5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Jio : ஃப்ரீ இன்ஸ்டாலேஷன் .. அதிரடி சலுகையை அறிவித்த ஜியோ.. முழு விவரம் இதோ!

Jio New Offer | ஜியோ தனது ஏர்ஃபைபர் சேவைக்கான புதிய விளம்பரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ ஃப்ரீடம் ஆஃபர் என்ற பெயருடன், ஜியோ நிறுவனம் இப்போது இன்ஸ்டாலேஷன் கட்டணத்தை தள்ளுபடி செய்துள்ளது. புதிய பயனர்களை தன்வசம் ஈர்ப்பதற்காக ஜியோ இந்த சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று ஜியோ தெரிவித்துள்ளது. 

Jio : ஃப்ரீ இன்ஸ்டாலேஷன் .. அதிரடி சலுகையை அறிவித்த ஜியோ.. முழு விவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 27 Jul 2024 17:45 PM

ஜியோ புதிய அறிவிப்பு : சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் ப்ரீ பெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தின. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள், தங்கள் மொபைல் எண்களை ஜியோவில் இருந்து BSNL-க்கு மாற்ற விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்தனர். இந்த நேரத்தை பயன்படுத்திக்கொண்ட BSNL, பல அதிரடி திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இதன் காரணமாக மக்களின் பார்வை BSNL பக்கம் திரும்பியுள்ளது. எப்படியாவது வாடிக்கையாளர்களை மீண்டு தன்வசப்படுத்திக்கொள்ளும் நோக்கில் ஜியோ, பல திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது முக்கிய அறிவிப்பை ஜியோ வெளியிட்டுள்ளது.

புதிய பயனர்களை தன்வசம் ஈர்க்க அறிவிப்பை வெளியிட்ட ஜியோ

ஜியோ தனது ஏர்ஃபைபர் சேவைக்கான புதிய விளம்பரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ ஃப்ரீடம் ஆஃபர் என்ற பெயருடன், ஜியோ நிறுவனம் இப்போது இன்ஸ்டாலேஷன் கட்டணத்தை தள்ளுபடி செய்துள்ளது. புதிய பயனர்களை தன்வசம் ஈர்ப்பதற்காக ஜியோ இந்த சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று ஜியோ தெரிவித்துள்ளது.

ஜியோ ஃப்ரீடம் ஆஃபர் சிறப்பு பலன்கள் என்ன?

ஜியோ ஃப்ரீடம் ஆஃபரின் கீழ் வழங்கப்படும் புதிய ஜியோ ஏர்ஃபைபர் பயனர்களுக்கு, 30% தள்ளுபடி வழங்குகிறது. ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை திட்டத்தில் சேருபவர்களுக்கு, இன்ஸ்டாலேஷன் கட்டணத்தில் ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும்.

இதையும் படிங்க : BSNL Recharge Plan: உங்க கிட்ட ரூ.100 இருக்கா? ஒரு மாதத்திற்கு பிரச்னை இல்ல… பிஎஸ்என்எல் வழங்கும் செம்ம திட்டம்!

இன்ஸ்டாலேஷன் கட்டணம் செலுத்த தேவையில்லை

ஜியோவின் இந்த இலவச இன்ஸ்டாலேஷன் 3 மாதங்கள், 6 மாதங்கள் மற்றும் 12 மாதங்கள் ஆகிய அனைத்து ஜியோ ஏர் ஃபைபர் மற்றும் ஜியோ ஏர் ஃபைபர் பிளஸ் திட்டங்களுக்கும் பொருந்தும். பொதுவாக 3 மாத ஆல் இன் ஒன் திட்டத்தை பெற பயனர்கள் ரூ.3,121 செலுத்த வேண்டும். இதில் திட்டத்திற்கு ரூ.2,121 மற்றும் நிறுவலுக்கு ரூ.1,000 அடங்கும். இந்நிலையில் ஜியோவின் தற்போதைய அறிவிப்பின் படி, பயனர்கள் ரூ.2,121 செலுத்தினால் மட்டும் போது. இலவசமாக இன்ஸ்டாலேஷன் செய்து தரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோவுக்கு BSNL டஃப் கொடுக்கும் நிலையில் அதனை ஈடுகட்டும் விதமாக, ஜியோ பல ஆஃபர்களை வழங்கி வருகிறது. அதன்படி, சமீபத்தில் கூட ஜியோ தனது ரீசார் பிளானின் நாட்களை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Price Decreased : ஐபோன் 14 முதல் 15 ப்ரோ மேக்ஸ் வரை.. அதிரடியாக விலை குறைந்த ஸ்மார்ட்போன்கள்.. முழு விவரம் இதோ!

Latest News