iPhone 15 : ரூ.55,999-க்கு விற்பனை செய்யப்படும் ஐபோன் 15 ஸ்மார்ட்போன்.. அதிரடி சலுகை.. மிஸ் பன்னிடாதீங்க!
Special Offer | இந்த ஐபோன் 15 ஸ்மார்ட்போனில் 48 மெகா பிக்சல் பிரைமரி சென்சார் கேமாரா பொருத்தப்பட்டுள்ளது. ஐபோன் 14 சீரீஸில் 12 மெகா பிக்சல் கேமரா மட்டுமே பொருத்தப்பட்டிருந்த நிலையில், 15 சீரீஸில் 48 மெகா பிக்சல் பிரைமரி சென்சார் கேமாரா பொருத்தப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி பிளிப்கார்டில் பிளிப்கார்டில் பிக் பில்லியன் சேல் மற்றும் அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் நடைபெற்றது. இதில் ஸ்மார்ட்போன்கள் முதல் மின்சாத பொருட்கள் வரை அனைத்தும் மிக குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டன. தற்போது இந்த சிறப்பு சலுகைகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்றும் ஐபோன் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் மிக குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், எந்த ஸ்மார்ட்போன்கள் எவ்வளவு விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன, அவற்றுக்கு வேறு ஏதேனும் சலுகைகள் வழங்கப்படுகின்றனவா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Samsung Galaxy S24 FE : சாம்சங் கேலக்ஸி எஸ்24 எஃப்இ இந்தியாவில் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?
ரூ.55,999-க்கு விற்பனை செய்யப்படும் ஐபோன் 15
கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்ற பிளிப்கார்ட் பிக் பில்லியன் சேலில் ஐபோன் 15 ஸ்மார்ட்போன் ரூ.60,000-க்கு கீழ் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் ஐபோன் 15 தற்போது ரூ.55,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 15 ஸ்மார்ட்போன் ரூ.69,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.55,999-க்கு விற்பனை செய்யப்படுவது சிறந்த சலுகையாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க : iPhone 16 Series : வெளிநாடுகளில் இந்தியாவை விட விலை குறைவாக விற்பனை செய்யப்படும் ஐபோன் 16.. எவ்வளவு தெரியுமா?
ஐபோன் 15-க்கு வழங்கப்படும் வங்கி சலுகைகள்
பிளிப்கார்டில் ஐபோன் 15 ஸ்மார்ட்போன் ரூ.55,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், அதற்கு கூடுதலாக வங்கி சலுகைகளும் வழங்கப்படுகின்றன. பிளிப்கார்டில் எச்.டி.எஃப்.சி கிரெடிட் கார்டை பயன்படுத்தி கூடுதலாக ரூ.1,500 சலுகையாக பெறலாம். இதேபோல பிளிப்கார்ட் ஆக்சிஸ் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஐபோன் 15 வாங்குபவர்களுக்கு ரூ.1,900 சலுகையாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஐபோன் 15 ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட்டில் வெறும் ரூ.54,099-க்கு வாங்கிக்கொள்ளலாம் எனபது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : iPhone 16 Series : ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் இப்படி ஒரு பிரச்னையா?.. குழம்பும் பயனர்கள்!
இதுதவிர பழைய ஸ்மார்ட்போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்வதற்கும் சிறப்பு விலை கொடுக்கப்படுகிறது. உதாரணமாக நீங்கள் ஐபோன் 11 ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ் செய்து ஐபோன் 15 வாங்குகிறீர்கள் என்றால் உங்களுக்கு 20,000 வரை தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் நீங்கள் வெறும் ரூ.37,000-க்கு ஐபோன் 15 வாங்கிக் கொள்ளலாம். நீண்ட நாட்களாக ஐபோன் வாங்க விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த தருணமாக இருக்கும்.
இதையும் படிங்க : WhatsApp : இனி வாட்ஸ்அப்பில் இருந்து மற்ற செயலிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம்.. விரைவில் புதிய அம்சம் அறிமுகம்!
ஐபோன் 15 ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் என்ன?
ஐபோன் 15 ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா XDR டிஸ்பிளே உள்ளது. இதேபோல ஐபோன் 15 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் டிஸ்பிளே உள்ளது. இந்த இரண்டு மாடல்களும் கலக்கலான 5 நிறங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. அதாவது, பிங்க், மஞ்சள், பச்சை, நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பிரட்னஸ் 1600 நிட்ஸ் வரை கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : WhatsApp : உங்கள் வாட்ஸ்அப் கணக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டுமா.. அப்போ இத பண்ணுங்க!
கேமரா மற்றும் இதர சிறப்பு அம்சங்கள்
இந்த ஐபோன் 15 ஸ்மார்ட்போனில் 48 மெகா பிக்சல் பிரைமரி சென்சார் கேமாரா பொருத்தப்பட்டுள்ளது. ஐபோன் 14 சீரீஸில் 12 மெகா பிக்சல் கேமரா மட்டுமே பொருத்தப்பட்டிருந்த நிலையில், 15 சீரீஸில் 48 மெகா பிக்சல் பிரைமரி சென்சார் கேமாரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐபோன் 15 ஸ்மார்ட்போனில் சிறந்த குவாலிட்டி புகைப்படங்கள் எடுக்க முடியும். இந்த ஸ்மார்ட்போனில் நீடித்து உழைக்கும் பேட்டரி அம்சம் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு டைப் சி சார்சர் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.