5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Reliance Jio : ஜியோ பயனர்களுக்கு இனிப்பான செய்தி.. தீபாவளியை முன்னிட்டு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஜியோ!

Special Offer | இந்தியாவின் மாபெரும் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தனது இரண்டு ப்ரீ பெய்டு திட்டங்களுக்கு ரூ.3,350 மதிப்புள்ள வவுச்சர் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

Reliance Jio : ஜியோ பயனர்களுக்கு இனிப்பான செய்தி.. தீபாவளியை முன்னிட்டு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஜியோ!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Updated On: 25 Oct 2024 19:34 PM

வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட இ காமர்ஸ் நிறுவனங்கள் சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவின் மாபெரும் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தனது இரண்டு ப்ரீ பெய்டு திட்டங்களுக்கு ரூ.3,350 மதிப்புள்ள வவுச்சர் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. எந்த எந்த திட்டங்களுக்கு இந்த சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது என்று விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Sony WF-L910 : சோனி WF-L910 LinkBuds Open இந்தியாவில் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் இதோ!

தீபாவளி சிறப்பு சலுகையை அறிவித்த ஜியோ

தீபாவளி பண்டிகை கொண்டாட இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பல நிறுவனங்கள் தங்களது தீபாளி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளன. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் உள்ளிட்ட இ காமர்ஸ் நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மின்சாதன் பொருட்களுக்கு அதிரடி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கி வருகின்றன. குறிப்பாக ஐபோன் 13 ஸ்மார்ட்போன் முதல் சமீபத்தில் வெளியான ஐபோன் 16 சீரீஸ் வரை அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த தள்ளுபடிகளை வழங்கியுள்ளன. அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தீபாவளி சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : YouTube Scam : ஆசைக்காட்டி மோசம் செய்த கும்பல்.. யூடியூப் மோசடியில் சிக்கி ரூ.56.7 லட்சத்தை இழந்த நபர்!

இரண்டு ப்ரீ பெய்டு திட்டங்களுக்கு சிறப்பு வவுச்சர்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வழங்கும் இரண்டு ப்ரீ பெய்டு ரீச்சர்ஜ் திட்டங்களுக்கு ரூ.3,350 மதிப்புள்ள வவுச்சரை அறிவித்துள்ளது. அதாவது, ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.899 மற்றும் ரூ.3,599-க்கான ப்ரீ பெய்டு ரீச்சார் திட்டங்களை பயன்படுத்தி ரீச்சார்ஜ் செய்யும் பயனர்களுக்கு ரூ.3,350 மதிப்பிலான வவுச்சர் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 25 ஆம் தேதி முதல் நவம்பர் 5 ஆம் தேதி வரை இந்த திட்டங்களை பயன்படுத்தி ரீச்சார்ஜ் செய்யும் பயனர்கள் இந்த சிறப்பு சலுகையின் மூலம் பயனடையலாம்.

இதையும் படிங்க : Airtel : ப்ரீபெய்டு திட்டங்களுக்கு காப்பீட்டு பலன்களை வழங்கும் ஏர்டெல்.. அந்த 3 திட்டங்களின் சிறப்பு அம்சங்கள் என்ன?

அவ்வாறு அந்த இரண்டு திட்டங்களை பயன்படுத்தி ரீச்சார்ஜ் செய்யும் பயனர்களுக்கு ரூ.3,350-க்கான வவுச்சர் கிடைக்கும். அந்த வவுச்சரை ஏஜியோ, ஸ்விக்கி உள்ளிட்டவற்றில் க்ளெய்ம் செய்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.899 மற்றும் ரூ.3,599 ரீச்சார்ஜ் திட்டங்களுக்கான சிறப்பு பலன்கள்

ரூ.899-க்கான ரீச்சார்ஜ் திட்டம்

இந்த ரூ.899-க்கான ரீச்சார்ஜ் திட்டத்தில் பயனர்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டே வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி கூடுதலாக 20 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மொத்த வேலிடிட்டி நாட்கள் 90 ஆக உள்ள நிலையில், திட்டம் முழுவதும் தினமும் 100 இலவச குறுஞ்செய்தி அனுப்பும் சிறப்பு அம்சமும் வழங்கப்படுகிறது.

ரூ.3,599-க்கான ரீசசர்ஜ் திட்டம்

இந்த ரூ.3,599-க்கான ரீச்சார்ஜ் திட்டத்தில் பயனர்களுக்கு தினமும் 2.5 ஜிபி டேட்டே வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை பயன்படுத்தி ரீச்சார்ஜ் செய்தால் ஆண்டு முழுவதும் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை பயன்படுத்தி ரீச்சார்ஜ் செய்தால் ஆண்டு முழுவதும் தினமும் 100 இலவச குறுஞ்செய்தி அனுப்பும் சிறப்பு அம்சமும் வழங்கப்பட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Amazon Prime : இனி திரைப்படங்களுக்கு நடுவே விளம்பரம் தோன்றும்.. பயனர்களுக்கு ஷாக் கொடுத்த அமேசான்!

ஜியோவில் இந்த ரூ.3,350-க்கான வவுச்சரில் ரூ.3,000 EaseMyTrip-ல் ஹோட்டல் மற்றும் பயணத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். ரூ.999-க்கு மேல் பொருட்களை வாங்கினால் ஏஜியோவில் ரூ.200 தள்ளுபடி வழங்கப்படும். மேலும், ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்யும்போது ரூ.150-க்கான வவுச்சரை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News