5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

iPhone 15 Series : அதிரடி தள்ளுபடியுடன் விற்பனையாகும் ஐபோன் 15 சீரீஸ்.. இதுதான் சரியான நேரம்.. மிஸ் பண்ணிடாதீங்க!

Exciting Offers | ஆப்பிள் நிறுவனம் தற்போது தனது 16வது சீரிஸ் மொபைல்களை சந்தையில் அறிமுகம் செய்ய தயாராகி வரும் நிலையில், தனது 15வது சீரிஸ் மொபைல்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்கியுள்ளது. இந்த சலுகைகளை பயன்படுத்தி மிக குறைந்த விலையில் ஐபோன்களை வாங்கிக்கொள்ள முடியும். 

iPhone 15 Series : அதிரடி தள்ளுபடியுடன் விற்பனையாகும் ஐபோன் 15 சீரீஸ்.. இதுதான் சரியான நேரம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
ஐபோன் 15 ப்ரோ (Photo Credit : Apple Website)
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 06 Sep 2024 21:06 PM

அதிரடி தள்ளுபடியுடன் விற்பனையாகும் ஐபோன்கள் : மொபைல் போன் உலகில் ராஜாவாக இருக்கும் ஐபோன்கள் விலையிலும் உச்சத்திலே இருக்கின்றன. பலருக்கு ஐபோன் வாங்குவது ஒரு கனவாகவே உள்ளது. இந்த நிலையில் தான் ஐபோன்கள் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தற்போது தனது 16வது சீரிஸ் மொபைல்களை சந்தையில் அறிமுகம் செய்ய தயாராகி வரும் நிலையில், தனது 15வது சீரிஸ் மொபைல்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்கியுள்ளது. இந்த சலுகைகளை பயன்படுத்தி மிக குறைந்த விலையில் ஐபோன்களை வாங்கிக்கொள்ள முடியும். இந்நிலையில் எந்த எந்த மாடல் போன்களுக்கு எவ்வளவு சலுகை வழங்கப்படுகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Mobile Listening : உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் மொபைல் போன்கள்.. உறுதி செய்த நிறுவனம்.. அதிர்ச்சி தகவல்!

அதிரடி சலுகையுடன் விற்பனையாகும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்

ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் இந்தியாவில் ரூ.1,59,900-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த போன் தற்போது ரிலையன்ஸ் டிஜிட்டலில் ரூ.1,37,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  அதன்படி ரூ.21,910 தள்ளுபடியுடன் வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனை ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாங்குவோருக்கு ரூ.5,000 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை மூலம் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனை நீங்கள் வெறும் ரூ.1,32,990-க்கு வாங்கிக்கொள்ளலாம். இந்த நிலையில் ஐபோன் 15 ப்ரோ பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1.29.800-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 15-க்கு பிளிப்கார்ட் வழங்கும் தள்ளுபடி

128 ஜிபி கொண்ட ஐபோன் 15 பிளிப்க்ஜார்டில் ரூ.79,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஆப்பிள் நிறுபனம் தற்போது 20% தள்ளுபடி வழங்கி வருகிறது. இதன் மூலம் ஐபோனை 15 நீங்கள் வெறும் ரூ.62,999-க்கு வாங்கிக்கொள்ளலாம். ஐபோனின் இந்த அதிரடி சலுகை மூலம் ஐபோன் 15-க்கு ரூ.16,000 வரை நீங்கள் சேமிக்கலாம். அதுமட்டுமன்றி பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு மூலம் ஐபோன் வாங்கும் நபர்களுக்கு 5% கேஷ்பேக் வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

ஐபோன் வாங்க இதுதான் சரியான நேரம் – மிஸ் பண்ணிடாதீங்க!

இதையும் படிங்க : Budget Smartphones : Vivo T3X முதல் Moto G64 வரை.. செப்டம்பர் மாதம் வாங்க கூடிய பட்ஜெட் ஸ்மார்ட்போனகள்.. அதுவும் வெறும் ரூ.15,000-க்குள்!

கூடுதல் அம்சமாக பழைய ஐபோன்களை ரூ.39,600 வரை நீங்கள் எக்ஸ்சேஞ் செய்துக்கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய ஐபோன் வாங்குகிறீர்கள் என்றால் மிகவும் குறைவான விலையில் ஐபோன் வாங்க முடியும். நீண்ட நாட்களாக ஐபோன் வாங்கும் கனவுடன் இருப்பவர்களுக்கு இதைவிட சிறந்த தருணம் கிடைக்காது.

Latest News