வாட்ஸ்அப் அழைப்பை ரெக்கார்டு செய்வது எப்படி? இதை ஃபாலோ பண்ணுங்க!

Record WhatsApp Calls: இன்றைய காலகட்டத்தில் பலரும் வாட்ஸ்அப் கால் செய்கின்றனர். இந்த அழைப்புகளை ரெக்கார்டு செய்ய முடியும் என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.

வாட்ஸ்அப் அழைப்பை ரெக்கார்டு செய்வது எப்படி? இதை ஃபாலோ பண்ணுங்க!

வாட்ஸ்அப் கால்கள் ரெக்கார்டு

Published: 

20 Nov 2024 12:16 PM

வாட்ஸ்அப் (WhatsApp) முதன்முதலில் 2009 இல் தொடங்கப்பட்டது, காலப்போக்கில், அது பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களை அறிமுகப்படுத்தியது. இன்று கிட்டத்தட்ட 99% மொபைல் பயனர்களால் பயன்படுத்தப்படுகிறது. வேலை நிமித்தம், அரட்டைகள் அல்லது நண்பர்களுடன் சில திட்டமிடுதல் உள்ளிட்டவற்றில் இணைந்திருக்க மிகவும் அவசியமான சமூக வலைதளமாக வாட்ஸ்அப் திகழ்கிறது. ஒருவரின் அன்றாட வேலைகளை எளிதாக்கவும் இந்த சமூக வலைதளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனினும், இந்த அழைப்புகளை ரெக்கார்டு செய்ய முடியும் என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.

அது பற்றி இதில் பார்க்கலாம். முதலில் வாட்ஸ்அப் வேலை செய்யவில்லை எனில் அதனை சரிபார்ப்பது குறித்து பார்க்கலாம்.

வாட்ஸ் அப் வேலை செய்யவில்லையெனில் என்ன செய்வது?

சில நேரங்களில் பிரச்னை ஸ்மார்ட்போனில் இல்லாமல் வாட்ஸ்அப் அப்ளிகேஷனில் கூட இருக்கலாம். ஆகவே வாட்ஸ்அப் அப்ளிகேஷனை டெலிட் செய்து மீண்டும் நிறுவவும். அந்த வாட்ஸ்அப் அப்ளிகேஷன் அப்டேட் செய்யப்பட்டதா? என்பதை செக் செய்துக் கொள்ளவும்.

இதையடுத்து உங்களது ஸ்மார்ட்போனை ரீ-ஸ்டார்ட் செய்யவும். இணையதள வசதியை சரிபார்த்துக் கொள்ளவும். தேவையில்லாத ஆப்ஸ்-களை டெலிட் செய்யவும். அனைத்து வகையான சேவைகளை தொடர, “அலோ ஆல் அப்ளிகேஷன்” என்பதை கிளிக் செய்யவும். உங்களது வாட்ஸ்அப் சிறப்பாக செயல்பட தொடங்கிவிடும்.

இதையும் படிங்க : வீட்டில் WiFi வேகம் குறைகிறதா? இதை செய்தால் ஸ்பீடு அள்ளும்!

வாட்ஸ்அப் கால்கள் ரெக்கார்ட் செய்வது எப்படி?

ஸ்மார்ட்போன் பயனர்கள் வழக்கமான அழைப்புகளைப் போலவே வாட்ஸ்அப் அழைப்புகளைப் பதிவு செய்வதற்கான வழியைத் தேடுகிறார்கள். அவர்களுக்கு இன்றளவும் ஓர் சந்தேகம் உள்ளது. அது, வாட்ஸ்அப்பில் அழைப்புகளை பதிவு செய்ய முடியுமா என்பது ஆகும். இந்தக் கேள்விக்கு பதிலை பார்க்கலாம்.

முதலில், வாட்ஸ்அப்பில் அழைப்புகளை பதிவு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அம்சம் எதுவும் இல்லை என்பதே உண்மை.
அதாவது, கால் ரெக்கார்டிங் விருப்பத்தை வழங்கவில்லை, ஆனால் மூன்றாம் தரப்பு பயன்பாடுகளைப் பயன்படுத்தி அழைப்புகளைப் பதிவுசெய்ய முடியும்.

பதிவு செய்ய தேவையான செயலிகள்

இதில் மொத்தம் 3 செயலிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த செயலிகள் க்யூப் ஏசிஆர் (Cube ACR), சலிஸ்டிரெயில் (Salestrail) மற்றும் ஏ.சி.ஆர் கால் ரெக்கார்டர் (ACR Call Recorder) ஆகும்.
இதில் பரவலாக ஏ.சி.ஆர் கால் ரெக்கார்டர் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இது மிகவும் எளிய பயன்பாடாக உள்ளது.
இரண்டாவதாக உள்ள சலிஸ்டிரெயில் பிரீமியம் அம்சத்துடன் இந்தச் சேவையை வழங்குகிறது. அதேபோல் க்யூப் ஏசிஆர் மூலமாகவும் எளிதில் வாட்ஸ் அப் கால்களை பதிவு செய்ய முடியும்.

வாட்ஸ்அப் கால்களை பதிவு செய்வது எப்படி?

  1. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து க்யூப் ஏசிஆர் (Cube ACR), சலிஸ்டிரெயில் (Salestrail) அல்லது ஏ.சி. ஆர் (ACR) கால் ரெக்கார்டர் போன்ற செயலிகளை பதிவிறக்கவும்.
  2. இதனை தங்களது ஸ்மார்ட்போனில் நிறுவிய பின், பயன்பாட்டிற்கு தேவையான அனுமதிகளை வழங்கவும்.
  3. சில பயன்பாடுகளில், நீங்கள் மேனுவலாக அழைப்புப் பதிவை இயக்க வேண்டியிருக்கும்.
  4. செயலிகள் தானாகவே வாட்ஸ்அப் அழைப்பு தொடங்கியவுடன் பதிவுசெய்யத் தொடங்கும்.
  5. அழைப்பு முடிந்ததும், ஆப்ஸில் உள்ள பதிவை நீங்கள் கேட்கலாம்.

இதையும் படிங்க : Aadhaar : உங்கள் ஆதார் அட்டையை வேறு யாரேனும் பயன்படுத்துகிறார்களா?.. தெரிந்துக்கொள்வது எப்படி?

இன்ஸ்டாவில் வைரலாகும் நிமிர் பட நடிகை நமீதா பிரமோத் போட்டோஸ்!
நடிகை நஸ்ரியா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
குழந்தையின் வெற்றிக்கு தாய் செய்ய வேண்டிய விஷயங்கள்!
நடிகை ஷாலினி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!