iPhone Price Drop : அதிரடியாக விலை குறைந்த ஐபோன் 14 மற்றும் 15.. ரூ.10,000 வரை தள்ளுபடி.. மிஸ் பண்ணிடாதீங்க!
Offer | ஆப்பிள் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் ஏர்பாடுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆப்பிளின் இந்த புது வரவு குறித்து ஆப்பிள் பயனர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் வாடிக்கையாளர்களை மேலும் உற்சாகபடுத்தும் வகையில் ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் ஐபோன் 14 மற்றும் 15 சீரீஸ்களின் விலையை அதிரடியாக குறைந்துள்ளது.
அதிரடியாக விலை குறைந்த ஆப்பிள் ஐபோன்கள் : ஆப்பிள் நிறுவனத்தில் ஐபோன் 16 சீரீஸ் அறிமுகமாகி உள்ள நிலையில், ஐபோன் 14 மற்றும் 15 மாடல் ஸ்மார்ட்போன்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த ஐபோன் 16 சீரீஸ் நேற்று சந்தையில் அறிமுகமானது. ஆப்பிள் நிறுவனத்தின் “இட்ஸ் க்ளோடைம்” நிகழ்ச்சி கலிஃபோர்னியாவில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த நிகழ்வு ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. காரணம் இந்த நிகழ்ச்சியில் ஆப்பிள் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் ஏர்பாடுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆப்பிளின் இந்த புது வரவு குறித்து ஆப்பிள் பயனர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் வாடிக்கையாளர்களை மேலும் உற்சாகபடுத்தும் வகையில் ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் ஐபோன் 14 மற்றும் 15 சீரீஸ்களின் விலையை அதிரடியாக குறைந்துள்ளது. எந்த மாடல் ஐபோன்களுக்கு எவ்வளவு விலை குறைக்கப்பட்டுள்ளது என்பதை விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Apple Watch : அட்டகாசமான தோற்றம்.. அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான ஆப்பிள் வாட்ச் 10 சீரீஸ் .. முழு விவரம் இதோ!
ஐபோன் 16 அறிமுகத்தையொட்டி விலை குறைக்கப்பட்ட ஐபோன் 14 மற்றும் 15
ஆப்பிள் நிறுவனம் நேற்று தனது ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகப்படுத்தியது. அதில் ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் அடங்கும். இந்த புது வரவு காரணமாக தனது பழை மாடல் போன்களான ஐபோன் 14 மற்றும் 15 சீரீஸ்களுக்கு அதிரடி அலுகையை அறிவித்துள்ளது ஆப்பிள் நிறுவனம். ஆப்பிள் ஐபோன் வாங்க நினைப்பவர்களுக்கு இது சரியான நேரமாக இருக்கும்.
அதிரடியாக விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட் போன்கள்
128 ஜிபி அம்சம் கொண்ட ஐபோன் 15-ன் விலை ரூ.79,900 ஆக இருந்த நிலையில், அது தற்போது ரூ.69,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி சுமார் 10,000 இந்த ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதேபோல ஆப்பிள் ஐபோன் 14 ரூ.69,900-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.59,900-க்கு விற்பனை செய்யபடுகிறது. ஐபோன் 15 போலவே இந்த ஸ்மார்ட்போனுக்கும் ரூ.10,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. இந்த விலை குறைப்பு பட்டியல் ஆப்பிள் நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ விலை குறைப்பு ஆகும். இதுபோல கிரெடிட் கார்டு மற்றும் மேலும் சில சலுகைகளும் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. எனவே நீங்கள் இந்த ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்பினால் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை சோதித்த பிறகு கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட் ஏதேனும் உள்ளதா என பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் சோதித்து பார்பது சிறந்ததாக இருக்கும்.
இதையும் படிங்க : WhatsApp : இனி வாட்ஸ்அப்பில் இருந்து மற்ற செயலிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம்.. விரைவில் புதிய அம்சம் அறிமுகம்!
ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலை என்ன?
ஐபோன் 16 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 799 அமெரிக்க டாலர்களாக உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.67,000 ஆகும். இதேபோல ஐபோன் 16 பிளஸ் ஸ்மார்ட்போன் 899 டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.75,000 ஆகும். 128 ஜிபி ஸ்டோரேஜ் அம்சத்துடன் கூடிய ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட்போன் 999 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ.83,870 ஆகும். இதேபோல 256 ஜிபி ஸ்டோரேஜ் அம்சத்தை கொண்ட ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் 1199 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது இந்திய மதிப்பில் ரூ.1 லட்சம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஐபோன் 16 சீரீஸ் என்ன விலைக்கு விற்பனை செய்யப்படும்?
இந்தியாவில் ஐபோன் 16 ரூ.79,900-க்கும் ஐபோன் 16 பிளஸ் ரூ.89,000-க்கும் பட்டியலிடப்பட்டுள்ளது. இதேபோல ஐபோன் 16 ப்ரோ ரூ.1,19,900-க்கும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ரூ.1,44,900-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : OnePlus : பச்சை கோடு முதல் மதர்போர்டு பிரச்னை வரை.. நீண்ட விளக்கமளித்த ஒன்பிளஸ் நிறுவனம்!
ஐபோன் 16 சீரீஸ் இந்திய சந்தையில் எப்போது கிடைக்கும்?
இந்த ஐபோன் வகைகள் உலக சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், விரைவில் இந்திய சந்தைகளிலும் விற்பனைக்கு வர உள்ளது. இந்த மாடல் ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்பும் நபர்கள் பிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் உள்ளிட்ட இணையதளங்கள் மூலம் ப்ரீ புக் செய்து வாங்கிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.