Instagram : “Profile Card” அம்சத்தை அறிமுகம் செய்த இன்ஸ்டாகிராம்.. சிறப்பு அம்சங்கள் என்ன?

New Feature | மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலியை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பொழுதுபோக்கிற்காக மட்டுமன்றி, வியாபாரம், சினிமா, கலை என பல தேவைகளுக்காகவும் மக்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகின்றனர்.

Instagram : Profile Card அம்சத்தை அறிமுகம் செய்த இன்ஸ்டாகிராம்.. சிறப்பு அம்சங்கள் என்ன?

இன்ஸ்டாகிராம்

Published: 

16 Oct 2024 19:38 PM

சமீப காலமாக பெரும்பாலான மக்கள் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வரும் நிலையில், பயனர்களுக்கான பல்வேறு புதிய அப்டேட்டுகளை இன்ஸ்டாகிராம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது “Profile Card” என்ற ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய Profile Card அம்சம் என்றால் என்ன, அது எதற்கு பயன்படுகிறது, அதை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Social Media Account : ஒருவர் உயிரிழந்த பிறகு அவரது சமூக வலைதள கணக்குகள் என்ன ஆகும் தெரியுமா?

இன்ஸ்டாகிராம் செயலியில அறிமுகம் செய்யப்பட்ட புதிய அம்சம்

மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலியை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பொழுதுபோக்கிற்காக மட்டுமன்றி, வியாபாரம், சினிமா, கலை என பல தேவைகளுக்காகவும் மக்கள் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக ஒவ்வொரு தனி மனிதரும் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி அதில் தங்களது புகப்படங்கள், குடும்பம், வேலை, சினிமா, கலை என தங்களுக்கு பிடித்தவற்றை பகிர்ந்து வருகின்றனர். சொல்லப்போனால் இன்ஸ்டாகிராம் மக்களின் தினசரி வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.

இதையும் படிங்க : Gmail Scam : ஜிமெயில் பயனர்களை குறிவைக்கும் புதிய மோசடி.. எச்சரிக்கும் அமெரிக்க நிறுவனம்.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?

புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்யும் இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராமின் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், பல புதிய புதிய அம்சங்களை இன்ஸ்டாகிராம் அறிமுகம செய்து வருகிறது. அந்த வகையில், இன்று Profile Card எனும் புதிய அம்சத்தை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது. அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

இன்ஸ்டாகிராமின் Profile Card என்றால் என்ன?

இன்ஸ்டாகிராம் டிஜிட்டல் பிசினஸ் கார்டாக இந்த Profile Card அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்டில் இரண்டு பக்கங்கள் உள்ளன. ஒரு பக்கத்தில் தொழில் குறித்த விவரங்களும், மற்றொரு பக்கத்தில் தனி நபர் விவரங்களும் இடம் பெற்றிருக்கும். இந்த புதிய அம்சம் தொழில் செய்பவர்களுக்கு மட்டுமன்றி தனிநபர்களுக்கும் சேர்த்தே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமின் இந்த புதிய அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : WhatsApp Feature : இனி வாட்ஸ்அப்பிலும் “Chat Theme” செட் செய்யலாம்.. விரைவில் அறிமுகம்!

Profile Card-ன் சிறப்பு அம்சங்கள் என்ன?

இன்ஸ்டாகிராமின் இந்த புதிய அம்சம் அனைவரும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஆன்லைன் வியாபாரம் செய்யும் நபர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த Profile Card அம்சம் மூலம் எளிதாக வாடிக்கையாளர்களை சென்றடைய முடியும் என்றும், இதன் மூலம் மேலும் தொழிலை விரிவடைய செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக QR கோடை சோதனை செய்து அது வெற்றிப்பெற்ற நிலையில், இன்ஸ்டாகிராம் இந்த புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதையும் படிங்க : Google Chat : இனி கூகுள் சாட்டில் வீடியோ மெசேஜ் அனுப்பலாம்.. அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்த கூகுள்!

இன்ஸ்டாகிராமில் Profile Card உருவாக்குவது எப்படி?

அதற்கு முதலில் இன்ஸ்டாகிராமின் Settings-க்கு சென்று Profile என்பதை கிளிக் செய்ய வேண்டும். அங்கு உங்களது தகவல்களை பதிவு செய்து எடிட் செய்ய வேண்டும். எடிட் செய்து முடித்த பிறகு பதிவு செய்து ஷேர் செய்ய வேண்டும். ஒருவேளை நீங்கள் வேறு ஏதேனும் சமூக வலைத்தளங்களில் உங்களது Profile Card-ஐ பகிர விரும்புகிறீர்கள் என்றால் புகைப்படமாக அதை பதிவு செய்து வைத்துக்கொண்டு ஷேர் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

காலை அல்லது இரவு? முட்டை எப்போது சாப்பிடலாம்?
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?
தமிழ்நாட்டின் நகரங்களும் அதன் புனைப் பெயர்களும்...
நடிகை டாப்ஸி பண்ணுவின் சினிமா பயணம்..!