5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

2025ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்: தமிழ்நாட்டில் தெரியுமா?

Solar Eclipse in 2025: 2025ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. வரும் ஆண்டில் இரு முறை சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதில் முதல் சூரிய கிரகணம்..

2025ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்: தமிழ்நாட்டில் தெரியுமா?
சூரிய கிரகணம் (கோப்புக் காட்சி)
jayakrishnan-ramakrishnan
Jayakrishnan Ramakrishnan | Published: 02 Dec 2024 18:06 PM

2025 முதல் சூரிய கிரகணம்: பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அப்போது, சூரியனின் ஒளி பூமியை அடைவதை பகுதி அல்லது முழுவதுமாக சில மணி நேரங்கள் தடுக்கப்படுகிறது. இந்த நிலையில், 2025ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. வரும் ஆண்டில் இரு முறை சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதில் முதல் சூரிய கிரகணம் மார்ச் 29, 2025ஆம் ஆண்டு நிகழ்கிறது. அடுத்த சூரிய கிரகணம் செப்டம்பர் 21ஆம் தேதி நிகழ்கிறது. இந்த இரண்டு கிரகணங்களும் இந்தியாவில் தெரியுமா? இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

இதையும் படிங்க : ‘ஷாம்பெயின் ஆஃப் டீ’தெரியுமா? ஊட்டிக்கு இப்படி ஓர் சிறப்பா?

2025 முதல் சூரிய கிரகணம்

2025ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மார்ச் 29ஆம் தேதி, காலை 8.50 மணி முதல் மதியம் 12.43 வரை நிகழும். இந்தக் கிரகணத்தை ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அட்லாண்டிக் மற்றும் ஆர்டிக் பிரதேசங்களில் பார்க்கலாம்.

இரண்டாவது சூரிய கிரகணம்

இரண்டாவது சூரிய கிரகணத்தை பொறுத்தவரை செப்.21 ஆம் தேதி மாலை 5.29 மணிக்கு தொடங்கி இரவு 9.53 வரை காணப்படும்.
இந்தக் கிரகணம் ஆஸ்திரேலியா, அண்டார்டிகா, பசிபிக் சமுத்திரம், அட்லாண்டிக் உள்ளிட்ட பகுதிகளில் தென்படும்.

பகுதிநேர நிகழ்வு- இந்தியாவில் தெரியுமா?

இந்த இரண்டு சூரிய கிரகண நிகழ்வுகளும் பகுதி நேரமாக நிகழும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நார்வே, ஸ்வீடன், பின்லாந்து மற்றும் ரஷ்யா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த சூரிய கிரகணங்கள் தெரியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பெர்முடா, போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா, மொராக்கோ, ஸ்பெயின், கிரீன்லாந்து, அயர்லாந்து, பிரான்ஸ், ஐல் ஆஃப் மேன், யுனைடெட் கிங்டம், ஐஸ்லாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு தெரியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மாணவர் டூ முதியவர் வரை.. பல கோடிகள் இழப்பு.. ‘டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி’யில் தப்பிப்பது எப்படி?

Latest News