Jio Recharge : அசத்தல் அம்சங்களுடன் 2 புதிய ரீச்சார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்த ஜியோ!
New Recharge Plans | நீண்ட நாட்கள் வேலிடிட்டி கொண்ட அசத்தலான இரண்டு ரீச்சார்ஜ் திட்டங்களை ஜியோ தற்போது அறிமுகம் செய்துள்ளது. ஜியோவில் ஏற்கனவே பல சிறப்பு அம்சங்களுடன் ரீச்சார்ஜ் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த புதிய திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மாதம், காலாண்டு, அறையாண்டு மற்றும் ஆண்டுக்கான ப்ரீ பெய்டு ரீச்சார்ஜ் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், நீண்ட நாட்கள் வேலிடிட்டி கொண்ட அசத்தலான இரண்டு புதிய ரீச்சார்ஜ் திட்டங்களை ஜியோ தற்போது அறிமுகம் செய்துள்ளது. ஜியோவில் ஏற்கனவே பல சிறப்பு அம்சங்களுடன் ரீச்சார்ஜ் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய இரண்டு திட்டங்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Budget Smartphones : அக்டோபர் மாதம் விற்பனையில் உள்ள பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்.. பட்டியல் இதோ!
ரீச்சார்ஜ் பிளான்களின் விலையை உயர்த்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள்
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ப்ரீ பெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் பிளான்களின் விலையை அதிரடியாக உயர்த்தின. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதிர்பாரத விதமாக விலை உயர்த்தப்பட்டதால் பயனர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஜியோ நிறுவனம் ரீச்சார்ஜ் பிளான்களின் விலையை உயர்த்தியது மட்டுமன்றி, 5ஜி சேவையை பயன்படுத்தவும் கட்டுப்பாடுகளை விதித்தது. ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்த பயனர்களை இது கோபமூட்டும் விதமாக அமைந்தது.
இதையும் படிங்க : Google Chat : இனி கூகுள் சாட்டில் வீடியோ மெசேஜ் அனுப்பலாம்.. அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்த கூகுள்!
BSNL-க்கு மாற தொடங்கிய மக்கள்
இதன் காரணமாக ஏராளமான பயனர்கள் தங்களின் மொபைல் எண்ணை, அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL-க்கு மாற்ற தொடங்கினர். அதன்படி சாரை சாரையாக மக்கள் BSNL-க்கு மாற தொடங்கினர்.இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகிய ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் மக்களுக்கு தேவையான பல சலுகைகளுடன் கூடிய புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய தொடங்கின. அதுமுதல் பல சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் அதிக நாட்கள் வேலிடிட்டி கொண்ட இரண்டு ப்ரீ பெய்டு ரீச்சார்ஜ் பிளான்களை ஜியோ அறிமுகம் செய்துள்ளது.
இதையும் படிங்க : Android Tricks : ஆண்ட்ராய்டு பயனர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய 5 ட்ரிக்ஸ்.. என்ன என்ன தெரியுமா?
ஜியோ அறிமுகம் செய்துள்ள 2 புதிய பிளான்கள்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.1028 மற்றும் ரூ.1029-க்கும் இரண்டு புதிய ப்ரீ பெய்டு பிளான்களை அறிமுகம் செய்துள்ளது.
ரூ.1028-க்கான பிளான்
ஜியோவின் இந்த ரூ.1028-க்கான பிளான் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 குறுஞ்செய்திகள் அனுப்ப முடியும். டேட்டாவை பொருத்தவரை இந்த திட்டத்திற்கு மொத்தம் 168ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதாவது ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை பயன்படுத்தி ரீச்சார்ஜ் செய்யும் பட்சத்தில் ஸ்விக்கி ஒன் லைட் மெம்பர்ஷிப் இலவசமாக கிடைக்கும். அதுமட்டுமன்றி ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிலவுட் சர்வீஸ் வசதிகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Airtel : இனி மோசடிகள் குறித்து கவலை இல்லை.. ஏர்டெல் வழங்கும் அசத்தல் சேவை.. முற்றிலும் இலவசம்!
ரூ.1029-க்கான பிளான்
ஜியோவின் இந்த ரூ.1029-க்கான பிளான் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 குறுஞ்செய்திகள் அனுப்ப முடியும். டேட்டாவை பொருத்தவரை இந்த திட்டத்திற்கு மொத்தம் 168ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதாவது ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு சிறப்பு சலுகையாக அமேசான் பிரைம் லைட் மெம்பர்ஷிப் வழங்கப்படுகிறது. அதுமட்டுமன்றி இந்த திட்டத்தை பயன்படுத்தி ரீச்சார்ஜ் செய்யும் பட்சத்தில் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிலவுட் சர்வீஸ் வசதிகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.