5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

iPhone 16 Series : ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்.. இன்று முதல் இந்தியாவில் விற்பனை தொடக்கம்!

Sale starts today | உலகம் முழுவதும் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த ஐபோன் 16 சீரீஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தையில் அறிமுகமானது. ஆதாவது கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் “இட்ஸ் க்ளோடைம்” நிகழ்ச்சியில் ஆப்பிள் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களான ஆப்பிள் 16, ஆப்பிள் 16 பிளஸ், ஆப்பிள் 16 ப்ரோ மற்றும் ஆப்பிள் 16 ப்ரோ மேக்ஸ் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன.

iPhone 16 Series : ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்.. இன்று முதல் இந்தியாவில் விற்பனை தொடக்கம்!
ஐபோன் 16 சீரீஸ்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 20 Sep 2024 08:50 AM

சமீபத்தில் ஆப்பிள் நிறுவனத்தின், ஆப்பிள் ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிலையில் ஆப்பிள் இன்று முதல் தனது ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனையை இந்தியாவில் தொடங்குகிறது. இந்த நிலையில் ஆப்பிள் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் எப்படி வாங்குவது, அதற்கு வழங்கப்படும் அறிமுக சலுகைகள் மற்று தள்ளுபடிகள் என்ன, ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை வாங்குவது சிறந்ததா, அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது உள்ளிட்ட முக்கிய தகவலக்ளை விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Flipkart Big Billion Days Sale : பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்.. ஆப்பிள் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி!

இட்ஸ் க்ளோடைம் நிகழ்ச்சியில் அறிமுக செய்யப்பட்ட ஆப்பிள் 16 சீரீஸ்

உலகம் முழுவதும் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த ஐபோன் 16 சீரீஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தையில் அறிமுகமானது. ஆதாவது கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் “இட்ஸ் க்ளோடைம்” நிகழ்ச்சியில் ஆப்பிள் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களான ஆப்பிள் 16, ஆப்பிள் 16 பிளஸ், ஆப்பிள் 16 ப்ரோ மற்றும் ஆப்பிள் 16 ப்ரோ மேக்ஸ் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிலையில் அப்பிள் ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் ப்ரீ புக்கிங் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் தொடங்கிய நிலையில் இன்று(20.09.2024) முதல் விற்பனை தொடங்க உள்ளது.

இதையும் படிங்க : Motorola Edge 50 Neo : மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ இந்தியாவில் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன.. முழு விவரம் இதோ!

ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கான சிறப்பு தள்ளுபடிகள் என்ன?

128 ஜிபி கொண்ட ஐபோன் 16 ஸ்மார்ட்போன் ரூ. 79.900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை வாங்க ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு, கோடக் மஹிந்திரா வங்கி கிரெடிட் கார்டு மற்றும் எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.5,000 கேஸ் பேக் கிடைக்கும். இந்த சலுகை ஐசிஐசிஐ வங்கியின் டெபிட் கார்டுக்கும் வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி பழைய ஐபோன்களை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.20,000 வரை பணம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Realme P2 Pro : இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி பி2 ப்ரோ.. விலை மற்றும் சிறப்பு அமங்கள் என்ன.. முழு விவரம் இதோ!

ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலை பட்டியல்

ஐபோன் 16 ஸ்மார்ட்போன் : 128 ஸ்டோரேஜ் ஜிபி அமசம் கொண்ட ஐபோன் 16 ஸ்மார்ட் போன் ரூ.79,900-க்கு விற்பனை செய்யபப்டுகிறது. இதேபோல 256 ஜிபி ஸ்ட்ரோரேஜ் அம்சம் ஐபோன் 16 ஸ்மார்ட் போன் ரூ.89,900-க்கு 512 ஜிபி ஸ்டோரேஜ் அம்சம் கொண்ட ஐபோன் 16 ஸ்மார்ட் போன் ரூ.1,09,900-க்கும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 16 பிளஸ் ஸ்மார்ட்போன் : 128 ஸ்டோரேஜ் ஜிபி அமசம் கொண்ட ஐபோன் 16 பிளஸ் ஸ்மார்ட் போன் ரூ.89,900-க்கு விற்பனை செய்யபப்டுகிறது. இதேபோல 256 ஜிபி ஸ்ட்ரோரேஜ் அம்சம் ஐபோன் 16 பிளஸ் ஸ்மார்ட் போன் ரூ.99,900-க்கும், 512 ஜிபி ஸ்டோரேஜ் அம்சம் கொண்ட ஐபோன் 16 பிளஸ் ஸ்மார்ட் போன் ரூ.1,11,900-க்கும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Google Pay Scam : கூகுள் பே, போன் பே பயன்படுத்துறீங்களா உஷார்.. புதுவித மோசடி குறித்து எச்சரிக்கும் சைபர் கிரைம் காவல்துறை!

ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட்போன் : 128 ஸ்டோரேஜ் ஜிபி அமசம் கொண்ட ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட் போன் ரூ.1,19,900-க்கு விற்பனை செய்யபப்டுகிறது. இதேபோல 256 ஜிபி ஸ்ட்ரோரேஜ் அம்சம் ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட் போன் ரூ.1,29,900-க்கும், 512 ஜிபி ஸ்டோரேஜ் அம்சம் கொண்ட ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட் போன் ரூ.1,49,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 1 டிபி ஸ்டோரேஜ் அம்சம் கொண்ட ஐபோன் 16 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.1,69,900-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் : 256 ஜிபி அமசம் ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் 16 ஸ்மார்ட் ப்ரோ மேக்ஸ் போன் ரூ.1,44,900-க்கு விற்பனை செய்யபப்டுகிறது. இதேபோல 512 ஜிபி ஸ்டோரேஜ் அம்சம் கொண்ட ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட் போன் ரூ.1,64,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 1 டிபி ஸ்டோரேஜ் அம்சம் கொண்ட ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.1,84,900-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Latest News