ரூ.29க்கு ஓடிடி சேவை கொடுக்கும் ஜியோ.. நெட்பிளிக்ஸ், அமேசானுக்கு போட்டியா?
Jio Cinema : ஜியோ ரூ.29 மற்றும் ரூ.89 மாதாந்திர விளம்பரமில்லாத ஜியோசினிமா பிரீமியம் திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. ரூ.29 திட்டம் ஒரு நபர் சாதனத்தை ஆதரிக்கிறது. அதே நேரத்தில் ரூ.89 குடும்பத் திட்டம் நான்கு சாதனங்களில் ஒரே நேரத்தில் ஸ்ட்ரீமிங்கை அனுமதிக்கிறது. 4K உள்ளடக்கம் மற்றும் பிரத்யேக தொடர்களை வழங்குகிறது.
ஜியோ : மிக மலிவான ₹29 மாதாந்திர திட்டத்தின் கீழ் சில உள்ளூர் மொழி உள்ளடக்கத்தை ஜியோ சினிமா ஒளிபரப்புகிறது. இது, இந்தியாவின் ஒடிடி (OTT) சந்தையை விரிவுபடுத்தும் திறனை நோக்கமாக கொண்டுள்ளது. இதனால், நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ சந்தாதாரர்களின் பாக்கெட்டில் கை வைக்காமல், ஜியோ சினிமாவின் சலுகை புதிய மற்றும் பழைய பார்வையாளர்களுக்கு கூடுதல் விருப்பமாக இருக்கும். எனினும், இதன் வெற்றியானது தளத்தின் உள்ளடக்கத்தை சார்ந்துள்ளது என்று ஊடகத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த மாத இறுதியில், ஜியோ சினிமா தனது பிரீமியம் திட்டத்தில் அசல் தொடர்கள், திரைப்படங்கள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் மற்றும் டிவி பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் விளம்பரமில்லாத சேவைகளை வழங்கியது.
ஜியோ ஒடிடி குடும்பத் திட்டம்
இது மட்டுமின்றி, ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்ய பயனர்களை அனுமதிக்கும் குடும்பத் திட்டத்தை மாதம் ₹89க்கு நிறுவனம் வழங்கும். தற்போது நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மற்றும் சில பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உட்பட இதில் வருகிறது. கடந்த ஆண்டு, விளம்பரமில்லா ஹாலிவுட் படங்கள் சேவை, மற்றும் விளம்பர ஆதரவுடன் உள்ளூர் மொழி சேவையை ₹999ல் ஆண்டுக்கு வழங்கியது.
இருப்பினும், இந்தியாவில் ஸ்ட்ரீமிங் சுற்றுச்சூழலில் புதிய திட்டத்தின் சாத்தியமான விளைவுகள் குறித்த மின்ட்டின் கேள்விகளுக்கு ஜியோசினிமா பதிலளிக்கவில்லை.
நெட்பிளிக்ஸ், அமேசானுக்கு போட்டியா?
இதற்கிடையில், கடந்த மாதம் ஏவிஐஏவின் ஃபியூச்சர் ஆஃப் வீடியோ இந்தியா உச்சிமாநாட்டில் பேசிய வயாகாம்18 மீடியா பிரைவேட் லிமிடெட் தலைமை செயல் அதிகாரி கிரண் மணி, “தொழில்நுட்பம் முடிந்தவரை பல இந்தியர்களுக்கு பிரீமியம் க்யூரேட்டட் உள்ளடக்க அனுபவங்களை அணுக உதவும்” என்றார்.
தொடர்ந்து, “போட்டியாளர்களின் விலையில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் குறைவாக இருப்பதால், அதற்கு ஐந்து மடங்கு பணம் சந்தாதாரர்கள் தேவைப்படுவார்கள்” என்றார்.
இந்த நிலையில் இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “₹29 மாதாந்திர திட்டத்துடன், நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ போன்ற போட்டியாளர்களின் சந்தாதாரர்களை கபளீகரம் செய்ய விருப்பம் இல்லை” எனத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்தியாவில் எஸ்விஓடி வருவாய் 19% சிஏஜிஆர் இல் வளர்ந்து 2022 இல் $1.2 பில்லியனில் இருந்து $2.9 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஏ.வி.ஓ.டி வருவாய் $1.15 பில்லியனில் இருந்து $2.42 பில்லியனாக அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
நெட்பிளிக்ஸ் விளம்பரங்கள்
நெட்பிளிக்ஸ் (Netflix) திட்டங்களுக்கு உலகளவில் 40 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர். பயனர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு சில குறுகிய விளம்பரங்களைப் பார்க்கலாம். மேலும் குறிப்பிட்ட டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுக்கு முன்னும் பின்னும் விளம்பரங்கள் தோன்றக்கூடும்.
புதிதாக வெளியிடப்படும் சில திரைப்படங்கள் தொடங்கும் முன் மட்டுமே விளம்பரங்களைக் கொண்டிருக்கலாம். மேலும் விளம்பரங்களைத் தவிர்ப்பது உள்ளிட்ட வசதியும் உண்டு.
இதையும் படிங்க : புதிய தோற்றத்தில் வாட்ஸ்அப் செயலி: இதை கவனித்தீர்களா?