முடங்கியதால் பயனர்கள் அவதி
இன்ஸ்டாகிராம் செயலியின் சேவைகள் முழுவதுமாக முடங்காமல் பகுதியாக முடங்கியதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, பொதுவாக இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட எந்த செயலிகள் முடங்கினாலும், செயலிகளை பயன்படுத்த முடியாத அளவு முற்றிலுமாக முடங்கிவிடும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் திரையே தெரியாமல் வெள்ளையாக இருக்கும். ஆனால் தற்போது இன்ஸ்டாகிராமில் ஏற்பட்டுள்ள சிக்கல் அதுபோன்றது இல்லை என பயனர்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க : WhatsApp : வாட்ஸ்அப்பில் தொடர்புக்கொள்ள இனி மொபைல் எண் தேவையில்லை.. விரைவில் புதிய அம்சம் அறிமுகம்!
குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டும் முடங்கிய சேவை
தற்போது இன்ஸ்டாகிராமின் பகுதியான சேவைகள் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது, குறுஞ்செய்தி அனுப்புவதில் மட்டும் சிக்கல் உள்ளது. சேட்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் Failed to Send என வருகிறது. அதிலும் சில குறிப்பிட்ட பயனர்கள் மட்டுமே இந்த பிரச்னையை சந்தித்துள்ளனர். குறுஞ்செய்தியை அனுப்ப முடியாத பயனர்களால் கூட ரீல்ஸ், ஸ்டோரி உள்ளிட்டவற்றை பார்க்க முடிகிறது என்றும் இன்ஸ்டாகிராமின் மற்ற பிற சேவைகளை பயன்படுத்த முடிகிறது என்று பயனர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.