5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

நிரந்தரமாக மூடப்படும் “கூ”.. நிதி நெருக்கடி தான் காரணம் என நிறுவனர்கள் விளக்கம்!

Koo shut down | இந்தியாவின் ட்விட்டர் என அழைக்கப்படும் "கூ" நிறுவனம் நிரந்தரமாக மூடப்படுவதாக அதன் நிறுவனர்கள் தெரிவித்துள்ளனர். நிதி நெருக்கடி மற்றும் பங்குதாரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது ஆகிய காரணங்களால் நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நிரந்தரமாக மூடப்படும் “கூ”.. நிதி நெருக்கடி தான் காரணம் என நிறுவனர்கள் விளக்கம்!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 04 Jul 2024 19:03 PM

கூ சமூக ஊடகம் : இந்தியாவில் ட்விட்டருக்கு போட்டியாக இருந்த சமூக ஊடக தளமான “கூ” விரைவில் மூடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பங்குதாரர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி மற்றும் தொழில்நுட்ப செலவுகளை சமாளிக்க முடியாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதன் நிறுவனர்களான அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மயங்க் பிடவட்கா ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். “கூ” சமூக ஊடகம் 2.1 மில்லியன் தினசரி பயனர்கள் மற்றும் 10 மில்லியன் மாதத்திர பயனர்களையும் கொண்டிருந்தது. “கூ” மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் நிதி பற்றாக்குறை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

“கூ” நிறுவனத்தை மூட இதுதான் காரணம், நிறுவனர்கள் விளக்கம்

“கூ” நிறுவனம் மூடப்படுவது குறித்து அதன் நிறுவனர்களான அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மயங்க் பிடவட்கா ஆகியோர் கூறியிருப்பதாவது, பல பெரிய நிறுவனங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுடன் இணைந்து நாங்கள் ஆய்வு மேற்கொண்டதில், எங்களின் “கூ” செயலி நாங்கள் விரும்பிய முடிவை தரவில்லை. அதுமட்டுமன்றி நிறுவனத்திற்கான பராமரிப்பு செலவும் அதிகமாக இருப்பதால், நிறுவனத்தை மூட வேண்டிய கடினமான முடிவை நாங்கள் எடுத்துள்ளோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கும், “கூ” சமூக ஊடகத்தின் பயனர்களுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : OTT : மாதாந்திர பிளான்களின் விலையை உயர்த்திய Netflix.. அதிர்ச்சியில் பயனர்கள்.. எவ்வளவு தெரியுமா?

ட்விட்டருக்கு இணையாக களமிறங்கிய “கூ”

இந்திய மக்களிடையே ட்விட்டர் பயன்பாடு அதிகமாக உள்ளது. சாதரன குடிமக்கள் முதல் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ட்விட்டர் ஊடகத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ட்விட்டருக்கு இணையாக கடந்த 2020 ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட சமூக உடகம்தான் “கூ”. நிறுவனம் தொடங்கப்பட்ட மிக குறுகிய காலத்திலே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற கூ, மில்லியன் கணக்கில் பயனர்களை கொண்டு செய்ல்பட்டது.

இதையும் படிங்க : Whatsapp : 66 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்.. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட வாட்ஸ்அப்!

ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட “கூ”?

கடந்த ஏப்ரல் தனது பணியாளர்களை படிப்படியாக குறைக்க தொடங்கியது கூ நிறுவனம். இருப்பினும் பயனர்களின் எண்ணிக்கை சுமார் 1 கோடியை தொட்டு சாதனை படைத்தது. இந்நிலையில் நிதி பற்றக்குறையின் காரணமாக ஊழியர்களுக்கு கூட சம்பளம் கொடுத்த முடியாத சூழல் நிலவுவதால் நிறுவனத்தை மூடுவதாக “கூ” திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News